Saturday, 16 May 2020

பிரதோஷம் பத்து.!!

1. த்ரியம்பகேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ளது. இந்த லிங்க ஆவுடையாரில், பிரம்ம, விஷ்ணு, ருத்ரர் மூவரும் பூஜை செய்த தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது. 

2. காசியில், ஜோதிர்லிங்கமாக விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். தினமும் இரவில் வில்வதளங்களில் சந்தனத்தால் ராமநாமத்தை எழுதி விஸ்வநாதப் பெருமானுக்கு ஏழு பண்டாக்கள் பூஜை செய்யும் சப்தரிஷி பூஜை புகழ் பெற்றது. 

3. குஜராத், வீராவலியில் சோமநாதம் எனும் ஜோதிர்லிங்கத் தலம் உள்ளது. சந்திரனின் (சோமன்) நோயைப் போக்கியவர் இந்த ஈசன். அதனாலேயே சோமேஸ்வரர். இந்திரன், சூரியன், கிருஷ்ணன், ஜனமேஜயன், பாண்டவர் என பலரும் இவரை வணங்கி பேறு பெற்றுள்ளனர்.

4. மத்தியப் பிரதேசம், உஜ்ஜயினியில் மகாகாளேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலத்தில் மகாகாளேஸ்வரராக ஈசன் திகழ்கிறார். மகாகாளி பூஜித்த இந்த ஈசனுக்கு செய்யப்படும் விபூதிக்காப்பும், பஞ்சகவ்ய அபிஷேகமும் பெயர் பெற்றவை.

5. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஓங்காரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். பிரணவமான ஓம் எனும் மந்திரம் சதாசர்வகாலமும் இந்த ஈசனை துதித்துக் கொண்டிருப்பதாலேயே அவர் இப்பெயர் பெற்றார்.

6. உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ளது கேதாரேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத்தலம். இமயமலைமீது கங்கைநதிபாயும் பனி படர்ந்த சூழலில், பாறை வடிவில் அருள்கிறார் கேதாரீஸ்வரர். இத்தல தீர்த்தங்களாக கங்கையும், கௌரிகுண்டமும் விளங்குகின்றன.

7. மஹாராஷ்டிரா, எல்லோராவிற்கு அருகில் உள்ளது குஷ்மேஸ்வரம் எனும் ஜோதிர்லிங்கத் தலம். தஞ்சை பெரிய கோயில் விமானம் போன்று கலையழகு கொண்ட கோயில் இது. கருவறை நந்திக்கு முன் ஆமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 8. ஆந்திரம் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனம் எனும் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது. திருமகள் பிரதிஷ்டை செய்து வணங்கிய லிங்கம். ஆகவே இத்தலம் ஸ்ரீசைலம்; மல்லிகை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் மல்லிகார்ஜுனம். காசியைப் போன்றே கருவறைக்கே சென்று மல்லிகார்ஜுனரை 
வழிபடலாம்.

9. ஔரங்காபாத்திற்கு அருகே உள்ளது வைத்யயநாத் ஜோதிர்லிங்கத்தலம். அசுரர்களை வெல்ல, முப்பெருந்தேவியர் பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம், வைத்யநாதர். இவரை வழிபட்டால் வெற்றி எளிதாகும்.

10. ராமேஸ்வரம், ஒரு ஜோதிர்லிங்கத் தலம். ராமபிரானின் பாவத்தைப் போக்கியவர் இத்தல ராமநாதர். கோயிலின் பிராகாரமும், சுதையினாலான மிகப் பெரிய நந்தியும் உலகப்புகழ் பெற்றவை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

No comments:

Post a Comment