இம்மையில் நன்மை தருவார் கோவில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தென்மேற்கு திசையில் இருக்கிறது,
பூலோக கைலாயம் என்றழைக்கப்படும்இத்தலம், அற்புதங்கள் நிறைந்த தலமாகதிகழ்கிறது. பத்து இலைகளுடன் கூடியதசதள வில்வ மரம் இந்த ஆலயத்தின் தலவிருட்சமாகும்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியை, குருதோஷம் இருப்பவர்கள் வழிபாடுசெய்கிறார்கள். இந்த ஆலயத்தில் அறுபதுமற்றும் எண்பதாம் வயதில் உள்ளவர்கள்திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள்அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்தஆலயத்தின் சில சிறப்பு தகவல்களைஇங்கே பார்க்கலாம்.
அதிசய சிவலிங்கம்
எந்தக் கோவிலுக்கு போனாலும்சிவலிங்கத்தின் முன் பகுதியையே நாம்தரிசிப்போம். ஆனால், இந்தக் கோவிலில்மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனமும்நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம்உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜைசெய்ய வேண்டுமென்பது நியதி. இங்கேசிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்துலிங்க பூஜை செய் கிறார். எனவே,லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கிஇருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம்கிடைக்கிறது.
மீனாட்சியம்மன் கோவிலில் சிவனுக்குபட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன்-அம்பாள் இருவரும் இங்குஎழுந்தருள்வார்கள். இவ்விருவரையும்மூலஸ்தானத்தை நோக்கி வைத்து,இம்மையிலும் நன்மை தருவார்,சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரேசமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும்.இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்தியசிவன், வல்லப சித்தராக வந்து கல்யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர்பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம்காட்டி, இடக்கையில் சாம்பிராணிகுங்கிலியம் வைத்து காட்சி தருகிறார்.
கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மனஅமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமிமற்றும் திங்கட்கிழமைகளில் சாம்பிராணிபதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை)காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்துவேண்டிக்கொள்கின்றனர். தை மற்றும்சித்திரை மாதத்தில் வரும் பவுா்ணமி மற்றும்ஆடி அமாவாசை நாட்களில் இவருக்குவிசேஷ பூஜை நடக்கிறது.
கல் ஸ்ரீசக்கரம்
பொதுவாக செம்பில் தான் ஸ்ரீசக்கரம்வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால்,இங்கு கல் ஸ்ரீசக்கரம் இருப்பதுவித்தியாசமான அமைப்பு.
மத்தியபுரி நாயகி சன்னிதிக்கு பின்புறம்,அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சிதருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள்இவருக்கு பாலாபிஷேகம் செய்து, பாவாடை,தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்துவழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன்அமையும் என்பது நம்பிக்கை.
வருடத்திற்கு 54 அபிஷேகம் இங்கு...
இக்கோவிலில் பூஜையின் போது அர்ச்சகர்,சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில்நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார்.இங்கு லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம்நடக்கிறது.
தனது முந்தைய பிறவியின் தெய்வீகஉணர்வின் காரணமாக, யோகத்தின்கொள்கைகளுக்கு இயற்கையாகக்கவரப்படுகிறான். அத்தகைய ஆர்வமுடையஆன்மீகவாதி, எப்பொழுதுமேசாத்திரங்களின் சடங்குக்கொள்கைகளிலிருந்தும் உயர்ந்துநிற்கிறான்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment