Sunday, 12 May 2019

சப்தகன்னியர்கள் யார்? அவர்கள் வரலாறு தெரியுமா?

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.


கி.பி 510 ஆம் ஆண்டில்சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்றுஇருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும்தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள்எனவும் அழைக்கப்படுகின்றனர். 

சப்தகன்னியர்கள் பிறந்த கதை
அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களைஅழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில்பிறக்காமலும், ஆண்  பெண்இணைவில் பிறக்காமலும், அம்பிகைஎனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்துஉருவானவர்களே இந்த சப்தகன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டிமுதலான ஏழு கன்னிகைகள் சப்தமாதர்கள் என்றுஅழைக்கப்படுகின்றனர்.
நம் உடலோடு தொடர்புகொண்டுள்ளவர்கள். சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும்தொடர்பு உள்ளதாக புராணங்கள்தெரிவிக்கின்றன. அவை : பிராம்மிதோலுக்கு தலைவி. மகேஸ்வரிநிணத்திற்கு தலைவி. கவுமாரிரத்தத்திற்கு தலைவி. நாராயணிசீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின்தெய்வம். இந்திராணி சதையின்தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.
ப்ராம்மி
அம்பிகையின் முகத்தில் இருந்துஉருவானவள் பிராம்மி. மேற்குதிசையின் அதிபதி.கல்விக்குஅதிபதியான சரஸ்வதி என்றகலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த்தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம்பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில்ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம்காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்துஅன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். 
மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம்தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளதுகாயத்ரி மந்திரத்தை படிக்கும்  மாணவர்கள்    தினமும் ஜபித்துவந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாகசாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணிமுதலானவற்றிற்கு தேர்வுஎழுதுபவர்கள் தினமும் 108 முறைமேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றிநிச்சயம்.
வாராஹி
அம்பிகையின் பிருஷ்டம்பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளைவெளியேற்றுவதும்,உடம்பைத்தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடுகாட்சியளிப்பவள். இவள் அம்பிகையின்முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின்அம்சமானது விஷ்ணுவின்அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்றுஅம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்தகன்னிகைகளில் பெரிதும்வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்டஇவள் பக்தர்களின் துன்பங்களைதாங்கிக் காப்பவள். பிரளயத்தில்இருந்து உலகை மீட்டவளாகச்சொல்லப்படுகின்றாள். எருமையைவாகனமாக உடையவள்.
கலப்பை, உலக்கை ஆகியவற்றைப்பின்னிரு கரங்களில் தாங்கிஅபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவிஇவளே. தண்டினி என்ற பெயருடன்சிம்ஹ வாஹினியாய்க் காட்சிகொடுப்பாள். இவளை வணங்குவோர்வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராதபகைகள் தீரும்.
மகேஸ்வரி
அம்பிகையின் தோளில் இருந்துஉருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன்இவளது சக்தியால்தான் சம்ஹாரமேசெய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடாமகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்குகரங்களுடன் இருப்பாள். தூயவெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம்திசையை நிர்வகித்து வருபவள்.
இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப்போக்கி சாந்தத்தை அளிப்பாள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாகபோற்றப்படுகிறாள்.
இந்திராணி
அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்துதோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களைகூந்தலில் சூடியவள். யானை இவளதுவாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்றபெண் பிறப்புறுப்புதான் காரணமாகஇருக்கிறது. தன்னைவழிபடுபவர்களின் உயிரைப்பேணுவதும், அவர்களுக்கு நல்லவாழ்க்கைத்துணையை அமைத்துத்தருவதிலும், மிகவும் தலைசிறந்தஅதேசமயம் முறையான காமசுகத்தைத்தருவதும் இவளே!. மணமாகாதஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளைவழிபட்டால், மிகப்பொருத்தமானகணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்னமகுடம் தரித்தவள்பொன்னிற மேனிஉடையவள்நாற்கரத்தினள்சக்திஆயுதமும்வஜ்ராயுதமும் தாங்கிஅபயகரம் காட்டுவாள்சத்ரு பயம்போக்குபவள்மாகேந்திரி என்றபெயரையும் கொண்டவள்.

கௌமாரி

கவுமாரிகவுமாரன் என்றால் குமரன்குமரன் என்றால் முருகக்கடவுள்ஈசனும்உமையாலும் அழிக்கஇயலாதவர்களை அழித்தவர்தான்குமரக்கடவுள் எனப்படும்முருகக்கடவுள்முருகனின் அம்சமேகவுமாரி.

இவளுக்கு சஷ்டிதேவசேனா என்றவேறு பெயர்களும் உண்டுமயில்வாகனத்தில் வருபவள்அஷ்டதிக்கிற்கும் அதிபதி இவளேகடலின்வயிறு கிழியுமாறு வேற்படையைச்செலுத்திய சக்தி இவள்இவளைவழிபட்டால்குழந்தைச் செல்வம்உண்டாகும்இளமையைத் தருபவர்

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்துபிறந்தவள் வைஷ்ணவிஇவள்விஷ்ணுவின் அம்சம்கருடனைவாகனமாக கொண்டவள்வளமானவாழ்வு தருபவர்சகலசவுபாக்கியங்கள்செல்வ வளம்அனைத்தையும் தருபவளேவைஷ்ணவிகுறிப்பாக தங்கம்அளவின்றி கிடைத்திட வைஷ்ணவிவழிபாடு மிக அவசியமாகும்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்துதோன்றிய பத்திரகாளியானவள்தனதுகோரமான முகத்தை மாற்றிசாமுண்டியாக ஆனவள்இவள் தனதுஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன்என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள்பதினாறு விதமானஆயுதங்கள்மூன்று கண்கள்செந்நிறம்யானைத் தோலால் ஆனஆடையை அணிந்திருப்பவள்சப்தகன்னிகைகளில் முதலில்தோன்றியவள் இவளேசப்தகன்னிகைகளில் சர்வ சக்திகளையும்கொண்டிருப்பவள்மனிதர்களுக்குமட்டுமல்லதேவர்களுக்கே வரங்களைஅருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக்காப்பதோடுநமக்குத் தேவையானசகலபலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத்தருவாள்இனி வேறுவழியில்லைஎன்ற சூழ்நிலை ஏற்படும்போது,இவளை அழைத்தால்புதுப்புதுயுக்திகளைக் காட்டுவதோடு,முடியாததையும் முடித்துவைப்பாள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

1 comment: