Thursday, 28 May 2020

சாய் சத்சரிதத்தை எத்தனை நாட்களுக்குள் படித்து முடிக்க வேண்டும்..?

சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள்.

சீரடி சாய்பாபா வாழ்ந்த போது, அவரை நேரில் பார்த்து ஆசி பெறும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் “சாய்சத் சரிதம்” நூலை பாராயணம் செய்தாலே பாபாவின் நேரடி அருள் நமக்குக் கிடைக்கும்.

யார் ஒருவர் ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஆத்மார்த்தமாக மனதுக்குள் உள்வாங்கிப் படிக்கிறாரோ, அவரது ஆத்மா பலம் பெறும். பாபாவுடனே வாழ்வது போன்ற நிலைக்கு அது அவரை உயர்த்தும்.ஸ்ரீசாய் சத்சரிதத்தை ஓரிரு நாட்களில் படிக்க கூடாது. அவசரம், அவசரமாகவும் படிக்கக்கூடாது. நிதானமாக 7 நாட்களுக்கு படித்து முடிக்க வேண்டும். அது பாபா மூலம் நிறைவான பலன்களைத் தரும்.

ஏதாவது ஒரு வியாழக்கிழமை பாபாவை வழிபட்டு ஸ்ரீசாய் சத்சரிதத்தை வாசிக்கத் தொடங்குங்கள். அடுத்த புதன்கிழமை வரை 7 நாட்களில் படித்து முடித்து விடலாம். 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்ய வேண்டிய அத்தியாயங்கள் விபரம் வருமாறு:-

முதல் நாள் அத்தியாயம் 1 முதல் 7 வரை
இரண்டாம் நாள் அத்தியாயம் 8 முதல் 15 வரை
மூன்றாம் நாள் அத்தியாயம் 16 முதல் 22 வரை
நான்காம் நாள் அத்தியாயம் 23 முதல் 30 வரை
ஐந்தாம் நாள் அத்தியாயம் 31 முதல் 37 வரை
ஆறாம் நாள் அத்தியாயம் 38 முதல் 44 வரை
ஏழாம் நாள் அத்தியாயம் 45 முதல் முடியும் வரை

இன்றே ஸ்ரீசாய் சத்சரிதம் படிக்கத் தொடங்குங்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் வாழ்வில் நிறைய அற்புதங்கள், மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Wednesday, 27 May 2020

அஷ்டலட்சுமிகளில் அருள்பெற 1 ரூபாய் மதிப்புள்ள இந்த ஒரு சின்னம் இருந்தால் போதும் தெரியுமா?

நாம் எந்த ஒரு பொருளை அடிக்கடி பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறதோ, அந்தப் பொருளின் தாக்கம் நமக்குல் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. அந்த வரிசையில் மங்களகரமான பல பொருட்கள் இருந்தாலும், ஸ்வஸ்திக் சின்னத்திற்கு முதலிடம் உண்டு என்று சொன்னால் அது பொய்யாகாது. காலையில் எழுந்தவுடன் மட்டும் இல்லாமல், நீங்கள் எந்த இடங்களை, அதிகமாக பார்க்கின்றீர்களோ, அந்த இடத்தில் இந்தச் சின்னத்தை ஒட்டிக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக மொபைல் ஃபோனை அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தால், அதில் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இதிலிருந்தே, உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கும், நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய, சின்னம் சுவஸ்திக் சின்னம் என்பது. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டில் வைத்தால், நல்லது என்பது பலபேருக்கு தெரிந்திருந்தாலும், சுவஸ்திக் சின்னத்துக்கான முழு அர்த்தம் என்ன என்பது சில பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை பற்றிய முழு விளக்கத்தையும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்களாக இருந்தால் வீட்டு சமையல் அறையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்களது வாகனங்களில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கையானது தோல்வி இல்லாத வாழ்க்கையாக மாறும் என்பதும், தடையில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஸ்வஸ்திக் சின்னமானது உறுதுணையாக இருக்கும் என்பதும், வெற்றியை விரைவாக நமக்கு தேடித்தரும் சின்னமாக இருக்கும் என்பதும் உண்மையான ஒன்று.

இதனால்தான் இந்த சின்னத்தை, வியாபார கணக்கு எழுதும் புத்தகத்தில் குங்குமத்திலோ அல்லது மஞ்சளிலோ வரைந்து வைப்பார்கள். சிலபேரது பூஜை அறையிலும் இந்த சின்னம் இருக்கும். சிலபேரது வாசல் கதவிலும் இந்த சின்னம் ஒட்டி இருப்பதை நாம் கண்டிருப்போம். இதற்கு காரணம் வெற்றியைத் தரக்கூடிய இந்த சின்னத்தை அடிக்கடி பார்க்கும் போது நமக்குள் ஏற்படும் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதால் தான்.

விநாயகரின் அம்சமாக கருதப்படும் இந்த சின்னம், விநாயகரின் கையில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. செங்கோண வடிவைக் கொண்ட இந்த ஸ்வஸ்திக் சின்னம், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் போடப்படும் ஒரு சின்னம் ஆகும். இதில் இருக்கும் எட்டு கோடுகள் எட்டு திசைகளை குறிக்கின்றது. இந்த சின்னத்தில் நான்கு மூலைகளிலும் வைக்கப் படும் புள்ளியானது, மனிதர்களின் ஆன்மாவைக் குறிக்கிறது. இந்த ஆன்மா எப்போதுமே, எட்டுத்திக்கிலும் இருக்கும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பதாக ஒரு அர்த்தமும் சொல்லப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் இந்த சின்னத்தில், இருக்கும் நான்கு கோணங்கள் 4 வேதத்தையும், 4 திசைகளையும், 4 யுகங்களையும், 4 மூலங்களையும், 4 பருவங்களையும் குறிப்பிடுவதாக சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சின்னத்தை இரவு நேரத்தில் பார்ப்பது மிகவும் சிறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பாக, 10 நிமிடங்களுக்கு முன்பு, இந்த சின்னத்தை உற்றுப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னமானது, உங்கள் மனதில் பதிய வேண்டும். குறிப்பாக இந்த சின்னம் சிவப்பு நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் இருந்தால் நல்லது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் தூங்குவதற்காக கண்களை மூடினாலும், நீங்கள் பார்த்த இந்த ஸ்வஸ்திக் சின்னம் உங்கள் கண்முன்னே நிற்கும் அளவிற்கு மனதில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். அந்த சமயம் உங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில், கொண்டு செல்வது போல் நினைத்து கொள்ள வேண்டும். நீங்கள் செயல்படுத்தும் காரியமானது நிச்சயம் வெற்றியில் தான் போய் முடியும். வெற்றியை நீங்கள் விரைவாக அடையப் போகிறீர்கள்! வெற்றி! வெற்றி! வெற்றி! என்ற எண்ணத்தை மனதில் நன்றாக விதைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

வெற்றி உங்களுக்கு மிக அருகில்தான் இருக்கின்றது என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்த சின்னம், உங்களது மனதை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும். உங்களால் கூடிய விரைவில் இதை உணரமுடியும். தினந்தோறும் இந்த பயிற்சியை எடுத்துப்பாருங்கள். வெற்றியை தாண்டி உங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் குறுக்கிடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தெரியாமல் செய்த பாவங்களுக்கு கூட விமோசனம் கிடைக்கும். இவர்களுக்கு தானம் செய்தால்.!!

நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடுவதற்கான சிறந்த வழி, தானம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பசுமாடு, ஈ, எறும்பு, வைரவர், காகம், இவைகளுக்கு உணவு அளித்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால், இவைகளுக்கு நாம் செய்யும் தானத்தை முறையாகத்தான் செய்கின்றோமா! என்ற சந்தேகத்தை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

எல்லா ஜீவராசிகளுக்கும் எப்படி வேண்டும் என்றாலும், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் தானம் செய்வதால் தவறு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட இந்த ஜீவராசிகளுக்கு, இந்த முறைப்படி தொடர்ந்து தானம் செய்து வந்தால், நாம் செய்த பாவங்கள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் செய்த பாவங்களால், நாம் அனுபவித்து வரும் கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது என்ன தானம்? இந்த ஜீவராசிகளுக்கு எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

முதலில் பசுமாட்டிற்கு வாழைப்பழம் தந்தால் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நாட்டு வாழைப்பழம் 6 என்ற எண்ணிக்கையில் வாங்கி, வாரம் ஒரு முறை அந்தப் பசு மாட்டிற்கு தானம் அளிப்பது மேலும் சிறப்பு என்று சொல்கிறது சாஸ்திரம்.

எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் அரிசி மாவில் கோலமிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே அரிசி மாவில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து வாசலில் கோலமிடுவது பலமடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்றும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைரவரின் வாகனமான நாய்க்கு உணவளித்தால் நல்லது. அதுவும் தேய்பிறை அஷ்டமியில் நாய்க்கு உணவளிப்பது நமக்கு நல்ல பலனை பெற்றுத்தரும். இது நாம் எல்லோரும் அறிந்த தாக இருந்தாலும், தினம்தோறும் சாதத்தில் சிறிதளவு வெல்லம் கலந்து, இரவு நேரத்தில் ஒரு நாய்க்கு உணவளிப்பது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் உங்களது வீட்டு நாய் இல்லை. வீட்டில் இருக்கும் நாய் அல்லாமல், தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு உணவளிப்பது சிறந்தது.

தினம் தோறும் நாம் காகத்திற்கு வைக்கப்படும் சாப்பாட்டில் ஒரு சொட்டு தயிரும், சிறிது எள்ளும் கலந்து வைத்தால் நம் முன்னோர்களின் ஆத்மாவானது சாந்தி அடைந்தது, அவர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்று, பாவம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஜீவராசிகளுக்கு, இதுநாள்வரை எப்படி உணவு வைத்திருந்தாலும், இனிமேல் இந்த முறையில் உணவு வைத்து பாருங்கள்! வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் விரைவாக உண்டாவதை உங்களால் நிச்சயம் உணர முடியும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மூலிகை செடிகள்! இந்த 5 மூலிகை செடிகளின் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நம்முடைய வீடுகளில் அழகுக்காகவும், அதிர்ஷ்டத்தையும்  பல செடி கொடிகளை வளர்த்து வந்தாலும், நம்முடைய ஆரோக்கியத்திற்கென்று சில செடிகளை வளர்க்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் நம்முடைய மண்ணில் வளரக்கூடிய மூலிகைச்செடி ஏராளம். அதில் குறிப்பிட்ட இந்த 5 மூலிகை செடிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்களால் முடிந்தால் இந்த செடிகளில் ஏதாவது ஒன்றை உங்கள் வீட்டில் வைத்து வளர்த்து பலன் அடைந்தாலும் அதில் நன்மைகள் ஏராளம்.

திருநீற்று பச்சிலை: மருத்துவ குணம் அதிகமாக அடங்கி இருக்கும் இந்த திருநீற்றுப் பச்சிலை செடியை நம் வீட்டில் வளர்த்து வந்தால் மிகவும் நல்லது. சாதாரண காய்ச்சல், இருமல், சளி பிரச்சினைகள் வந்தால், இந்த இலையில் இருந்து நான்கு இலையை பறித்து, மென்று சாப்பிட்டாலே போதும். காய்ச்சலும் இருமலும் ஓடி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வல்லாரைக் கீரை: சிறிதளவு வல்லாரைக்கீரை கொடியை பறித்து, உங்களது வீட்டு மண்ணில் புதைத்து வைத்தாலே போதும். சுலபமாக வளரக்கூடிய கீரை வகைகளில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகமாக கொடுக்கும் மூலிகை கீரை என்றும் சொல்லலாம். வீட்டில் இருக்கும் இந்த கீரையை பறித்து, வாரத்தில் இரண்டு முறை குழந்தைகளுக்குச் சமைத்துக் கொடுப்பதன்மூலம் அவர்களுடைய ஞாபக சக்தி திறன் அதிகரிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆடாதோடை: இந்த செடியானது வீட்டில் சுலபமாக வளர்ந்துவிடும். ஒரே ஒரு குச்சியை நட்டு வைத்தாலும் அதில் துளிர் விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நெஞ்சு சளியால் அவதிப்பட்டு வருபவர்கள், இந்த ஆடாதொடை இலையை நீரில் போட்டு காய்ச்சி, குடித்து வந்தாலே போதும். நெஞ்சு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். இந்தச் செடியின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

நித்தியகல்யாணி பூச்செடி: இந்தச் செடியை நம் வீட்டில் வைத்து வளர்த்தால், இதில் பூக்கும் பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் இந்த செடி இருக்கும் இடத்தில் வீசப்படும் காற்றானது சுத்தமாகவும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செடியின் இலைகள் சர்க்கரை நோய்க்கும், புற்று நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பிரண்டை: இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பட்சத்தில், வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக சமையலில் சேர்த்துக் கொள்வோம். பிரண்டையை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது நமக்கு கால்சியம் சத்து அதிகரிக்கிறது. இதனால் மூட்டு வலியை தவிர்த்துக் கொள்ள முடியும். உடம்பிலுள்ள எலும்புகளுக்கும் அதிகப்படியான கால்சியம் சத்து கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் யோகம் வரும். எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது.!!

திருப்பதி என்று சொன்னாலே நம் நினைவிற்கு முதலில் வருவது லட்டு. அதன் பின்பு, அங்கு இருக்கும் பக்தர்களின் கூட்டம். ‘திருப்பதிக்கு சென்றால் திருப்பம் ஏற்படும்’ என்ற இந்த வாசகத்தை நம்மால் நிச்சயம் மறுக்க முடியாது. பக்தர்களுக்கு பெருமாள், வேண்டிய வரத்தை வேண்டிய உடனே கொடுக்கும் கலியுக தெய்வமாக தான் காட்சி தருகின்றார். எந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு சென்று வந்தால் யோகம் கிடைக்கும் என்பதைப் பற்றியும், திருப்பதியில் பெருமாளை தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றியும், திருப்பதி மட்டும் எப்போதுமே, செல்வ செழிப்போடு இருப்பதற்கு காரணம் என்ன? என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியான இடத்தில் அமைந்து விட்டால், அவர் கட்டாயம் யோககாரனாகத்தான் இருக்க முடியும். நம்முடைய இந்திய நாட்டில், சந்திரனின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதி திருப்பதி மலை தான். அதாவது சந்திரனின் ஒளிக்கதிர்கள் அதிகமாகப் படும் இடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இங்கு செல்வவளம் எப்போதும் நிறைந்திருக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் இந்த இடத்தில், ஸ்ரீ ராமானுஜரின் எந்திர சக்கரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம். இந்த கோவிலுக்கு சென்று வந்தால், நமக்கு இருக்கும் ஜாதக தோஷமாக இருந்தாலும் சரி, செய்வினை தோஷமாக இருந்தாலும் சரி, புத்திரதோஷமாக இருந்தாலும் சரி, அதற்கான விரைவான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

வாஸ்து படி ஒரு இடத்தில் வடகிழக்கு மூளையானது பள்ளமாகவும், தெற்குப் பகுதி உயரமாகவும் இருந்தால் அந்த இடம் பிரபலமடைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. திருப்பதியில் வடகிழக்கில் அருவி பள்ளத்தாக்கும், தெற்கில் மலைப்பகுதியும் இயற்கையாகவே அமைந்து உள்ளதால், சொல்லவே தேவையில்லை. செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டி, பேர் புகழோடு உச்சியில் நிற்கின்றது. இதுவும் ஒரு காரணம்.

பிரபஞ்சத்தின் சக்தி நேரடியாக இந்த மலையில் அதிகம் ஈர்க்கப்படுவதால், அங்கு செல்லும் பக்தர்களின் மனது நேர்மறையாக சிந்திக்க தொடங்கிவிடுகிறது. தன்னம்பிக்கை தானாக அதிகரித்து விடுகிறது. மனக்குழப்பம் தீர்ந்து விடுகிறது. அதே மனநிலையில் நாம் வீடு திரும்பும் போது, அந்த சூழ்நிலையில் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது நமக்கு வெற்றியைத் தேடித் தந்து விடுகிறது.

குறிப்பாக திருப்பதிக்கு நடைபாதை யாக நடந்து செல்பவர்கள், மேல்நோக்கி தலைநிமிர்ந்து நடந்து செல்வதால் நம் உடலில் இருக்கும் மூலாதார சக்கரங்கள் சீராக இயங்க தொடங்குகின்றது. தோல் பிரச்சனை உள்ளவர்களும், சந்திரபுத்தி உள்ளவர்களும், திருப்பதி மலைமேல் நடந்தே செல்வது மிகவும் நல்லது. குறிப்பாக திங்கட்கிழமை அன்று திருப்பதிக்குச் சென்று தங்கினால், அதிகப்படியான பலனை நம்மால் அடையமுடியும்.

திருப்பதிக்கு சென்றால், அந்த மலையின் மேல் பத்து மணி நேரத்திற்கு மேல் இருந்து தரிசனம் செய்வது பக்தர்களுக்கு நல்ல பலனைப் பெற்றுத் தரும் என்ற ஒரு சாத்திரம் உள்ளது. இதனால் தான் பக்தர்களை, ஒரு இடத்தில் வைத்து, பல மணி நேரங்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்வதற்காக அனுப்பி வைக்கிறார்கள். பெருமாளை தரிசனம் செய்வதற்காக காத்திருக்கும் அந்த சமயத்தில், பெருமாளை மனதார நினைத்து, அந்த புண்ணிய பூமியில் தியானம் செய்வது, நமக்கு பல கோடி புண்ணியத்தை தேடித்தரும். இது நம்மில் பல பேருக்கு புரிவதே கிடையாது. திருப்பதிக்கு சென்றால் அந்த குடோனில் போட்டு அடைத்து விடுகிறார்கள் என்று திட்டிக் கொண்டே இருப்பவர்கள் ஏராளம். இனியாவது திருப்பதிக்குச் சென்றால், அந்த புண்ணிய இடத்தில் மனதை அமைதியாக வைத்து தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

குறிப்பாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம், இந்த லக்னத்தை கொண்டவர்கள் பெருமாளை எப்போது வேண்டும் என்றாலும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்யலாம். எப்போதெல்லாம் திருப்பதிக்குச் சென்று வருகிறீர்களோ, அப்போதெல்லாம்  நிச்சயம் அவர்களுக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருக்கும். சிம்மம், தனுசு, கும்பம் இந்த மூன்று லக்னத்தை கொண்ட ராசிக்காரர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பெருமாளை சென்று தரிசனம் செய்தால் போதுமானது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ஐம்பெரும் காப்பியம் அறிமுகம்.!!

பழந்தமிழ் இலக்கியங்களில், காப்பியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காப்பியம் என்பது தெய்வத்தையோ, உயர்ந்த மக்களையோ, கதைத் தலைவர்களாகக் கொண்ட நீண்ட செய்யுள் ஆகும். ஐம்பெருங்காப்பியங்கள் என்ற தொடரை முதலில் குறிப்பிட்டவர் மயிலை நாதர். அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை காப்பியம் எனப்பட்டன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐம்பெருங் காப்பியங்கள் தோன்றின. இந்த ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவ்விரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைப்பர். இவ்விரண்டும் கதையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது மட்டுமன்றி, சமகாலத்தில் தோன்றியவையாகும். பிற மூன்று காப்பியங்களும் சோழர் காலத்தில் தோன்றியவையாகும். காப்பியம் தமிழில் முக்கியபங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு காப்பியமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று திகழ்கிறது. அதில், சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். அடுத்ததான மணிமேகலை தமிழின்முதல் சமயக் காப்பியம் ஆகும். மூன்றாவதான சீவகசிந்தாமணி, விருத்தப்பா என்ற யாப்பு வகையில் தமிழில் எழுந்த முதல் காப்பியம் என்பதுடன், காலத்தால் முதன்மை என்ற பெருமையும் பெற்றது. நான்காவதாக உள்ள வளையாபதியில்,விருத்தப்பாவின் முன்னைய வளர்ச்சி நிலைகளை காணலாம்,கடைசியாக உள்ள குண்டலகேசியோசமயப்பூசல் அடிப்படையில் தோன்றிய காப்பியம் ஆகும். ஐம்பெரும் காப்பியம் பற்றி தண்டி அலங்காரம் கூறும் இலக்கணம் பெருங்காப்பிய நிலைபேசும் காலை 

வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின் ஒன்று
ஏற்புடைத் தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி
கற்றோர் புனையும் பெற்றிய தென்ப...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

10 ரிஷிகள் | 10 கவுதமர்.!!

ஆங்கிரஸ் மகரிஷியின் வம்சத்தில் தோன்றிய மகரிஷிகளில் கவுதமர் மிக முக்கியமானவர். இவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும் இடம்பெற்றிருக்கிறார். தீர்க்கதமஸ் என்னும் மகரிஷிக்கும், ப்ரத்வேஷீ என்னும் பெண்மணிக்கும் பிறந்தவர் இவர். தீர்க்கதமஸ் பிறவியிலேயே பார்வையற்றவர். பிருகஸ்பதியின் சாபத்தால் கருவிலேயே இவருடைய கண்கள் குருடாயின. மேதையான இவருக்கு சகலவேதங்களிலும் நல்ல ஞானம் இருந்தது. பார்வையற்றவராக இருந்ததால், தீர்க்கதமஸை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை. நீண்டகாலமாக பிரம்மசரியாகவே இருந்தார். ப்ரத்வேஷீ தான் அவருடைய வேதஅறிவைக் கண்டு அவரைத் திருமணம் செய்ய சம்மதித்தாள். இவ்விருவருக்கும் பிறந்த முதல் குழந்தை தான் கவுதமர். தொடர்ந்து பல குழந்தைகளைப் பெற்றாள் ப்ரத்வேஷீ. எப்போதும் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து இருப்பதை எண்ணி ப்ரத்வேஷீக்கு வெறுப்பு உண்டானது. இதனால், கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எலியும் பூனையும் போல குடும்பத்தில் சண்டை சச்சரவிற்கு பஞ்சமே இல்லாமல் போனது. ப்ரத்வேஷீ, தன் கணவன் தீர்க்கதமஸை திட்டத் துவங்கிவிட்டாள். கவுதமர் அம்மா பிள்ளையாக வளர்ந்திருந்தால் ப்ரத்வேஷீயின் பக்கம் துணைநின்றார். ஒருநாள் ப்ரத்வேஷீ கவுதமரிடம், இந்த கிழத்திற்கு சோற்றை தின்பதும், வருஷம் தவறாமல் என்னைப் பிள்ளைத்தாய்ச்சியாக்குவதும் தான் ஒரே வேலை. அவர் உயிரோடு இருந்தால் இனியும் எனக்கு சங்கடம்! பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! இனி கங்கையாற்றில் அவரை தூக்கி போட்டு விடுவது ஒன்றுதான் சரியான தீர்வு! என்றாள் அடங்காத கோபத்துடன். மனைவியை பிள்ளை பெறும் இயந்திரமாக பார்க்கும் கணவன் மீது எந்தப் பெண்ணும் வெறுப்பு கொள்ளத்தான் செய்வாள். அதைத் தான் ப்ரத்வேஷீயும் செய்தாள். அதனால் தான் அவள் பெயரிலேயே துவேஷத்தையும் சேர்த்து வைத்து விட்டார்கள் போலும். வெறுப்பு அளவுகடந்துவிட்டதால், பிரம்மஹத்தி தோஷத்தையே (கொலை பாவம்) தரும் பாவத்தையும் செய்ய முனைந்துவிட்டாள். மரக்கட்டைகளால் ஆன தெப்பம் ஒன்றைச் செய்து அதில் தீர்க்கதமஸை ஏற்றச் செய்தாள். அம்மாவின் பேச்சைக் கேட்ட கவுதமரும் பலாத்காரமாக தந்தையை தெப்பத்தில் அமர்த்தி கங்கையாற்றில் விட்டுவிட்டார். ஆற்றில் இருக்கும் திமிங்கலம், முதலைகளுக்கு இரையாகிவிடுவர்.கவுதம மகரிஷியின் தர்மபத்தினி அகல்யா உலகப் பிரசித்தமானவள். ராமாயணம் படித்த அனைவருக்கும் நன்கு அறிமுகமான பாத்திரம். பாலகாண்டத்திலேயே விஸ்வாமித்திரரோடு ராமலட்சுமணர்கள் செல்லும்போது கவுதம மகரிஷியின் ஆஸ்ரமம் வழியாகத் தான் சென்றார்கள். ராமன் விஸ்வாமித்திர ரிஷியிடம் கவுதமரின் ஆஸ்ரமம் ஏன் இப்படி பாழடைந்து கிடக்கிறது என்று கேட்க நடந்த கதையை அவர் ராமனுக்கு எடுத்துச்சொன்னார். ராமா! கவுதமரும் அகல்யாவும் தம்பதிகளாக வாழ்ந்த ஆஸ்ரமம் இது! அகல்யா அழகுள்ள பெண். அவளது அழகில் மயங்கிய இந்திரன் ஆசைகொண்டு பூலோகம் வந்தான். கவுதமர் அனுஷ்டானம் செய்ய அதிகாலையில் கிளம்பிய வேளையில் ஆயத்தமானான் இந்திரன். கவுதமரைப் போலவே வேடம் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அகல்யாவும் விபரீதம் அறியாது கணவனைப் போல இருந்த இந்திரனுடன் மகிழ்ந்திருந் தாள். தன் மனைவி அகல்யாவும், இந்திரனும் செய்த செயலை நொடிப்பொழுதில் உணர்ந்தார் கவுதமர். வெகுண்டு இந்திரன் மீது கடும்சாபம் இட்டார். இந்திரனின் உடம்பு அருவருக்கத்தக்க நிலைக்கு ஆளாகும்படி சபித்தார். பின்னரும் சினம் அடங்கவில்லை. தன் மனைவி மீதும் மின்னலாய் பாய்ந்தது அவரின் கோபம். கணவனின் ஸ்பரிசத்துக்கும், பிறரது ஸ்பரிசத்துக்கும் வேறுபாடு காணமுடியாத அவளை, நீண்டகாலம் பசி தாகத்தால் மானிடதன்மை இழந்து பேயுருக்கொண்டு அலையும்படியும் சபித்தார். அத்தோடு விட்டாரா என்ன? இறுதியில் கல்லாய் சமைந்து கேட்பாரற்றுக் கிடக்கும் படியும் செய்தார். சாபவிமோசனமாக பரம்பொருளாகிய உனது பாதத்தூளிகள் (தூசு) பட்டு பெண்ணாக சுயவுருவம் பெறும்படி அருள்செய்தார், என்றார் விஸ்வாமித்திரர். தங்கள் தவ வலிமையினால் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் ஞானிகள். ராமாவதாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த சரபங்கர், சபரீ போல, கவுதமரும் காத்திருந்தார். மிதிலாபுரியில் ஜனகமன்னனிடம் அரண்மனை புரோகிதராக இருந்த சதானந்தர், கவுதமருககும் அகல்யாவுக்கும் பிறந்த புத்திரர் ஆவார். ராமாயணம் மட்டுமில்லாமல் அகல்யை சாபம் மகாபாரதம், வேதம் ஆகிய எல்லாவற்றிலும் இடம் பெற்றுள்ளது. ஞானம் மிக்க கவுதமர், அகல்யை மீண்டு வந்தபின் பலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்து பின்னர் தேவலோகம் சென்றார். சப்தரிஷிகளில் ஒருவரான இவரைப் பற்றிய குறிப்புகள் நான்கு வேதங்களிலும் காணப்படுகிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Tuesday, 26 May 2020

இசக்கியம்மனை சாந்தப்படுத்திய அவ்வையார்.!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ளது முப்பந்தல். இங்குள்ள இசக்கிஅம்மன் கோயிலில் அவ்வையாருக்கு தனி சந்நதி உள்ளது.  ஒருநாள் இசக்கிஅம்மைக்கு பூஜை நடந்து முடிந்த நேரம் அவ்வையார் அவ்விடம் வந்தாள். நான் அனுதினமும் வழிபடும் அந்த சதா சிவனின் இடப்பாகம் அமர்ந்திருக்கும் உமையாளா நீ, நம்ப முடியவில்லை, கண்களை மிரட்டி, நாக்கை நீட்டி, கோர பற்களை காட்டி நிற்கின்றாய். ஏன் இந்த உக்கிர தோற்றம், மங்களகரமாக காட்சி தரக்கூடாதா என்று கேட்டதும் சிலையிலிருந்து ஒரு ஒளித்தோற்றம் அவ்வையே, இவ்விடம் உற்று நோக்கு, என்று குரல் கேட்க, பார்த்தாள் ஔவை, அப்போது நின்ற கோலத்தில் சாந்தினியாக காட்சி அளித்தாள் இசக்கியம்மன். முகமலர்ந்த ஔவை, ‘‘தேவி, என்றென்றும் சாந்த ரூபினியாக, இப்படி கல்யாண சுந்தரியாக இருக்க வேண்டும் என்று கூறினாள். அப்போது பேசிய இசக்கியம்மன், இவ்விடமே இருந்து பார் என்றுரைத்தாள் இசக்கியம்மன். அதன்படி முப்பந்தலில் அவ்வையாருக்கு தனிச்சந்நதி அமைந்துள்ளது...


🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பருத்தியூர் சந்தன மாரியம்மன்.!!

பச்சை வயல்களின் நடுவே அருள் பூக்கும் திருமுகத்தோடு சந்தன மாரியம்மன் வீற்றிருக்கிறாள். காவல் தெய்வமான இவள் நிகழ்த்தும் லீலைகள் அனேகம். பாவாடை என்பவன் ஏழை விவசாயி. செல்வந்தர் ஒருவரிடம் கடன் பெற்றான்.

கடனை மீண்டும் செலுத்தியும் பத்திரத்தை கொடுக்க மறுத்தார், செல்வந்தர். ஆங்கிலேயே நீதிபதி முன்பு வழக்கு வந்தது. பாவாடையோ ‘‘ஐயா... எங்க ஊரு சந்தன மாரியம்மனே சாட்சி’’ என்றான். அன்றிரவே ஆச்சரியமாக நீதிபதியின் கனவில் மாரியம்மன் சிறுமியின் வடிவில் தோன்றினாள்.

சிலரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களை அழைத்து விசாரித்து நீதி வழங்கு என்று சொல்லி மறைந்தாள். கனவு கலைந்தது. காலையில் அவள் சொன்ன பெயர்களை வைத்து விசாரிக்க உண்மை வெளிப்பட்டது. பாவாடை நிரபராதி என்று தீர்ப்பு சொன்னார். செல்வந்தருக்கு சம்மன் அனுப்பினார்.

இன்றுவரை இதுபோன்ற விஷயங்கள் நிறைய நடக்கின்றன. சந்தனமாரி தவறு செய்தவர்களை தண்டிக்கிறாள். மக்களை நல்வழியில் நடக்க வைக்கிறாள். திருவாரூர் மாவட்டத்தில் குடவாசலுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

தொட்டியம் மதுரைகாளியம்மன்

சின்னான் என்பான் மதுரை காளிதேவியின் வாசலில் வைக்கப்பட்டிருந்த பறையினை அடிக்கத் தொடங்கினான். காளியின் நினைவில் உருகினான். பறையடியின் வேகம் கூடியது. பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டாள். உடனே ஈ வடிவெடுத்து சின்னானுடன் தொட்டியத்தை வந்தடைந்தாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள்.

ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வேகமாக வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு புதரிலிருந்த புற்று சிதைந்தது. கோபமுற்ற அன்னை காளி உற்று நோக்கினாள். மன்னனின் சகோதரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். அதிர்ந்துபோன அரசன் காளிக்கு திருக்கோயில் எழுப்பி உற்சவம் நடத்தினான்.

சகோதரனின் சித்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டு வந்த சின்னானுக்கும், செல்லானுக்கும் கோயிலினுள் சிலை அமைத்தான். எதிரிகளால் ஏற்படும் துயரம் நீங்க தொட்டியம் மதுரை காளியம்மனை வடைமாலை சாதத்ி வழிபடலாம். திருச்சியிலிருந்து முசிறி வழியாக நாமக்கல் செல்லும் சாலையில் தொட்டியம் அமைந்துள்ளது.

திருநல்லூர் அஷ்டபுஜகாளி

திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திலுள்ள பிராகாரத்தில்தான் இந்த காளி வீற்றிருக்கிறாள். இவளை நல்லூர் அஷ்டபுஜமாகாளி என்பார்கள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதுபோல இத்தலத்திலும் காளி பேரழகாக வீற்றிருக்கிறாள். காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், இம்மாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகி. மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவள். ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக அமர்ந்திருக்கிறாள். ஆகவே, மழலைச் செல்வம் இல்லாதவர்கள் காளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் நிறைசூல் கர்ப்பிணியாக மாகாளி எதிரே அமர்ந்து வளைகாப்பு விழா செய்து கொள்கிறார்கள். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகுபார்க்கிறார்கள். கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் சுந்தரபெருமாள்கோயில் எனும் ஊருக்கு அருகே உள்ளது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நேரில் வந்த தெய்வங்கள்.!!

 வேடன் கண்ணப்பன், காட்டில் தனியாகக் கிடந்த சிவலிங்கமூர்த்தியை பக்தியால் ஆராதித்தான். அவனை சோதிக்க எண்ணிய பரமேஸ்வரன் தன் ஒரு கண்ணில் இருந்து ரத்தத்தைப் பெருக்க அதைக் கண்டு திகைத்த கண்ணப்பன், தன் கண்ணைப் பிடுங்கி அந்தக் கண்ணில் வைத்து, பெருகும் குருதியை நிறுத்தினான். ஈசனின் மறு கண்ணிலிருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தோட தன்னுடைய மறு கண்ணைப் பெயர்க்க கண்ணப்பன் முயன்றபோது ஈசன் அவன் முன் பிரத்யட்சமாகி அருளினார். அன்றுமுதல் கண்ணப்ப நாயனார் ஆனார். 


 சீர்காழி திருக்குளத்தின் கரையில் தன் தாய் தந்தையர் நீராடச் சென்று நேரம் ஆகியதால் குளத்தில் நின்றிருந்த மூன்று வயதுக் குழந்தை, சம்பந்தர் ‘அம்மையே, அப்பா’ என்றழைக்க, ஸ்திரசுந்தரி அன்னை அவருக்கு பொற்கிண்ணத்தில் திருமுலைப் பாலைத் தந்து ஞானக்குழந்தையாக்கினாள்.

 திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு ஈசனே குருவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தருளினார்.

 சுந்தரர் கயிலை மலை செல்ல ஔவையாரை அழைத்தபோது, தான் கணபதி பூஜையை செய்துவிட்டுதான் வருவேன் என ஔவையார் கூற, சுந்தரர் அவரை விட்டுவிட்டுச் சென்றார். பூஜை முடிந்ததும், தன் துதிக்கையால் ஔவையாரை சுமந்து, சுந்தரருக்கு முன்னால் கயிலையில் கொண்டு சேர்த்தார் திருக்கோவிலூர் பெரியானைக் கணபதி.

 வள்ளலாருக்கு அவர் அண்ணியின் உருவத்தில் வந்து அன்னம் பாலித்த பெருங்கருணை கொண்டவள் திருவொற்றியூரில் அருளாட்சி புரியும் 
வடிவுடையம்மன்.

 கவிச் சக்ரவர்த்தி கம்பர் தன் காவியத்தை அரங்கேற்றபோது அதில் இடம் பெற்றிருந்த ‘துமி’ என்ற சொல் வழக்கத்தில் இல்லாதது என்று பலர் வாதாடினார். ஆனால் கம்பருக்காக, கொட்டி கிழங்கு விற்பவளாக வந்து ‘துமி தெறிக்கும், தூரப்போ’ எனக்கூறி அந்தச் சொல் வழக்கத்தில் உள்ளதை நிரூபித்தாள், சரஸ்வதி தேவி.

 திருத்தணி முருகப்பெருமான் சங்கீத மும்மூர்த்தியரில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதருக்கு தரிசனம் கொடுத்ததோடு, கல்கண்டும் தந்து அவரை ஆசிர்வதித்தார்.

 முன் ஜென்ம சாபத்தால் பேச்சற்றவனாகப் பிறந்த காளிதாசன், காஞ்சி காமாட்சி ஆலயத்தில் ஊழியம் செய்து வந்தான். ஒரு முறை அங்கு, மந்திரசித்தி பெறுவதற்காக பூஜை செய்த வித்யா உபாசகருக்காக நேரில் வந்தாள் அன்னை. அந்த உபாசகரோ, வந்தது அன்னை என அறியாமல் ‘தூரப்போ’ என அன்னையை விரட்டினார். வாய் நிறைய தாம்பூலம் போட்டுக் கொண்டுவந்த அன்னை அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊமையான காளிதாசனை எழுப்பி அவன் வாயில் அந்த தாம்பூலச்சாற்றை உமிழ்ந்தாள். உடனே அவன் பேசும் சக்தி பெற்று ஆர்யா சதகம், மந்தஸ்மித சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம் என ஒவ்வொன்றிலும் நூறு துதிகள் அடங்கிய மூகபஞ்சசதியைப் பாடினார்; கவி காளிதாசன் என்று பெயரும் பெற்றார்.

 தேவியின் தியானத்தில் ஆழ்ந்திருந்தார், அம்பிகை உபாசகர் சுப்ரமணியம். அன்று அமாவாசை. தேவியின் பிரகாசமாக திருமுக ஒளியில் மனதை இழந்திருந்தார். அப்போது அங்கு வந்த சரபோஜி மன்னர் அன்று என்ன திதி என அவரைக் கேட்க, தேவியின் முக ஒளியில் மனதை வைத்திருந்த உபாசகர், பௌர்ணமி என்று பதிலளித்தார். மன்னன் மீண்டும் மீண்டும் கேட்க, அதே பதில்தான் கிடைத்தது. தியானம் கலைந்த உபாசகரிடம், ‘அமாவாசை திதியான இன்று, பௌர்ணமி என்று உளறுகிறீர். இன்று மட்டும் முழு நிலவு வானில் வராவிட்டால் மரணதண்டனைதான் எனக்கூறி, கீழே எரியும் நெருப்பின் மேலே ஊஞ்சல் கட்டி ஒவ்வொரு பிரியாக அறுத்துக் கொண்டே வரச் செய்தார். ‘விழிக்கே அருளுண்டு...’ எனும் பதிகத்தை சுப்ரமணியம் பாடிய போது தேவி நேரில் தோன்றி தன் தாடங்கத்தை வானில் வீசி, அதையே பௌர்ணமி நிலவாக்கி அற்புதம் புரிந்தாள்.

 வாத நோயால் பாதிக்கப்பட்ட நாராயண பட்டத்ரிக்கு குருவாயூரப்பன் நேரில் தோன்றி, ‘மச்சத்திலிருந்து என் துதியை ஆரம்பி’ எனக் கூறி, ‘நாராயணீயம்’ எனும் மகா காவியம் உருவாகக் காரணமாயிருந்தார். அவ்வாறு நாராயணீயம் பாடி முடித்ததும் அவர் பிணி அவரை விட்டு நீங்கியது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Monday, 25 May 2020

10 ரிஷிகள் | 9 பராசரர்.!!

வசிஷ்டரின் பேரரான பராசரர், சக்தி ரிஷியின் புத்திரராக அவதரித்தார். சக்தி ரிஷியையும், அவருடைய சகோதரர்கள் நூறுபேரையும் ருதிரன் என்னும் ராட்சஷன் கொன்று குவித்தான். பூலோகத்தில் நன்மையையும், தீமையையும் ஒரு மனிதன் அனுபவித்தே தீரவேண்டும் என்ற நியதியை வசிஷ்டர் அறிந்திருந்தார். ஆனாலும், சக்திரிஷி இறந்ததால், கடல்போன்ற புத்திரசோகத்தை மனதில் தேக்கிக் கொண்டு திரிந்தார்.தந்தைக்கே இப்படி என்றால் தாய்க்கு எப்படி இருக்கும்? வசிஷ்டரின் மனைவி அருந்ததியும் கணவரோடு மனம் கலங்கித் திரிந்தாள். குலமே வேரோடு சாய்ந்து விட்டதே! இனி வம்ச விருத்தி எப்படி உண்டாகும் என்ற எண்ணம் வசிஷ்டருக்கு உண்டானது. அப்போது, வசிஷ்டரின் மருமகளான அத்ருச்யந்தீ (சக்தி முனிவரின் மனைவி) தன் மாமனாரிடம் மாமா! நம் குலம் நிர்மூலமாகிவிடவில்லை. உங்கள் மகன் இறந்தபோது, நான் கருவினை வயிற்றில் சுமந்திருந்தேன். என் கர்ப்பத்தில் இருக்கும் நம் வம்சம் தழைக்க வந்த இந்தச் சிசு குலப்பெருமை காக்கும் மகாஞானியாக வருவான், என்று கூறி அவரைத் தேற்றினாள். ஆண்டுகள் உருண்டோடின. அத்ருச்யந்தீயின் வயிற்றில் இருந்த கரு 12 ஆண்டுகள் தாயின் வயிற்றிலேயே இருந்தது. ஒருமுறை தன் மருமகளின் முன்னே சென்று கொண்டிருந்த வசிஷ்டர் திடீரென நின்றார். அம்மா! அத்ருச்யந்தீ! என் பின்னால் யாரோ சுந்தரமொழியில் வேதகோஷம் செய்வதை என்னால் கேட்கமுடிகிறதே! இக்குரலைக் கேட்டால் என்பிள்ளை சக்தியின் பேச்சைப் போல இனிக்கிறதே! இது என்ன அதிசயம்! என்றார். மாமா! கர்ப்பவாசம் செய்யும் உங்கள் பேரன் தான் வேதமந்திரங்களை ஓதுகிறான். அடிக்கடி நான் இந்த மந்திர சப்தங்களை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். உபநயனகாலம் வந்து விட்டதால், தாமாகவே, சகலவேதங்களையும் அவன் அறிந்து கொண்டுவிட்டான், என்றாள். தங்கள் குலம் காக்க வரும் கோமகனை எண்ணி வசிஷ்டர் மனம் மகிழ்ந்தார். தாயின் வயிற்றிலேயே 12 ஆண்டுகள் இருந்து அந்த வயதுள்ள சிறுவனாக பிறந்தான் அந்தக்குழந்தை. தாத்தா வசிஷ்டர் அந்தப் பிள்ளைக்கு பராசரர் என்ற பெயர் வைத்தார். பராசரர் என்ற சொல்லுக்கு, பிறந்தவுடனேயே பகைவர்களை தன் தவவலிமையினால் சிதறிப் போகும்படி செய்பவன் என்பது பொருள். தாத்தா வசிஷ்டரை, அந்தக் குழந்தை தனது தந்தை என்று எண்ணிக் கொண்டு அவரை அப்பா என அழைத்தான். அத்ருசயந்தீ இதை எண்ணி மிகவும் மனவேதனைப்பட்டாள். ஆனாலும், ஆரம்பத்தில் இதைத் தடுக்க முடியவில்லை. எத்தனை நாள் தான் இந்த அவலத்தை அவளால் பொறுக்க முடியும்? ஒருநாள் பராசரரிடம் உண்மையை மறைக்காமல் சொல்லிவிட்டாள். அத்துடன், அவனது தந்தை, சித்தப்பாக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தையும் எடுத்துச் சொன்னாள். பராசரருக்கு கோபம் கொப்பளித்தது. தன் வம்சத்தாரைக் கொன்ற ராட்சஷன் ருதிரனையும், ராட்சஷ வம்சத்தையும் அழிக்க முடிவெடுத்து யாகம் ஒன்றைத் துவக்கினார். மந்திரங்களைச் சொல்லி ஹோமாக்னியை வளர்த்தார். பிரபஞ்சத்தில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். இந்த யாகத்தை நிறுத்தும்படி புலஸ்தியர் என்ற மகரிஷி பராசரரிடம் மன்றாடினார். ஒருவன் செய்த குற்றத்திற்காக ஒரு இனத்தையே பழிவாங்குவது தர்மம் அல்ல! நிரபராதிகளையும் அநியாயமாகக் கொல்வது முறையல்ல! என்று வேண்டினார். மாமுனிவனே! என் பேச்சைக் கொஞ்சம் கேள். கல்மாஷபாதன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடிக் களைத்து, தண்ணீர் தாகத்தால் ஒற்றையடிப்பாதையில் வந்து கொண்டிருந்தான். அப்போது உன் தந்தை சக்திரிஷி எதிரில் வந்தார். அவனுக்கு அவர் வழிவிட மறுத்ததோடு மட்டுமல்லாமல் ஒதுங்கிப் போ என்று ஆவேசமாகக் கோபித்தும் கொண்டார். நாட்டில் உள்ள பிரஜைகள் மன்னனை மதிப்பது தானே தர்மம். இதை மறந்து பேசிய உன் தந்தைமீது வெகுண்டான் கல்மாஷபாதன். குதிரை சாட்டையால் அவரை அடித்துவிட்டான். வலியால் துடித்த உன் தந்தை, கல்மாஷபாதனை ராட்சஷனாகப் போகும்படி சபித்துவிட்டார். ராட்சஷனான அவன் உன்தந்தையையும், அவரது நூறு சகோதரர்களையும் கொன்று தின்றான். இது தான் உண்மையாகவே நடந்தது. குற்றம் முழுவதையும் ராட்சஷர்களின் மீது சுமத்துவது சரியல்ல,என்றார். வயதில் பழுத்த அவரது நியாயமான பேச்சு பராசரரின் மனதை மாற்றியது. யாகத்தை நிறுத்திவிட்டு அவரது பாதத்தில் விழுந்து வணங்கினார். பராசரா! பரதேவதை நிர்ணயம் என்ற விஷயஞானத்தைப் பெற்று உலக÷க்ஷமத்திற்கு வழிகாட்டுவாயாக! என்று ஆசியளித்தார். பராசரர் தந்த பொக்கிஷமே விஷ்ணுபுராணம். வேதத்தின் சாரத்தை நமக்களிக்கும் புராண நூலாக இது திகழ்கிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வீட்டில் இந்த மரங்களை மட்டும் வளர்க்காதீங்க! கண்டிப்பாக பிரச்சனை தான் வரும்.!!

இந்த உலகத்தில் எதை எடுத்தாலும் அதில் நல்லதும் இருக்கும். கெட்டதும் இருக்கும். அதே போல தாங்க.. தாவரங்கள் கூட நல்லதும் செய்யும். கெட்டதும் செய்யும். நாம தான் எச்சரிக்கையா இருந்துக்கனும். சில வகை தாவரங்களை வீட்டில் வளர்த்தால் அதிஷ்டம் வரும்னு சொல்வாங்க. அவை தெய்வீக மரங்களாகவும், செடிகளாகவும் நம்ம வீட்ட பாதுகாக்கும். துளசி, வாழை, கற்றாழை, மணி பிளாண்ட், மாதுளை, கொய்யா, நெல்லி போன்றவை அதிர்ஷ்டம் தரும் தாவரங்களாக பார்க்கப்படுகின்றன. இது போல நிறைய வகைகள் நமக்கு நன்மைகள் செய்யும் தாவரங்கள் உள்ளன. அந்த வரிசையில் இந்த வகை தாவரங்கள் பிரச்சனைகளை தான் தருகின்றன என்று சொல்லலாம். எந்த தாவரங்களை வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது என்பதை இப்பதிவில் காணலாம்.

முதலில் முட் செடிகளை கட்டாயம் வீட்டில் வளர்க்கக் கூடாது. முட்கள் இருக்கும் செடிகளில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் தன்மை உண்டு. சிலர் அழகிற்காக வீட்டிற்குள் முட்கள் கொண்ட செடிகளை வளர்க்கிறார்கள். இந்த வகைச் செடிகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கும். உதாரணத்திற்கு வீடுகளில் எலுமிச்சை மரத்தை வளர்க்க கூடாது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமும் இதுதான். எலுமிச்சை மரத்தில் முட்கள் அதிகம் இருக்கும். எலுமிச்சை தேவ கனியாக பார்க்கப்பட்டாலும், வீடுகளில் வளர்க்க கூடாது என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. மற்ற எந்த தாவரங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சம் எழுமிச்சை மரத்திற்கு உண்டு. ஒரு மரத்திலிருந்து நீங்கள் ஒரு கனியை பறித்ததும் அதன் உயிர் பிரிந்துவிடும். அதனால் எலுமிச்சைக்கு அது காயும் வரை உயிராற்றல் இருக்கும். அதனால் தான் அது தெய்வீக காரியங்களுக்கும், மந்திர, மாந்திரீக காரியங்களுக்கும் கூட அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

எலுமிச்சை மரத்திற்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் நல்ல சக்திகளை வெளியிடும் ஆற்றல் உண்டு என்றாலும், எலுமிச்சை மரம் முட்கள் நிரம்பிய மரமாக இருப்பதாலும், சில தீய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் வீட்டில் வளர்க்க கூடாது என்று கூறுகிறார்கள். முட்கள் நிரம்பி, படர்ந்து வளர்வதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் இம்மரங்களை நாடி வரலாம். எனவே உங்கள் வீட்டில் முட்கள் கொண்ட எந்த செடிகளையும், மரங்களையும் வளர்க்க வேண்டாம்.

மரம் போன்றே சிறிய அளவுகளில் இருக்கும் போன்சாய் மரங்களும் வீட்டில் வளர்க்க கூடாத தாவர வகை தான். இவ்வகை தாவரங்களை வீட்டிற்குள் வளர்க்காமல் வீட்டிற்கு வெளியே வைத்து வளர்க்கலாம். வெறும் அழகிற்காக வளர்க்கப்படும் இவ்வகைத் தாவரங்கள் வீட்டின் வடக்குத் திசையில் வைக்கக்கூடாது. போன்சாய் மட்டுமல்ல சிறிய சிறிய அளவுகளில் அழகிற்காக நீங்கள் செடிகள் வைத்தால் வடக்கு திசையில் வைக்க வேண்டும். அதே போல வீட்டின் கிழக்கு திசையில் அதிக உயரம் உள்ள மரங்களையும், பருமன் உள்ள மரங்களையும் கட்டாயம் வளர்க்கக்கூடாது.

புளியமரத்தை வீட்டில் கட்டாயம் வளர்க்க கூடாத மரமாக கூறலாம். புளிய மரத்துக்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் தன்மை உண்டு. நீங்கள் ஒரு வீடு வாங்கப் போகிறீர்கள் என்றால் அந்த இடத்தில் புளிய மரம் இல்லாத இடமாக வாங்க வேண்டும் என்று கூறுவார்கள், கேள்விப்பட்டதுண்டா? அதற்கு காரணம் புளிய மரம் சுவாச கோளாறுகள், மூப்பு போன்ற பிரச்சனைகளை தரும். உடல் ஆரோக்கியதிற்கு கெடுதல் விளைவிக்கும். எனவே வீட்டில் புளிய மரத்தை வளர்க்க கூடாது.

உங்கள் வீடுகளில் நீங்கள் வளர்க்கக்கூடிய செடிகள் அல்லது மரங்கள் பட்டுப் போய் விட்டால் அல்லது காய்ந்து போயிருந்தாலும் உடனே அதை அப்புறப்படுத்துவது நல்லது. முறையான பராமரிப்பின்றி வாடிவிடும் பூக்களும், தழைகளும் வெட்டிவிட வேண்டும். அதை அப்படியே விட்டு வைத்தால் வீட்டில் இருப்பவர்களின் மன நிம்மதி கெடும். குடும்பத்தில் சந்தோஷமான மனநிலை இருக்காது என்று கூறுவார்கள். இந்த வரிசையில் பருத்தி செடியையும் நம் வீட்டில் வளர்க்கக் கூடாத தாவரமாக பார்க்கப்படுகிறது. வீட்டிற்கு உள்ளேயும், வீட்டைச் சுற்றியும் பருத்தி செடி கட்டாயம் வைக்கக்கூடாது என்பார்கள். மேலும் அத்தி, விளா, நெல்லி, பனை, வாகை, எட்டி, எருக்கு, ஆமணக்கு, ஆல மரம், நாவல் மரம் போன்றவற்றையும் வீட்டில் வளர்க்காமல் இருப்பது நல்லது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வீட்டில் சுபிட்சமானது நிலையாக, நிறைவாக இருக்க, இன்று மாலை இந்த பூஜையை செய்ய தவறாதீர்கள்! வருடத்திற்கு 1 முறை வரும் இந்த அற்புத நாளில் சொல்ல வேண்டிய அற்புதமான மந்திரம்.!!

25.5.2020 இன்றைக்கு அப்படி என்ன விசேஷமான தினம்! என்ற சிந்தனை எல்லோருக்குமே வந்திருக்கும். ஏனென்றால், அனைவராலும் அறியப்படாத ஒரு சிறப்பான நாள் தான் இன்றைய தினம். அதாவது, ஒருவருக்கு சந்தோஷமான வீடு, அமைதியான சூழ்நிலை, ஆரோக்கியமான வாழ்க்கை, தடையில்லாத முன்னேற்றம், இவைகள் அனைத்தும் கிடைக்கப் பெற வேண்டும் என்றால், இந்த பூஜையை இன்று மாலை செய்வது மிகவும் சிறப்பானது. ‘நம்முடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றும், அப்படி என்ன விசேஷம் இன்று!’ என்பதைப் பற்றியும், இந்த பூஜையை முறைப்படி எப்படி செய்ய வேண்டும், எந்த மந்திரத்தை உச்சரித்து செய்ய வேண்டும், குறிப்பிட்ட எந்த நேரத்தில் பூஜை செய்தால் நல்லது, என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தேவலோகத்தில் இருக்கும் தேவலோக மங்கையர்கள், தங்களது வாழ்வு என்றுமே சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை நினைத்து பூஜை செய்த நாள் தான் இன்றையதினம். குறிப்பிட்டு சொல்லப்போனால் ரம்பை தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இறைவனை நினைத்து பூஜை செய்து வரத்தை வாங்கிய தினம் என்றும் கூறலாம். அதாவது ‘ரம்பா திருதியை’.

இந்த தினத்தில் இறைவனை மனதார வேண்டிக் கொண்டு, குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள், அம்பாளை மனதார  நினைத்துக்கொண்டு, நெய்யினால் செய்யப்பட்ட நெய்வேதியத்தை, இறைவனுக்குப் படைத்து தீபமேற்றி முறைப்படி, இன்று மாலை 5.45 மணியிலிருந்து 8.30 மணிக்குள்  இந்த மந்திரத்தை சொல்லி பூஜை செய்யவேண்டும். உங்களது கணவரும் இந்த பூஜையில் கலந்துகொண்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால் வீட்டில் இருமடங்கு சந்தோஷம் உண்டாகும் என்பது நம்பிக்கை. உங்களுக்கான மந்திரம் இதோ!

இந்த பூஜையில் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சாவித்ரி சரஸ்வதி பத்னீம் தேஹி புத்ரம் தேஹி க்ரஹேம் நமோஸ்துதே!

இந்த பூஜையில் கணவர் சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சாவித்ரி சரஸ்வதி பதீம் தேஹி புத்ரம் தேஹி க்ரஹேம் நமோஸ்துதே!

உங்களது கணவரால் பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரத்தை 108 முறை உச்சரித்து, அம்பாளை மனதார வேண்டிக் கொண்டாலே போதும். பூஜையை உங்கள் வீட்டு முறைப்படி செய்யலாம். சாதாரண வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி  செய்வீர்களோ, அதன்படி செய்தாலே போதும். நெய்யினால் செய்யப்பட்ட நெய்வேதியம் மட்டும் ஒன்று அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

திருமணம் ஆகாதவர்களும் இந்த பூஜையை செய்யலாம் தவறொன்றுமில்லை. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால், நல்ல கணவர் வேண்டும். நல்ல மனைவி வேண்டும் என்பதனையும், திருமண மாணவர்களாக இருந்தால் சண்டை சச்சரவு இல்லாத இல்லறம் அமைய வேண்டும் என்றும், நம்முடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லமுறையில் அமைந்து, நம்முடைய வீட்டில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதனையும் இறைவனிடம் வேண்டி கேட்கும் மந்திரம்தான் இது.

அதுவும் குறிப்பாக இன்றைய தினம் மாலை 5.45 மணியிலிருந்து 8.30 மணிக்குள் இருக்கும் இந்த சுபமான நேரத்தில், இந்த மந்திரத்தை உச்சரித்து வீட்டில் பூஜை செய்வது நம்முடைய வீட்டிற்கு மிகவும் நல்லது என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்பிக்கையுள்ளவர்கள் இந்த பூஜையியை நம்பிக்கையோடு செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴