Friday, 30 November 2018

அமாவாசை அன்று - இதை செய்வதால் தோஷங்கள் மறையும்.!!

அமாவாசை என்றதும் பிதுர் தர்ப்பணத்திற்கு அடுத்து அனைவருக்கும் நினைவிற்கு வருவது பூசணிக்காய் தான். வீட்டில்,தொழில்  நடத்தும் இடங்களில் திருஷ்டி கழியஅமாவாசை அன்று பூசணிக்காயை உடைப்பது வழக்கம். அதன் தாத்பரியம் பற்றி தெரிந்துக் கொள்வோமா ?

கூச்மாண்டன் என்ற அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் வழக்கம் போல், திருமாலை சரணடைந்தார்கள். தங்கள் நிலைமையை சொல்லி வைகுண்டவாசனிடம் கதறியழுதனர்.
அசுரனை வதம் செய்யம் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த நாராயணன் அரக்கனுடன் போருக்கு  சென்றார். வந்திருப்பது இறைவன் என்று தெரிந்தும், கூச்மாண்டனும் ஆணவத்தால்  சண்டைக்கு தயாரானான்.

யுத்தத்தின் இறுதியில் திருமாலின் கரத்தால் கொல்லப்பட்டு,வேர் அறுந்த மரம் போல் விழுந்தான்.இறக்கும் தருவாயில், கூச்மாண்டன்,“வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும்” என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.
இறைவனும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க,“நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.”என்று யாசித்தான் அரக்கன்.
“இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?” என்று இறைவன் கேட்க, “பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்”.என்று வேண்டினான் கூச்மாண்டன்.
இறைவனும் மனம் இரங்கி, “சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.”என்று வரம் அருளினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment