Sunday, 13 May 2018

நாமக்கல் ஆஞ்சநேயரின் தனி சிறப்புகள்.!

நாமக்கல் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 18 அடி உயரத்தில் மேல் விதானம் இன்றி இந்த கோயில் அமைந்துள்ளது தனி சிறப்பாகும். நரசிம்ம சுவாமி சன்னதியை நோக்கி கைகூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளது நாமக்கல்லில் மட்டும் தான் என்பதால் இந்த கோயில் மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. நாள்தோறும் ஆஞ்சநேயர் வளர்கிறார் என்பது ஐதீகமாக உள்ளது. இதற்காகவே மேல் விதானம் கட்டப்படாமல் இருக்கிறது. ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் இங்கு நடைபெறுகிறது. வடமாலை அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்து பக்தர்கள் குறிப்பிட்ட நாளில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் இருந்தும் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உதவி ஆணையரால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் சிறப்பு அபிஷேகங்கள் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்று வருகிறது. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய 3 மாதமும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்விக்கப்படுகிறது. பங்குனி தேர்திருவிழா, ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்றவை கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும் பண்டிகைகளாகும்.

தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சுமார் 1 லட்சம் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அன்றைய தினம் நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டது போல காட்சி அளிக்கும். ஆஞ்சநேயர் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் காலை 6.30 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். நாமக்கல் பகுதி மக்கள் எந்த நல்லகாரியத்தை தொடங்கினாலும் ஆஞ்சநேயரை வணங்கிவிட்டு தொடங்குவதைதான் காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர். நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க கடல் கடந்து கூட மக்கள் வந்து செல்கின்றனர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment