திருப்பந்துறை நாச்சியார் கோயில் பூந்தோட்டத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது, ஈசன் சிவானந்தேஸ்வரர். இறைவி மங்களாம்பிகை. சம்பந்தர், மாணிக்கவாசகர் பாடிய தலம். ஈழத்திலிருந்து வந்த பெளத்தர்கள் சமய வாதம் புரிந்த பொழுது அரசனின் ஊமைப் பெண் உடனிருந்தார். மாணிக்கவாசகர், ஊமைப் பெண் முன்னிலையில் வாதம் செய்து திருச்சாழல் பாடி முடித்த உடன் ஊமைப் பெண் பேசிய தலம். முருகன் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை தந்தை ஈசனுக்கு ஓதிய பின்பு, தன் செயலை எண்ணி வருந்தி திருமாலிடம் முறையிட்டார். முதலில் திருமாலின் அறிவுரைப்படி சேங்கனூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்தும் மனதாற வணங்கியும் மன அமைதி கிடைக்கப் பெறாமல் வாய்மூடி மெளனியானார்.
திருப்பந்துறையில் லிங்க பிரதிஷ்டை செய்து பிரணவேஸ்வரர் என பெயரிட்டு தொழுது மெளனியாக இருந்த முருகன் மீண்டும் இத்தலத்தில் பேசும் திறன் பெற்றார். ஈசனுக்கு எதிரில் சின்முத்திரையுடன், தண்டத்துடன், தியானநிலையில் தலையில் குடுமியுடன் பாலதண்டாயுதபாணியாக இத்தலத்தில் காட்சி தருகிறார். திக்குவாய் குறைபாடு உள்ளவர்கள் இத்தல முருகனுக்கு 48 நாட்கள் தேனபிஷேகம் செய்து வழிபட்டால் நன்கு பேசும் திறன் பெறுவர். மழலைகளும் நன்கு பேசுவர். முருகனுக்கு பாதுகாப்பாக குகை மற்றும் சாட்சி விநாயகர் என்ற இரட்டை விநாயகர் உள்ள தலமிது...
🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳
🔔 *சர்வம் சிவமயம்* 🔔
🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
என்றும் இறைப்பணியில்
*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
*ஆன்மீக குழு*
*வாட்சப் ல் இணைய*
📲 +919486053609
⏰ _ஒழுக்கம்! கட்டுப்பாடு!_ ⏰
👳🏻♂ *இறைத்தொண்டு!* 👳🏻♂
🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡
No comments:
Post a Comment