பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம். இதை வடமொழியில் துவஜஸ்தம்பம் என்கின்றனர்.
இது உயரமாக இருக்கும். நந்தி இதற்குமுன்போ பின்போ அமைக்கப்பட்டிருக்கும்.கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன ஒரேநேர் கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும்.
கொடிமரம் நேராக உள்ளது போல் உடல்நேராக இருக்க வேண்டும் என்பது சாத்திரம்.இதன் உயரம் மூலவரின் விமானத்திற்குச்சமமாகவோ அல்லது மண்டபங்களின் மேல்தளத்திற்குச் சமமாகவோ இருக்கும்.இதன்அதி தேவதை சிவன். அதுவே சிவனைக்குறிப்பதாக உள்ளது.
இது மூன்று பாகமாகவுள்ளது. முதல் பாகம்சதுரமானது. அடிப்பகுதி இதுபிரம்மாவையும், இரண்டாவது பாகம் எண்கோணவேதி அமைப்பு. இதுவிஷ்ணுவையும், மூன்றாவது பாகம் உருளைபோன்ற தடித்த உயரமான மேல் பகுதிருத்ரனையும் குறிக்கும் என்கிறதுஆகமங்கள்.
உச்சியில் உள்ள மூன்று குறுக்குக்கட்டைகள்இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியைக்குறிக்கின்றன. அதிலுள்ள இருகுறுக்குத்தண்டுகள் சூரிய, சந்திரனைக்குறிக்கின்றன.
விழாக்காலங்களில் கொடி ஏற்றம்நடைபெறும்.அதில் கொடிக்கயிறுஅனுக்கிரக சக்தியையும், கொடி வாயுவையும், கொடியில் வரையப்பட்டுள்ளநந்தி, நந்தி பகவானையும் குறிக்கிறது.
இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்துவணங்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்கநமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்கநமஸ்காரமும் செய்யலாம். அஷ்டாங்கம்என்பது தலை, கைகள், காதுகள்,முழங்கால்கள் ஆகிய ஒன்பதும்தரையில்படுமாறு விழுந்து வணங்குதல்,பஞ்சாங்கம் என்பது கைகள், முழங்கால்கள்,தலை ஆகிய ஐந்தும் தரையில் படுமாறுகுனிந்து வணங்குதல்.
கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்துவணங்க வேண்டும்.அதற்குக் குறையக்கூடாது. கிழக்கு நோக்கிய சந்நிதி எனில்வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டிவணங்க வேண்டும். வடக்கில் சந்நிதி எனில்கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment