Sunday, 28 October 2018

வீட்டில் விளக்கேற்றி வழிபட ஏற்ற நேரம் எது?

அதிகாலை 4:30 - 6:00 மணியை 'பிரம்ம முகூர்த்தம்' என சொல்வர். நீராடி வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

அரோகரா' என்ற கோஷத்தின் பொருள் என்ன?

'ஹர' என்றால் 'எனது பாவத்தை மன்னித்து அருள்புரிவாயாக' எனப் பொருள். அதையே அடுக்குத்தொடராக வேகமாக சொல்லும் போது 'ஹரோஹர' என வரும். அதுவே மருவி 'அரோகரா' என்றானது.

பாலாலயம் என்றால் என்ன?

பழைய கோயிலை புதுப்பிக்கும் போது, சுவாமி சிலைகளை வேறொரு சிறிய கோயிலில் வைத்து பூஜை செய்வர். இவ்வாறு மாற்றி வைக்கும் புதிய கோயிலுக்கு பாலாலயம் எனப்பெயர்.

ஈசான்ய மூலை என்பது என்ன? அதில் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு திசைக்கும் ஒருதேவர் அதிபதியாக இருக்கிறார். வடகிழக்கின் அதிபதி ஈசானர். இவரின் பெயரால் வடகிழக்கை ஈசான்ய மூலை என்பர். இங்கு பூமிபூஜை செய்தல், முகூர்த்தக்கால் நடுதல், பூஜையறை அமைத்தல் நன்மையளிக்கும்.

இருள் தீய சக்தியாக கருதப்படுகிறதே... உண்மையா? 

இல்லை. இருளைப் பயன்படுத்தி பிறருக்கு தீங்கு செய்பவர்களே தீயசக்திகள். பகல் சிவனாகவும், இரவு பார்வதியாகவும் கருதப்படுகிறது. நவராத்திரி, சிவராத்திரி விழாக்கள் இருளில் தான் கொண்டாடப்படுகிறது.

பூஜையறையின் கதவில் மணிகள் வைப்பது சரியா?

சரி. இதற்கு 'மணிக்கதவம்' எனப் பெயர். கருவறையின் கதவுகளில் மணிகள் இருப்பதைக் காணலாம். இதன் ஒலியால் வீட்டில் தீயசக்திகள் அண்டாது.

ஜீவசமாதி என்கிறார்களே....உயிருடன் இருக்க முடியுமா?

பசி, தாகம், துாக்கம், நோய் என உணர்வுகளில் இருந்து உயிர் விடுபடும் நிலை இறப்பு. தவவலிமையால் சில மகான்கள் உடல், மனதைக் கட்டுப்படுத்தி உயிருடன்இருக்கும் போதே உணர்வு நிலையில் இருந்து விடுபடுவர். இவர்களின் உயிர் எப்போது உடலை விட்டு நீங்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த அருளாளர்கள் இருக்குமிடத்தை 'ஜீவசமாதி' என்பர். இவர்களைக் கடவுளாகக் கருதி வழிபடுவர். 

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தை வீட்டில் தெளிக்கலாமா?

தாராளமாகத் தெளிக்கலாம். கங்கை போல ராமேஸ்வர தீர்த்தமும் புனிதமானதே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

No comments:

Post a Comment