சிறுமளஞ்சி சுடலையாண்டவர் ஆன்மீக குழு
Tuesday, 21 July 2020
சாம்பிராணியின் வகைகளும் அதனை தூபம் போடுவதால் உண்டாகும் பலன்கள்…!!
உடலில் விபூதி எந்தெந்த இடங்களில் அணிய வேண்டும்?
Monday, 20 July 2020
அமாசோம விரதம் 20.7.2020 திங்கட்கிழமை.!!
Sunday, 19 July 2020
தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றத்திற்கான சாபம் நீங்க பரிகாரம்.!!
எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள். அதன் விளைவாக தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
துர்கை அம்மனுக்கு இதை செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாக தொடர்கதையாக வருவது. ஒருவருக்கு இழைக்கபட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.
அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கபட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும். அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது. 2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதை செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்கு சென்று சிகப்பு நிறத்தாலான பட்டு துணி ஒன்றை அம்மனுக்கு சாற்றி, சிகப்பு தாமரை பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து அந்த மாலையை அம்மனுக்கு சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்...
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴
Saturday, 18 July 2020
ஒரு உன்னதமான நிகழ்வு.!!
முன்னொரு சமயம், குருவாயூர் கோவிலில் பூஜை செய்து வந்த நம்பூதிரி,அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது.
கோவிலில் பூஜைகள் தடை இல்லாமல் நடக்க வேண்டும் என்பதால், சிறு பாலகனான தனது மகனிடம் கோவிலைக் கவனித்துக் கொள்ளும்படியும், பூஜைகளைத் தடையின்றி செய்ய வேண்டும் என்றும், குறித்த நேரத்தில் நைவேத்யம் செய்யுமாறும் கூறிச் சென்றார்.
அவனும் அரிசியை சமைத்து அப்பனுக்கு நைவேத்யம் செய்து, அப்பனிடம், “கண்ணா! சாப்பிடு.” என்று கூறினான்.
கண்ணன் அசையவில்லை. உடனே அவன், வெறும் சாதத்தை எவ்வாறு கண்ணன் சாப்பிடுவான், என நினைத்து, அருகில் உள்ள வீட்டில் இருந்து கொஞ்சம் தயிரும், வடுமாங்காயும் வாங்கி வந்தான்.
தயிரை சாதத்தில் கலக்கி, உப்பு மாங்காயை வைத்தான். அப்பொழுதும் கண்ணன் சாப்பிடவில்லை.
“சாப்பிடு கண்ணா!” என்று கெஞ்சினான்.
சாதம் அப்படியே இருந்தது.
“என்னுடைய அப்பா வந்தால், உனக்கு சாப்பிட ஒன்றும் தரவில்லையென்று திட்டுவார், சாப்பிடு!” என்று சொல்லிக் கெஞ்சி அழுதான்.
குழந்தையின் அழுகையைப் பொறுக்க முடியாத கண்ணன், காட்சி தந்தான்.
அன்னத்தை உண்டான்.
குழந்தையும் சந்தோஷமாக, காலித் தட்டுடன் வெளியே வந்தான். பொதுவாக, நைவேத்யத்தை கோவிலுள்ள பிஷாரடிக்குக் கொடுப்பது வழக்கம். காலித் தட்டுடன் வெளியே வந்த அவனைக் கண்ட அவருக்கு மிகுந்த கோபம் வந்தது.
“சாதம் எங்கே?” என்று கேட்டார்.
குழந்தையும், “கண்ணன் சாப்பிட்டு விட்டான்” என்று சொன்னான்.
நம்பூதிரி வந்ததும், பிஷாரடி, “நைவேத்தியத்தை உங்கள் மகன் சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டதாகச் சொல்கிறான்” என்று சொன்னார்.
நம்பூதிரி, “நைவேத்தியத்தை என்ன செய்தாய்?”என்றுகேட்டார். மறுபடியும் குழந்தை, “கண்ணன் நேரிலேயே வந்து சாப்பிட்டுவிட்டான்” என்று சொன்னான்.
அப்போது அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள், தங்கள் வீட்டிலிருந்து தயிரும், மாங்காயும் அவன் வாங்கிச் சென்றதைச் சொன்னார்கள்.
நம்பூதிரி மிகுந்த கோபத்துடன், “தினமும் பூஜை செய்யும் எனக்குக் காட்சி தராமல்,
கண்ணன் உனக்குக் காட்சி தந்து உணவை உண்டாரா? உன்னால் வெறும் சாதத்தைத் தின்ன முடியாது என்று தயிரும் மாங்காயும் வைத்து சாப்பிட்டுவிட்டு, கண்ணன் சாப்பிட்டு விட்டான் என்று பொய் சொல்கிறாயா?” என்று அடித்தார்.
குழந்தை இடத்தைவிட்டு நகரவில்லை.
குழந்தையை அடிப்பதைக் கண்ணனால் பொறுக்க முடியவில்லை.
நம்பூதிரி மீண்டும் அடிக்கக் கையை ஓங்கியபோது, “நான்தான் உண்டேன், குழந்தை குற்றமற்றவன்.” என்று சன்னிதியிலிருந்து அசரீரி ஒலித்தது. கூடியிருந்த அனைவரும் அதிசயித்தனர்.
நம்பூதிரி, கண்களில் நீர் வழிய, “என் மகனுக்குக் காட்சி தந்து, அவன் தந்த உணவையும் உண்டாயே!! என்னே உன் கருணை! என் மகன் பாக்யசாலி!” என்று கூறித் தன் மகனை வாரி அணைத்துக் கொண்டார்.
கிருஷ்ணா முகுந்தா முராரே….
குருவாயூரப்பனே உன் திருவடிகளே சரணம்…
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔
🎪 *ஓம் நமசிவாய* 🎪
🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
_ என்றும் இறைப்பணியில்_
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
🕉️ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ 🕉️
🙆🏻♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻♂️
🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴