Monday, 27 April 2020

பியூட்டி பார்லருக்கு போக முடியவில்லையா? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, 1/2 மணி நேரத்தில் ஃபேசியலை முடித்துவிடலாம்.!!

பெண்களுக்கு வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை. பியூட்டி பார்லர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தங்களுடைய முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது, என்று யோசித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வீட்டிலிருந்தே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தங்களுடைய முகத்தை, எப்படி ஃபேசியல் செய்வது போன்று அழகாக மாற்றி கொள்ளலாம் என்பதைப் பற்றி சுலபமான ஒரு குறிப்பை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஃபேசியலுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். வெளியில் சென்று எந்த பொருளையும் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமையலுக்காக பயன்படுத்தக்கூடிய பொருட்களை வைத்தே இந்த ஃபேஷசியலை 1/2மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம்.

Step 1: முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை முழுமையாக நீக்க  வேண்டும். வெறும் ஃபேரன் லவ்லி போட்டு இருந்தாலும் கூட, அதை முழுமையாக முகத்தில் இருந்து நீக்குவது அவசியம். இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி கொள்ளலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயாக இருப்பது அவசியம். எண்ணெயை 1/2 ஸ்பூன் அளவிற்கு உள்ளங்கையில் விட்டு இரண்டு கைகளிலும் தேய்த்துக்கொண்டு, முகம் முழுவதிலும் நன்றாக மசாஜ் செய்தால் உங்கள் முகத்தில் இருக்கும் க்ரீம் அனைத்தும் சுத்தமாக நீங்கி விடும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. தேங்காய் எண்ணை போட்டு சுத்தம் செய்வதில் எந்தப் பிரச்சினையும் வந்துவிடாது.

Step 2: இரண்டு நிமிடம் தேங்காய் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்த பின்பு, சூடாக கொதிக்க வைத்த வெந்நீரில், ஒரு காட்டன் துண்டை நனைத்து, முகம் பொறுக்கும் அளவிற்கு முகத்திலிருந்து தேங்காய் எண்ணெயை துடைத்து எடுக்கவேண்டும். அதிகப்படியான சூட்டோடு முகத்தில் வைத்து விடாதீர்கள். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கும் தேங்காய் எண்ணையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. சூடான அந்த காட்டன் துணி, தேங்காய் எண்ணெய் அனைத்தையும் முகத்திலிருந்து சுத்தமாக நீக்கி எடுத்து விடும்.

Step 3: அதன் பின்பு காய்ச்சாத பாலில் காட்டன் துணியை நனைத்து முகத்தை 10 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் தேன் இருந்தால் அந்த பச்சை பாலுடன் சிறிதளவு தேன் கலந்து கொள்ளலாம். அந்த காய்ச்சாத பாலை உங்களது முகம் உறிஞ்சும். காயக்காய மூன்று முறை முகத்தில் தடவிக் கொண்டே இருக்கலாம்.

Step 4: அதன்பின்பு தக்காளியை இரண்டாக வெட்டி, கொஞ்சம் சர்க்கரையை அந்த தக்காளியில் தொட்டு உங்கள் முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து கொடுக்கவேண்டும். லேசாக மசாஜ் செய்ய வேண்டியது அவசியம். 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து கொள்ளலாம்.

Step 5: அடுத்ததாக உங்களிடம் ‘பீல் க்ரீம்’ ஏதாவது இருந்தால் மூக்கின் மேல், தாடைப் பகுதி, உதட்டின் கீழ் பகுதியில் அப்ளை செய்தால், இந்தப் பகுதிகளை சுத்தம் செய்துகொள்ளலாம். அப்படி வீட்டில் இந்த க்ரீம் இல்லாதவர்கள், ஸ்பூலின் கீழ் பகுதியை, லேசாக மூக்கில் அழுத்தம் கொடுத்து எடுத்தால், அந்த பிளாக் டெட் செல்ஸ், ஒயிட் டெட் செல்ஸ் எல்லாம் வெளியில் வந்துவிடும். (அதாவது இடது கையால் உங்களது மூக்கை அழுத்தி பிடித்துக் கொள்ளுங்கள். வலது கையை வைத்து, ஸ்பூனில் லேசாக அழுத்தி எடுக்கும்போது குட்டி குட்டி முடிகள் எல்லாம் வெளியில் வந்துவிடும்).

Step 6: அதன்பின்பு கோதுமை மாவு, ஒரு ஸ்பூன், காபி பவுடர் அரை ஸ்பூன், தக்காளி விழுது, இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்டாக தயாரித்து கொள்ள வேண்டும். அந்தக் கலவையை முகம் முழுவதும் கீழிருந்து மேல் பக்கமாக தடவிக் கொள்ளவேண்டும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவிப் பாருங்கள். பியூட்டி பார்லர் சென்று ஃபேசியல் செய்துகொண்ட அதே பொலிவு உங்கள் முகத்தில் தெரியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேற்குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தையும் உங்களுடைய கழுத்துப் பகுதியிலும் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். உங்களுடைய முகம் எப்போதெல்லாம் பொலிவிழந்து காணப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

உங்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் போதே, நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்! என்னன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறீர்களா?

நம்முடைய வாழ்க்கையின், முதல் தத்துவம் என்ன? நம்மிடம் இல்லாத ஒன்றை தேடுவதான்! இரண்டாவது நம்மிடம் இருக்கும் நல்லதை நாமே இழந்துவிட்டு, இழந்து விட்டோமே என்ற துயரத்தில், மீண்டும் அதை தேட தொடங்குவோம். எடுத்துக்காட்டாக, புரியும்படி சொல்லப்போனால், எந்த ஒரு உறவின் அருமையையும் இருக்கும் போது தெரியாது. இறந்த பின், அல்லது பிரிந்தபின் தான் உணர்வோம். பணத்தின் அருமை அதிகமாக செலவு செய்துகொண்டிருக்கும்போது தெரியாது. அது நம் கையில் இல்லாத போது தான் உணர்வோம். மகிழ்ச்சியின் அருமை துயரத்தில் தள்ளப்படும் போது தான் நமக்குத் தெரியும். மகிழ்ச்சி இருக்கும்போதே அதை அனுபவிக்க வேண்டும் என்று நாம் நினைப்பதே இல்லை.

இவ்வாறாக நம்மில் பல பேர் நம்மிடம் இருப்பதை இழந்துவிட்டு, பலவிதமான தேடல்களிலேயே வாழ்க்கையை தொலைத்து வருகிறோம் என்று தான் கூற வேண்டும். சரி. உங்களுக்கு, உங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான, சரியான சூழ்நிலை அமைந்திருந்தது. அந்த சமயத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். எந்தெந்த தெளிவான சிந்தனை உங்களுக்குள் வரவேண்டும். ஏனென்றால் உங்களுடைய வாழ்க்கை இதே பாதையில் சென்று விடப்போவதில்லை. உங்களது வாழ்க்கை பாதை எப்படி மாறினாலும் அதை வாழ தேவையான மன திடம், மன தைரியம் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியவை எவை எவை என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் இளைஞர்களாக இருந்தாலும் கூட இவைகளை பின்பற்றினால் உங்களுடைய வாழ்க்கை சீராகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதலாவதாக, சொல்லப்படுவது சரியான நேர்மறை எண்ணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும். நேர்மறை எண்ணங்கள் என்றால் நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாமே நன்மைக்குத்தான், என்று கண்மூடித்தனமாக எதையும் நம்பி விடக்கூடாது. இந்த செயலை நாம் செய்வதன் மூலம், என்ன நடக்கும்? இந்த செயல்பாட்டின் மூலம் அதிகப்படியான நன்மைகள் இருந்தாலும் அதில் எவ்வளவு நன்மை நம்மைச் சேரும், அந்தச் செயல்பாட்டின் மூலம் எவ்வளவு தீமை நம்மை வந்து சேரும் என்ற பகுத்தறிய வேண்டிய ஆற்றல் உங்களுக்கு இருக்க வேண்டும். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருக்க, கண்மூடித்தனமாக நம்பி எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டு பிரச்சனைகளை பெரிதாக்கி கொள்ளக்கூடாது.

உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு நீங்கள் தான் முடிவெடுத்து பழகவேண்டும். முடிவெடுப்பதை தள்ளிப்போடவும் கூடாது. உங்களுடைய பிரச்சனைக்கு முடிவு எடுக்கும் உரிமையை அடுத்தவர்களுடைய கையிலும் கொடுக்கவும்கூடாது. உங்களுடைய பிரச்சனைக்கு நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். இளைஞர்களாக இருந்தாலும் கூட, உங்களுக்கு முடிவினை சரியாக எடுக்கத் தெரியவில்லை என்றாலும்கூட பரவாயில்லை! சில சமயத்தில் தவறான முடிவுகள் கூட, சரியான பாடத்தைக் கற்றுத் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களுடைய அனுபவம் உங்களை இன்னும் தெளிவுபடுத்தும்.

உங்களுடைய மனதை எப்போதும் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மன தைரியத்தை அதிகப்படுத்திக் கொள்ள, என்ன புத்தகங்கள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் வாசித்து பழகுங்கள். திடீரென்று உங்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டு விட்டால், அதை எதிர்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு கட்டாயம் தேவை அதற்கான பயிற்சியை இப்போதிலிருந்தே தொடங்குவது நல்லது.

அடுத்தவர்களுடைய வாழ்க்கையை, நீங்கள் முன்னுதாரணமாக எடுத்துப் பழக வேண்டும். அதாவது நன்றாக வாழ்ந்தவர்கள் என்று சொல்வார்கள் அல்லவா? அவர்களை ரோல்மாடலாக எடுத்துக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையை எப்படி அணுகுவது என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று. வாழ்க்கை என்றால் இதுதான் என்ற சில தத்துவங்கள் உள்ளது. அந்த தத்துவங்களையும் முடிந்தவரை கற்று வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

நீங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகும் இளைஞர்களாக இருந்தாலும், வாழ்க்கையைத் தொடங்கியவர்களாக இருந்தாலும், வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை பணம். இதை நீங்கள் சரியான விதத்தில் கையாளக் கற்றுக் கொண்டால் கடன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். உங்கள் கைக்கு பணம் வரும் போதே அதை சேமிப்பதில் உங்களுடைய சாமர்த்தியத்தை காட்டுங்கள்!

இறுதியாக ஒன்று! எது செய்வதாக இருந்தாலும் அதை சந்தோஷமாகவும், இஷ்டப்பட்டும் செய்ய வேண்டும். காலத்தின் சூழ்நிலை காரணமாக நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு விருப்பமில்லாத தாக இருந்தாலும், அதன் மேல் ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேறி விடலாம். மகிழ்ச்சி உங்களை தேடி வரும் என்பதை இறுதியாக சொல்லி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இன்று 27.4.2020 சித்திரை சதுர்த்தி! விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது எல்லா சங்கடங்களும் தீரும்.!!

பொதுவாகவே திங்கட்கிழமை அன்று விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் சித்திரை மாத சதுர்த்தி தினம் என்பதால், இந்த தினத்தில் விநாயகப்பெருமானை வீட்டிலிருந்தே, மனதார நினைத்து வழிபடுவதன் மூலம், இன்றைய சூழ்நிலையில் நமக்கு இருக்கும் தீர்க்கமுடியாத சங்கடங்களுக்கு கூட, சுலபமான தீர்வு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நம்முடைய சங்கடங்களை தீர்க்கப் போகும் அந்த ஒரு வரி மந்திரம் என்ன என்பதைப் பற்றியும், அந்த மந்திரத்தை குறிப்பாக எத்தனை முறை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே எல்லா வகையான பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும், முழுமுதற் கடவுள் என்றால், அது விக்னங்களை தீர்க்கும் விநாயகர் தான். சுலபமான முறையில் எல்லோராலும் வணங்கப்படும் தெய்வம் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. எல்லோருக்கும் மிகுந்த பிடித்தமான கடவுள் என்றாலும், அந்த வரிசையில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். இத்தனை சிறப்புகளை பெற்றுள்ள இந்தப் பிள்ளையாரை இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபடுவதன் மூலம், நம்மால் அதிகப்படியான பலனை பெற முடியும். உங்களுக்கான மந்திரம் இதோ

ஓம் கற்பகநாதா அருள்புரிவாய்!

இந்த மந்திரத்தை காலை வேளையில் உச்சரிக்கலாம். இன்று உங்களுடைய காலை நேர பூஜை முடித்து இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிக சிறப்பான பலனை தரும். உங்களுடைய பூஜை அறையில் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு, விநாயகருக்கு உங்களால் முடிந்த நைய்வேத்தியம் வைத்து, தீப ஆராதனை காட்டி முடித்து, அதன் பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்து, உங்களுடைய சதுர்த்தி விரதத்தை முடிப்பது மிகவும் உகந்தது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Sunday, 26 April 2020

உங்கள் வீட்டில் மருதாணி செடி இருக்கா? கண்டிப்பா நீங்க இந்த தவறை செய்யவே கூடாது.!!

நம்முடைய வீட்டில் மருதாணி செடியை வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த மருதாணி செடிக்கு வேறு என்ன மருத்துவ குணநலன்கள் உள்ளது? இந்த செடியில் இருக்கும் இலை, பூ, காய், குச்சி, இவைகள் அனைத்தையும் எந்த வகையில் பயன்படுத்தினால் என்ன நன்மைகளை அடையலாம்? என்பதை பற்றியும், வீட்டில் மருதாணி செடி வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாத முக்கியமான ஒரு தவறு என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த வீட்டில் கட்டாயமாக துஷ்ட சக்தி நெருங்கவே நெருங்காது. காரணம் இந்த மருதாணி செடிக்கு இருக்கும் வாசம் தான். இந்த வாசத்திற்கு துஷ்ட சக்தி மட்டுமல்ல, சில வகையான பூச்சி பொட்டுகளும் உங்கள் வீட்டின் அருகில் நெருங்காது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் எந்த ஒரு பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்திகளும் நெருங்காமல் இருக்க வேண்டுமென்றாலும் அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட வேண்டும் என்றாலும், இந்த மருதாணி விதைகளை செடியிலிருந்து எடுத்து, நன்றாக வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு வெள்ளிக்கிழமைதோறும் சாம்பிராணி தூபம் போடும் போது, அந்த நெருப்பில் சாம்பிராணி பொடியுடன் சேர்த்து இந்த மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து தூபம் போட்டால், அந்த வாசத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியாக இருந்தாலும் அது நீங்கி விடும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. தினம்தோறும் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுபவர்களாக இருந்தாலும்கூட, தினமுமே இந்த மருதாணி காய்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் தாந்திரீக வித்தைகளில் இந்த மருதாணி விதைகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மருதாணிச் செடியில் இருக்கும் மருதாணி பூவிற்கு, மன அழுத்தத்தை குறைக்கக் கூடிய சக்தி இருக்கிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்கள், இந்த மருதாணி செடியில் இருக்கும் பூக்களை பறித்து முடிந்தால் தலையணையாக செய்து தலைக்கு அடியில் வைத்து உறங்கலாம். முடியாதவர்கள் சிறிது பூவை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாக கட்டி, தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். இந்த மருதாணி பூவில் இருந்து வரக்கூடிய நறுமணம், உங்களது கண்களை தூக்கம் தழுவுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

மருதாணி இலை. இந்த மருதாணி இலைகளை அறைத்து கைகளிலும் கால்களிலும் வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். இருந்தாலும் கால் நகங்களில் வரும் சேற்றுப்புண், பாத வெடிப்பு, கை நகங்களில் சொத்தை இவைகளுக்கு நல்ல மருந்தாக இந்த மருதாணி இலை விழுது இருந்துவருகிறது. வெறும் மருதாணி இலையை மட்டும் அறைக்காமல் அதில் ஒரு கொட்டைப்பாக்கு வைத்து அறைத்தால் இன்னும் அதிகப்படியான பலனை அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்புண் உள்ளவர்கள், மருதாணி செடியில் இருக்கும் இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து அந்த கஷாயத்தை வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். வாய்ப்புண் ஆறும் வரை வாரத்திற்கு ஒரு முறை இந்த முறையை பின்பற்றி வரலாம்.

அடுத்ததாக வீட்டில் ஒருவருக்கு எப்படி பட்ட வாஸ்த்து பிரச்சனை இருந்தாலும், அந்த தோஷத்தை நீக்கக் கூடிய சக்தியும், இந்த மருதாணிக்கு செடிக்கு உள்ளது என்பது வாஸ்து நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருப்பார்கள் சிலருக்கு, அந்த வீட்டின் வாஸ்து ஒத்துவராது. வாடகை வீட்டை மாற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கும். சிலபேர் சொந்த வீட்டில் இருந்தாலும், பிரச்சனை இருக்கும். இப்படிப்பட்டவர்கள் ஒரு சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் அந்த பிரச்சனையிலிருந்து வரும் விளைவுகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக மீதமிருப்பது மருதாணி குச்சு. இந்த மருதாணி குச்சிகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து உங்கள் வீட்டு அலமாரியில் வைத்து வந்தால் கண்ணுக்கு தெரியாத பூச்சி தொல்லையில் இருந்து விடுபடலாம். காரணம் இதிலிருந்து வெளிப்படக்கூடிய வாசம்.

மருதாணி செடியியை வீட்டில் வைத்திருந்தால், குழந்தைகள் அந்த இலைகளை பறித்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் துவர்ப்புத் தன்மை வயிறு கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.

இறுதியாக மருதாணி செடியை வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள், யாருக்கேனும் அந்த மருதாணி இலைகளை பறித்து கொடுப்பதாக இருந்தால், இலவசமாக கொடுக்கக்கூடாது. அதாவது, உங்கள் சொந்தக்காரருக்கு அந்த செடியின் இலைகளை கொடுப்பதாக இருந்தாலும், ஒரு ரூபாயை மட்டுமாவது பெற்றுக்கொண்டு அந்த இலைகளை தாருங்கள். உங்கள் வீட்டு மகாலட்சுமி அல்லவா? இலவசமாக கொடுக்க கூடாது என்பதற்காகத்தான் இது.

விளக்கு வைத்தபின் மருதாணி செடியின் இலைகளை யாருக்கும் தானமாக கொடுக்காதீர்கள். காசு வாங்கிவிட்டு கூட விளக்கு வைத்த பின்பு கட்டாயமாக மருதாணி இலையை யாருக்கும் கொடுக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் பொழுது சாய்ந்த பிறகு செடியிலிருந்து இலைகளை பறிக்க மாட்டார்கள். இருந்தும், முன்பாகவே பறித்து வைத்திருந்தால் கூட விளக்கு வைத்த பின்பு வீட்டு வாசற்படியை மருதாணி செடி இலை தாண்டக் கூடாது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

மந்திரம், தியானத்தின் போது கொட்டாவி வருவது சரியா? தவறா? ஏன் கொட்டாவி வருகிறது?

பொதுவாகவே தியானம் அல்லது யோகா செய்யும் போதோ? மந்திரம் உச்சரிக்கும் போதோ? கொட்டாவி வருவது நல்லதா? கெட்டதா? என்று பலரின் கேள்வியாக இருக்கும். இதற்கு காரணம் என்ன என்று சிந்தனையில் தோன்றியிருக்கும். கொட்டாவியை பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் இன்று வரை சரியான காரணம் கூற முடியவில்லை. கொட்டாவி என்ற வார்த்தையை கேட்டாலே சிலருக்கு கொட்டாவி வந்து விடும். அருகில் இருக்கும் நபர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் வந்துவிடும். சாதாரணமாக கொட்டாவி வருவது மற்றும் மந்திரம் சொல்லும் போது கொட்டாவி வருவதும் ஒரே காரணம் தான். சிலர் இறைவன் ஆட்கொள்கிறார் அதனால் மந்திரம் உச்சரிக்கும் போது கொட்டாவி வருகிறது என்றும், தீய சக்திகள் வெளியேறுகிறது அதனால் கொட்டாவி வருகிறது என்றும் கூறுகிறார்கள். உண்மை அது அல்ல. அதை பற்றிய அலசல் இதோ!!

மனித உடலுக்கு தேவையான முக்கிய வாயு பிராண வாயு. நாம் சுவாசிக்கும் காற்று பிரணவாயுவாக இதயத்திற்கு செல்கிறது. இதயம் அந்த காற்றை மற்ற உறுப்புகளுக்கு பகிர்ந்தளிக்கிறது. இவ்வாறு பகிர்ந்து கொடுக்கப்படும் பிராண வாயு மூளைக்கும் செல்கிறது. ஆனால் மூளைக்கு அது போதவில்லை என்றால் என்ன செய்யும்? மூளையானது தனக்கு தேவையான பிராண வாயுவை எடுத்து கொள்ள உடலுக்கு கொட்டாவி விடுமாறு கட்டளையிடும். வாயை திறந்து கொட்டாவி விடும் போது மூளை தனக்கு தேவையான காற்றை உள் இழுத்து கொள்ளும். பின்னர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்யும். இதுவே கொட்டாவி வருவதற்கு முதல் காரணம்.

அடுத்து உடல் சோர்வு காரணமாக கொட்டாவி வரும். உடலுக்கு கட்டாயம் ஓரளவு பகலிலும் ஓய்வு தேவை. இரவில் தான் நன்றாக தூங்குகிறோமே? பிறகு எதற்கு ஓய்வு என்று கேள்வி கேட்க கூடாது. இரவில் தூங்குகிறோம் சரிதான். ஆனால் அதற்காக பகல் முழுவதும் இயந்திரம் போல் கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் உடலை கட்டாயப்படுத்தி இயக்கி கொண்டே இருந்தால் அதனால் முடியாமல் போகலாம். அந்த சமயத்தில் தனக்கு ஓய்வு தேவை என்பதை உடலானது கொட்டாவி விட்டு தெரியப்படுத்தும். அதையும் பொருட்படுத்தாமல் சிலர் இயங்கி கொண்டிருப்பார்கள். இதனால் உடலானது சோர்வுறும். பலவீனமடையும். கை, கால், உடல் வலி எடுக்க துவங்கும். உடல் சுறுசுறுப்புடன் செயல்பட கொட்டாவி வரும்போதே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வேலையை சிறப்பாக செய்யலாம்.

மந்திரம், தியானம் போது ஏன் கொட்டாவி வருகிறது? யாரோ ஒருவர் சொன்னார்கள், இந்த மந்திரம் சொன்னால் நல்லது நடக்கும், இந்த தியானம் செய்தால் மன அமைதி கிட்டும் என்று, அதனால் செய்கிறேன்!! என்று முழு ஈடுபாடு இல்லாமல், அவ நம்பிக்கையுடன் செய்தால் அதாவது பிடிக்காத ஒரு விஷயத்தை ஏதோ பிரதிபலன் கருதி செய்தால் கொட்டாவி கட்டாயம் வரும். இவ்வாறு இல்லாமல் ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் செய்தும் கொட்டாவி வந்தால் உங்கள் மனம் ஒருநிலையில் இருக்கிறது ஆனால் உடல் தன்னை தயார் செய்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.

இதற்கு காரணம் அதிக நேரம் கண் விழிப்பது, ஓய்வில்லாமல் உழைப்பது, செல்போன், கணினி, போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தி கண்களை அயர்வுற செய்வது, மன அழுத்தம், தேவையற்ற சிந்தனைகள் தொடர்ந்து செய்வது போன்ற காரணங்களால் மூளையின் வெப்ப நிலை உயர்கிறது. அதனை சமன் செய்ய மூளை கொட்டாவி மூலம் பிரணவாயுவை பெறுகிறது.

சிலருக்கு புத்தகம் படித்தாலே கொட்டாவியுடன், தூக்கமும் வந்து விடும். இதற்கு காரணம் புத்தகத்தில் இருக்கும் கருத்துகளில் உங்களுக்கு ஆர்வம் இல்லை. ஆர்வமுடன், மிகவும் பிடித்து ஒரு செயலை செய்யும் போது கொட்டாவி வராது. உதாரணத்திற்கு இரவில் உங்கள் உடல் சோர்வுற்றிருக்கும் போதும் உங்களுக்கு பிடித்த வீடியோ காட்சிகள் அல்லது திரைபடங்கள் பார்த்து கொண்டிருந்தால் உங்களுக்கு கொட்டாவியும் வராது, தூக்கமும் வராது. வந்த தூக்கமும் காணாமல் போய்விடும். ஏன்? உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்கிறீர்கள். அதுவே பிடிக்காத விஷயத்தை செய்யும் போது அலுப்பு ஏற்படும். இதனால் உங்களை அறியாமல் கொட்டாவி வருகிறது. மந்திரம் உச்சரிக்கும் போது கொட்டாவி வந்தால் ஒன்றும் தவறில்லை. இன்னும் ஈடுபாடு கொண்டு, முழு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் அவ்வளவு தான். மந்திரம் கூறினால் உடனே இறைவன் நேரடியாக எல்லாம் கொட்டாவி மூலம் அருள் புரிந்து விடமாட்டார். இறையருள் உங்கள் வாழ்வில் கிட்டும் என்பதே உண்மை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தொழுவோரை வளமாக்குவாள் எழுவரைமுக்கி சப்த கன்னியர்.!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த நாசரேத் எனும் ஊருக்கு அருகிலுள்ள கிராமத்துக்கு, எழுவரைமுக்கி என்று பெயர். என்ன... பெயரே காரணப் பெயராக உள்ளதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆம் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தை உள்ளடக்கியதே இந்த பெயர். ஊருக்கு வடபுறம் ஊருணி உள்ளது. குளத்தை விட பெரிதாய், ஏரியை விட பரப்பளவில் சிறிதாய் இருப்பதுதான் ஊருணி. கோடையிலும் நீர் அளவு குறைந்திருந்தாலும் வற்றாமல் இருக்கும் இந்த ஊருணிதான். பின்வரும் கதைக்கான களம். பல இனத்தவர்கள் வசித்தாலும் சாதியின் பெயரால் எந்தப் பிளவும், பகையும் உருவானதில்லை. மாறாக அண்ணன் தம்பியாய், அக்கா, தங்கையாய் உறவுதான் இருந்தது. பனை மரங்கள், வாழை தோட்டங்கள், தென்னந்தோப்புகள் என இயற்கை வளத்துடன் இருந்த இந்த கிராமத்தில் தோழமையோடு ஆண்கள், பெண்கள் பழகி வந்தனர்.

அப்படித்தான் ஏழு சிறுமிகளும் உற்ற தோழிகளாக வளர்ந்து வந்தனர். பருவம் வந்தபோதும் முந்தையதை விட பலமானது அவர்களின் நட்பு. அந்த ஏழுபேரும் காலையில் தனது வீட்டில் பெற்றோர் கட்டளைக்குட்பட்டு வீட்டு வேலைகளை செய்யும் அவர்கள். பகல் பத்து மணி ஆனதும் வீட்டிலுள்ள அனைவரின் துணிகளையும் எடுத்துக்கொண்டு ஊருணிக்கு சென்று துணி துவைத்து, விளையாட்டாக நீராடி எடுத்து முடித்துவிட்டு பன்னிரெண்டு மணி வாக்கில் வீடு திரும்புவர். மதியம் கஞ்சிதான்(பழைய சாதம்) உணவு. எவர் வீட்டில் கூட்டு அதிகம் இருந்ததோ. ஏழு பேரும் பங்கிட்டு கொள்வார்கள். பகல் 2 மணி முதல் 4 மணி வரை பல்லாங்குழி ஆடுதல், தாய கட்டை விளையாடுவது என பொழுதை கழிக்கும் ஏழுபேரும், மாலை நான்கு தாண்டியதும் சமையலில் இறங்கி விடுவார்கள்.
சமையலில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அவர்களது ஏழுபேரில் இருக்கும் நாலு பேரோடு பாட்டிகளிடம் விளக்கம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்வார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் சமையலை விதவிதமாக செய்வார்கள். ஏன்? மாலையில் சமையல் என்றால் வேலைக்குப் போன தந்தையும், தாயும், உடன் பிறந்த ஆண்களும் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். அப்போது சாதம் சூடாக இருக்க வேண்டும் என்பதற்காக, கிராமங்களில் பெரும்பாலான ஏழை, எளியோர் வீட்டில் மாலையில்தான் சமையல் செய்வார்கள். சாப்பாட்டுக்கான இலையையும் அவர்களே ஊருணிக்கு துணி குறைவாக கொண்டு போகிற அன்று வெட்டி வருவார்கள். அவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் வாலிபன் ஒருவன் உதவி செய்வான். தை அமாவாசை, ஆடி அமாவாசை, கடைசி வெள்ளி முதலான நாட்களில் பாயாசத்துடன்தான் சாப்பாடு, அந்த நாட்களில் ஏழுபேரும் ஒருவரை மாற்றி ஒருவர் தங்கள் வீட்டு பாயாசத்தை கொண்டு கொடுத்து சுவை பார்க்கச் சொல்வார்கள்.
‘‘ஏட்டி, இது நான் செஞ்ச பாயாசம்’’ என்று ஒருத்தி கூறினாள். ‘‘புழுவாதட்டி, உன் ஆத்தா செஞ்சிருக்கும்’’ என்று உரிமையாய் அவர்களுக்குள் பேசுவதும் உண்டு. அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் அவர்களிடம் உரையாடும்போது, உங்க ஏழு பேரும் ஒருத்தனதான் கட்டிக்கப் போறேளா, இப்படி பாசக்காற புள்ளைங்களா இருக்கேளே! என்று பெருமிதமாக கூறுவர். அந்தக் காலத்தில் கன்னிப்பெண் மாதவிடாய் நாட்களில் ஊருணியில் குளிக்க கூடாது. கன்னி தீட்டு தண்ணிக்கும் ஆகாது என்பது வழக்கில் இருந்தது. அதற்கு காரணமும் உண்டு, கோயிலுக்கு விரதம் இருப்பவர்கள் நீராட வரக்கூடும் என்பதாலும், பேய், பிசாசுகள் பிடித்து விடும் என்ற அச்சத்தாலும்கூட அதை எழுதப்படாத சட்டமாக வைத்திருக்கலாம். ஆகவே அந்த நாட்களில் ஏழுபேரில் எண்ணிக்கை குறையும். அவ்வாறு குறைவதை கூட அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டிகள்.
‘‘புள்ளங்களா, இன்னைக்கு என்ன நெட்டச்சி வரல, வெள்ளச்சியும் வரல இரண்டு பேருக்கும் வீட்டுக்கு ஆகாதா’’ என்று கேள்வி கேட்பார்கள். அந்த அளவுக்கு ஏழுபேரின் நட்பு வலுவாக இருந்தது. ஒரு நாள் பகல் பத்துமணி போல தோழிகள் ஏழு கன்னியரும் குளிப்பதற்காக வீட்டிலிருந்து ஊருணி நோக்கி நடந்து வருகின்றனர். செம்மண் வீதியில் ஆடு, மாடு போட்ட சாணம், புழுக்கை இவற்றை மிதித்து விடாமல் பார்த்து பார்த்து நடந்து வருகிறார்கள். முந்தைய நாள் அதிகமாக துணி துவைத்ததால், அன்று தலை துவத்த மட்டும் ஒரு துணியும், அணிந்த ஆடையும், குளித்த பின்பு அணிந்து வருவதற்கான ஆடையும் கொண்டு ஏழு பேரும் இடுப்பில் குடமும் கொண்டு வருகிறார்.
செம்மண் வீதியை பாவாடை துடைத்து வருவதுபோல் வந்த பெண்களை பார்த்து எதிரே வந்த ஒரு பெண், ‘‘ஏ, புள்ளங்களா, பாவாடையில ஒரு தும்ப எடுத்து இடுப்பில சொருகிட்டு போங்கட்டி, தெருவ தூத்துக்கிட்ட போறியோ’’ என்று கூற பதிலுக்கு ‘‘சரி அக்கா’’ என்று ஒருத்தியும் ‘‘சரி, சித்தி’’ என்று ஒருத்தியும், ‘‘சரி மைனி’’ என்று மற்றொருத்தியும், ‘‘சரி அத்தை’’ என்று நாலு பேரும் சொல்லிக்கொண்டு நடையை வேகமாக்கினார்கள். அந்த வழியாக ஆடுகளை ஓட்டி வந்த வாலிபன் அந்த ஏழுபேரையும் பார்த்து ‘‘இங்க என்ன ஓட்டப்பந்தயமா வச்சிருக்கு, இம்புட்டு விருசில போறியே, குளத்தில தண்ணி ஒண்ணும் வத்திப்போவாது. மெல்லமா போங்க’’ என்றான்.‘‘ஏல, உன் ஜோலிய பாத்திட்டு போல’’ என்றாள் ஒருத்தி. அப்போது ஆடு மேய்க்கும் வாலிபன். ‘‘தரை அதிருதுல்லா, பூமித்தாய் சாவம் போடுவா’’‘‘அது எங்களுக்கு தெரியும் நீ போ மாக்கான்.’’ என்றாள் மற்றொருத்தி.
‘‘ஏட்டி என்ன மாக்கான்னா’’ சொல்லுதே, (மாக்கான்னா முட்டாள் என்று அர்த்தம்)‘‘ஏல இந்தாரு ஏட்டி, ஓட்டின்னேன்னா பல்லு தட்டிப்போடுவோம்’’ என்றாள் இன்னொருத்தி. ‘‘உங்க கிட்டெல்லாம் மனுஷன் பேசுவானா’’ என்றபடி அந்த ஆடு மேய்க்கும் வாலிபன் தனது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வேறு திசை நோக்கி பயணித்தான். ஏழு கன்னியர்களும் ஊருணி வந்து சேர்ந்தனர். ஒருத்தி நீருக்குள் இடுப்பளவு இறங்கி விட்டு ‘‘ஏய், மேல உள்ள தண்ணி சுடுதுட்டி, உள்ளே குளிருதுட்டி’’என்றாள். ஏழு பேரும் கட்டிய உள்பாவாடையோடு ஊருணிக்குள் இறங்கி குளித்தனர். மற்ற துணிகளையும் மாத்த வேண்டிய துணியையும் ஊருணி கரையோரம் இருந்த ஆலமரத்தின் கீழ் வைத்திருந்தனர். தொட்டு விளையாட்டு காரணமாக குளிக்க இறங்கியவர்கள் நேரம் போனதே தெரியாமல் குளித்துக் கொண்டிருந்தனர்.
தன்னை மாக்கான் என்ற காரணத்தால் ஏழு பெண்கள் மீதும் கோபம் கொண்டிருந்த அந்த ஆடுமேய்க்கும் வாலிபன். அந்த பெண்களிடம் குறும்பு செய்ய வேண்டும் என்று எண்ணத்தோடு ஊருணி கரைக்கு வந்தான். ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகள் அனைத்தையும்  மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டான். இதைப்பார்த்துவிட்ட பெண்கள் ஏழுவரும், ஆடைகளைக் கொடுத்துவிடும்படி கெஞ்சினர். அவன் கேட்கவில்லை. சிறிது தூரம் சென்று மரத்தின் பின்னே மறைந்து நின்று கொண்டான். பெண்கள் ஏழுபேரும் கண் கலங்கினார்கள். செய்வதறியாது திகைத்தனர். எப்படிக் கரையேறுவது? என்று புரியவில்லை. தண்ணீருக்குள்ளே நின்றதால் கால்கள் விறுவிறுத்துப்போனது. ஏழுவரும் பேசி, ஒரு முடிவுக்கு வந்தனர். அந்த முடிவின்படி ஏழு பேரும் ஊருணிக்குள் மூழ்கினார்கள். அதன் பிறகு அவர்கள் எழுந்திருக்கவே இல்லை.
சோதித்தது போதும் என்று தனக்குள் ஆசுவாசப்படுத்திக்கொண்ட ஆடுமேய்க்கும் வாலிபன் துணிகளோடு உருணிக்கு வந்து தேடினான். ஒவ்வொரு வரையும் பெயர் கூறி அழைத்தான். யாரும் எழுந்து வரவில்லை. கரையில் நின்று கத்தியவன். கடவுளை வேண்டி தான் அறியாது செய்த தவறை உணர்ந்து கதறினான். யாருக்கும் கேட்க வில்லை, கடவுளும் செவி மடுக்கவில்லை. ஏழு பேர் பெற்றோரிடமும் என்ன பதில் சொல்லுவோம். ஊரார்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் உரைக்கப்போகிறோம். இனி எப்படி இந்த மண்ணில் வாழப்போகிறோம். தனக்கும் கூட பொறந்தவள் இருக்காளே, விளையாட்டாக செய்த காரியம் ஏழுபேர் சாவில முடிந்து விட்டதே என்று மனம் வருந்திய வாலிபன், அந்த ஊருணியிலேயே வீழ்ந்து மாண்டான். ஊருக்குள் ஏழு பெண்களைக் காணாமல் பெற்றோர்கள் தேட, அன்றிரவு ஊர் பூசாரியின் கனவில் ஏழு பெண்களும் காட்சி தந்து வனப்பகுதியில் தெய்வமாய் தாங்கள் எழுந்தருளியிருக்கிறோம் எனச்சொல்லி, ‘எங்களை பூஜித்து வழிபட்டால், அந்த குடும்பத்தையும், இந்த ஊரையும் வளமாக்குவோம்’ என்று கூறினர். அதன்படி அந்த ஏழுபேருக்கும் கோயில் எழுப்பி அந்த ஊர்க்காரர்கள் வழிபட்டு வருகின்றனர்.
ஏழுபேர் ஊருணியில் மூழ்கி இறந்ததால் அந்த கிராமத்தின் பெயர் அன்று முதல் எழுவரைமுக்கி என்று அழைக்கப்பட்டது. அந்த கோயில் கன்னிக்கோயில் என்றும் சப்த கன்னியர்கள் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. எழுவரைமுக்கி அருகேயுள்ள பெட்டைக்குளம் வனப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசப்தகன்னியர் திருக்கோயில். ஆடு மேய்த்த வாலிபன் நினைவாக ஊருணியில் நடுகல் உள்ளது. எழுவரைமுக்கி கிராமத்தில் சப்தகன்னியருடன், அய்யனார் மற்றும் முத்துபார்வதி அம்மன் ஆகியோரையும் சேர்த்து ஒன்பது  தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர் முத்துபார்வதி அம்மன் கோயில் பூசாரி மணிப்பிள்ளை கூறும்போது, இங்குள்ள ஊருணியில் குளிச்ச 7 கன்னிமார்களின் துணிகளை ஆடு மேய்ச்சவன் எடுத்து வச்சுக்கிட்டான். அவன் கொடுக்க மறுத்ததுனால ‘நாங்கள் கல்லாய் சமைகிறோம். நீயும் கல்லாய்ப் போ’ என்று சபித்துவிட்டு ஏழு கன்னியரும் கல்லானார்களாம். அவங்க நீரில முங்கின அன்னைக்கு ராத்திரி  ஊரம்மன் கோயிலான முத்து பார்வதி அம்மன் கோயில் பூசாரியின் கனவில் தோன்றிய சப்த கன்னியர், ‘நாங்கள் ஊருணியில் இருந்து சற்று தொலைவில் கற்சிலையாய் கிடக்கிறோம். எங்களுக்கு நிலையம் போட்டு பூச பண்ணுங்க, ஊர் செழிக்கும்’ என்று கூறி மறைந்தார்களாம்.
‘‘கார்த்திகை இரண்டாவது செவ்வாய் தோறும் இங்கு பாயசத்தை பெருக்கி படப்பு கஞ்சி ஊத்துறோம். பூசாரியான நான் தான் முன்னாடி வருவேன், என்னைத் தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகளை பின்னாடி அலங்கரிச்சு அழைத்து வரவும், கணியான் பின் தொடர விழா நடக்கிறது. ஏழு சிறுமிகளுக்கும் கன்னிமார் நினைவாக குங்குமம், பூ, மஞ்சள் கொடுத்து கௌரவிக்கிறோம். அவர்களுக்கு பரிமாறிய பின்பு மற்றவர்களுக்கு பனை ஓலைப்பட்டையில் கஞ்சி வழங்குகிறோம்’’ என்கிறார். (பட்டை என்பது பனை ஓலையால் செய்யப்பட்டது) அருகிலுள்ள ஊரில் வசிக்கும் தம்பதியருக்கு வெகு நாட்களாகக் குழந்தை இல்லை. அவர்கள் இங்கு வந்து சப்தகன்னியரை வழிபட்டுச் செல்ல, இப்போது கருவுற்றிருக்கிறாள் அந்தப் பெண்மணி. இப்படி எண்ணற்ற சம்பவங்களை, சப்தகன்னியரின் அருளுக்கு உதாரணமாகச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்...
 
🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நன்மைகள் கோடி பயக்கும் நாகபஞ்சமி.!!

மனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான். அதன் பிரம்மாண்டத்தை கண்டு வியப்பெய்தினான். அந்த அச்சத்தின் எச்சமே வழிபாடாக மாறியது. அதிக வெப்பத்தை கக்கிய ஆதவனை ஆண்டவனாகவே கருதினான் ஆதி மனிதன்.  இதுபோல் பேரலையால் ஆபத்தை உண்டு பண்ணும் கடலையும் கடவுளாக கருதினான். விஷம் கொண்டு விலங்கினங்களையும், உயிரை பறிக்கும் பலம் கொண்ட உயிரினங்களையும் உருவம் வைத்து வழிபட்டான். அந்த வழியில் வந்ததுதான் நாகர் வழிபாடு. அச்சம் மட்டுமே வழிபாடு ஆகாமல் அதனூடாக தத்துவார்த்தத்தையும் சேர்த்துக்கொண்டான்.

சிராவண மாதத்தில் (சாந்திராயன மாதம்)  அதாவது தமிழ் மாதத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் ஆடி மாத அமாவாசை கழிந்த ஐந்தாவது நாளான சுக்லபட்ச பஞ்சமியன்று ் நாகபஞ்சமி வருகின்றது. நாகர்கள் மற்றும் நாக தேவதைகளை  கௌரவிக்கும் பொருட்டு, இந்திய நாடு முழுவதும் நடைபெறும் உற்சவமாகும். ஹேமாத்ரி என்ற ஸம்ஸ்க்ருத கிரந்தத்திலிருந்து, எடுக்கப்பட்ட வரதராஜா என்ற பகுதியில், இந்த நியமங்களும், பூஜை புனஸ்கார முறைகளும் நாகராஜாவை முன்னிட்டு செய்ய வேண்டிய விதிகளும் விவரமாக சொல்லப்பட்டுள்ளன. ‘‘ஸ்ராவண மாதத்தின், சுக்லபட்ச பஞ்சமியன்று, வாசற்கதவின் இரண்டு பக்கமும் மாட்டுச்சாணியினால் மெழுகி, நாகராஜாவை வரவேற்க வேண்டும்.... இது  மிகவும் புனிதமான நாளாக சொல்லப்படுகிறது.’’
இதற்கு முந்தைய தினம், அதாவது சதுர்தியன்று ஒரு வேளை மட்டும் உண்டு விரதமிருக்க வேண்டும். பஞ்சமியன்று இரவு மட்டும் தான் உணவு உட்கொள்ள வேண்டும். வெள்ளி, மரம், மண், மஞ்சள் அல்லது சந்தனத்தில் நாக உருவங்கள் அல்லது ஐந்து நாக உருவங்களை செய்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் முன் கோலமாக போட வேண்டும். பஞ்சமியன்று அவலும், பஞ்சாமிர்தமும் கொண்டு (அம்ருதமாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் பால், தயிர்,நெய், தேன், சர்க்கரை) பூஜிக்க வேண்டும். அலரி புஷ்பங்களும், மல்லிகை செந்தாமரை பூக்களும், சந்தனப்பொடியும் மற்ற வாசனை திரவியங்களும் கொண்டு பூஜை செய்ய வேண்டும். மிகப் பிரசித்தமான நாகராஜாக்களான அனந்தன் அல்லது சேஷநாகம். வாசுகி, கார்கோடகன் - இவை இந்த தினத்தில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற எல்லா விழாக்களையும் போல, ஹிந்துமத வழக்கப்படி மிகப்பெரிய அன்னதானம் நடைபெறும். அன்னதானம் இந்த நோன்பின் மிக பிரதானமாகும் அன்று விழா முடியும் வரை. எங்கும், யாராலும் பூமி தோண்டப்படாதவாறு பக்தர்கள், கண்விழிப்பாக கவனித்து இருப்பர்.
தமிழ் நாட்டில், நல்ல பாம்புகள், சரியான முறையில் வணங்கி வழிபட்டால் நல்ல செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. நாகபஞ்சமியன்று, விடியற்காலையில் நீராடி. ஹிந்து பெண்கள், பாலும் , தேனும் நாகராஜாவுக்கு படைத்து வணங்குகின்றனர். கேரளாவில் உள்ளது போலவே, தமிழ் நாட்டிலும் நாகராஜா அருளால் புத்ரபாக்யம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அரச மரத்தடிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாக - சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு, பிரசித்தமான 108 பிரதட்சணம் (சுற்றி வலம் வருதல்) செய்வர். இதை வேதமறிந்த பிராமணர்கள் துவங்கி வைப்பர். இவ்வாறு விரதம் அனுஷ்டிக்கும் பெண், தாயானதும், ஒரு கல்லில் பாம்பு உருவத்தைச் செதுக்கி, இந்த மரத்தடியில் கொண்டு வந்து வைப்பது வழக்கம்.
தமிழ் நாட்டில், இவ்வாறு நாகபூஜை செய்து பிறந்த குழந்தைகளுக்கு நாகராஜா அல்லது நாகமணி என்று பெயரிடுகின்றனர்.    ஹிமாசல பிரதேசத்தில், நாக பஞ்சமி, உற்சவம். ‘ரிகி பஞ்சமி’ அல்லது ‘பிரூரி பஞ்சமி’ என்று வழங்கப்படுகிறது. காரணம், ‘ரிக்கேஸ்வரா’ என்பது சிவபெருமானுடைய ஒரு பெயராகும். இவர் நாகராஜாக்களின் தலைவர். இந்த சமயம் இவர் சுற்றிலும் பாம்புகளால் சூழப்பட்டவராகவும் படமெடுத்த நாகங்களாலான மாலையை தலையில் சூடியவராகவும் காட்சியளிக்கிறார்.
நாக பஞ்சமி உற்சவத்திற்கு முன்னதாகவே வீடுகளின் சுவர்களில் நாகராஜாக்கள், பறவைகள் இவற்றின் உருவங்களை வரைந்து. வர்ணம் தீட்டி அழகுற வைக்கின்றனர். ஏழு நாட்கள் முன்னதாக நீரில், கோதுமை, பருப்புகள், தானியங்கள் இவற்றை ஊறவைக்கின்றனர். உற்சவ விருந்து செய்யும் நாள் காலையில். ஒரு தர்ப்பையை எடுத்து. பாம்பு போல செய்து, ஊறிய தான்ய நீரில் நனைத்து. தித்திப்பு தின்பண்டங்களோடு நாகராஜாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். ஹிமாசல் பிரதேசத்தில் காங்ரா என்னுமிடத்தில், தீபாவளிக்குப் பின், இந்த நாகராஜாக்களை வழியனுப்பும் ஒரு உற்சவம் நடைபெறுகிறது மாட்டுச் சாணத்தில் நாகராஜா உருவம் செய்து. வணங்குவர். இதற்குப் பின்னும், உயிருள்ள நாகங்கள் தென்பட்டால். அது ‘‘நன்றியில்லாத’’தாக எண்ணி கொல்லப்படும்.
‘கட்வால்’ பிரதேசத்தில்,மண் தரையில் நன்றாக, நிறைய சாணம் போட்டு மெழுகி, மண் தடவி, மஞ்சளும், சந்தனமும் கொண்டு. அழுத்தமாக ஐந்து. ஏழு அல்லது ஒன்பது பாம்பு வரை படங்கள் வரைகின்றனர் ஊதுவத்தி. சாம்பிராணி போன்ற வாசனை திரவியங்கள் காட்டி பழங்களும் உணவுப் பொருட்களும் படைக்கப்படுகின்றன. காலையிலும், மாலையிலும் இந்த முறையில் வழிபட்டு வணங்கிய பின், இரவு, நாகராஜாவின் புகழ் பாடும் கதா காலட்சேபங்களை கேட்டு பொழுது போக்குகின்றனர்.
வடமேற்கு பகுதிகளில், நாகபஞ்சமி, கௌரீ பூஜையுடன் சேர்த்து, பெண்கள் நாக தேவதை களுக்கு நைவேத்யங்கள் படைப்பதோடு, கொண்டாடப்படுகிறது. நேபாளத்தில், நாகபஞ்சமி, பிரசித்தமான நாக - கருடயுத்தம், அதன் ஆண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கும், நேபாளத்திலும் பல தலைகளுடைய பாம்பு உருவங்கள் சுவர்களில் வரையப்பெற்று வணங்கப்படுகின்றன. இதைப்போன்றே இந்தியாவின் சில பகுதிகளில் நாக பஞ்சமி கூடவே கருட பஞ்சமியும் கொண்டாடுகின்றார்கள். கருடன் பட்சிகளின் ராஜா. இவை நாகங்களின் பிறவி எதிரிகள் என்பது தெரிந்ததே. கருட பஞ்சமி விரதம் இருந்து, பாம்புக்கடியிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது ஒரு நம்பிக்கை. இந்த நாளில் சகோதர சகோதரிகள்  பரிசுப் பொருள்கள் கொடுத்துக்கொள்வர்.
பீகார் மாகாணத்தில், நாக பஞ்சமி பதினைந்து நாட்கள் உத்ஸவமாக கொண்டாடப்படுகிறது. கோதுமையாலும், அரிசியாலும் நாக உருவங்கள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஜனங்கள் நாட்டு பாடல்களை பாடிக்கொண்டே, உடன் செல்வர். பூஜை முடிந்த பின் இந்த உருவச்சிலைகள். வெச்சப் பாகுடன் கலந்து புதைக்கப்படும் இந்த உற்சவத்தைத் தொடர்ந்து ஊர்ச் சந்தை நடப்பதும் ஒரு விசேஷம். பீகாரில் புதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ள சில இடங்களில் கல்லில் பாம்புகள், படத்துடன் கூடிய பல தலைகளுடைய பாம்பு சிலைகள் போன்றவை கிடைத்துள்ளன. கர்நாடகத்தில் நாக சதுர்த்தி, நாகபஞ்சமி இரண்டு நாளும் சிராவண(ஆவணி) மாத சுக்லபட்ச சதுர்த்தி, பஞ்சமி தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் சதுர்த்தியன்று விரதம் இருக்கின்றனர்.
 குடும்பத்தின் நன்மைக்காக இந்த விரதம், என்றாலும் தன் சகோதர்களுக்காக விசேஷ வேண்டுதல்கள் செய்வர். வீட்டின், வாசற்படியின் இருபுறமும், மஞ்சளால் சிறிய பாம்பு குட்டிகளின் படங்கள் கோலமாக வரையப் பெறும். வெளிவாசலும் ரங்கோலிகள், பாம்பு கோலங்களே பெரும்பாலும் வரையப்பெறும். தங்க, வெள்ளி பாம்பு - உருவங்கள் வைத்து, நகரத்து வீடுகளில் வீட்டிலேயே பூஜைகள் செய்து பெண்கள் நைவேத்யங்கள் நாகராஜாவுக்கு சமர்ப்பித்து வணங்குவர். கிராமங்களிலும், நகரத்தின் வெளிப்புறங்களிலும் எறும்பு புற்றைத் தேடிச் சென்று இந்த வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அவல், உளுந்து, நெய், பால், வெல்லம், உப்பு, பூக்கள் இவை கொண்டு புற்றுக்கு அருகில் பூஜை நடக்கும். வீடுகளிலும் அவலும், பாலும் கொண்டு ஒரு தித்திப்பு தின்பண்டம் செய்யப்படுகிறது.
அகர்வால் பனியா என்ற சமூகத்தினர், தங்கள் நாகராஜா வான வாசுகியின் வழி வந்தவர்களாக சொல்லிக்கொள்கின்றனர். இவர்கள் ஆஸ்திக முனி என்ற வாசுகியின் குருவையும் வணங்குகின்றனர். வீட்டின் சுவர்களில் பாம்பு படம் வரைந்து. வணங்கும் இவர்கள், பிராமணர் களுக்கு உணவளித்து, ஆர்த்தி செய்வர். இந்த பாம்புகளுக்கு உணவாக அளிக்கப்பட்ட எள்ளில் ஒரு சிறிதை ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்கிறாள். ஒரு ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டின் எல்லா பகுதிகளிலும் இரைக்கிறாள். இதன் மூலம் வீட்டில் விஷ ஐந்துக்கள் அண்டமாட்டாது என்று நம்புகின்றனர்.
நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை.       
நாட்டின் சில பகுதிகளில் உழவர்கள், நாகபஞ்சமியன்று பூமியை உழுவதில்லை. எலிகளைத் தேடி பூமியில் வளையவரும் நல்ல பாம்புகளின் தலையில், கலப்பையின் கூரிய நுனி பட்டு துன்பம் விளைவிக்கக் கூடும் என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றனர்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வழித்துணையாய் வருவார் அழிக்கால் ஆதிசிவன்.!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ளது ஐங்காமம். இங்குள்ள சிற்றூர் குந்நம் விளாகம். இங்கு தான் அடியவர்க்கு அற்புத வாழ்வளிக்கும் அழிக்கால் ஆதிசிவன் கோயில் உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரி மாவட்டம் இருந்தபோது மார்த்தாண்ட மகாராஜா, நூற்றி எட்டு அந்தணர்களை கொண்டு பூஜைகள், யாகங்கள் செய்து ஐங்காமம் பகுதியில் சிவ ஆலயத்தை எழுப்பி பூஜை செய்து வந்தார். அத்தகைய சிறப்பு மிக்க சிவ ஆலயம் இவ்வூரில் அமைந்திருந்த போதும் அப்பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்கள் கிராம தேவதைகள் வழிபாட்டையே மேற்கொண்டு வந்தனர். கிராம தெய்வங்களுக்கு விளை பொருட்களை படையலிட்டும், ஆடு, கோழி முதலான உயிர்களை பலியிட்டும் வழிபாடு செய்து வந்தனர்.

அப்பகுதியில் நிலபுலன்களுடன் வாழ்ந்து வந்த சுவாமி நாடார் என்பவரது வீட்டில், காவல் தெய்வமான மல்லன் கருங்காளிக்கு பலியிடுவதற்காக நேர்த்தி கடனாக செஞ்சேவலை (சிகப்பு நிற சேவல்) வளர்த்து வந்தனர். அந்த வீட்டிலிருந்த பத்து வயது பாலகன் அப்புகுட்டன், திடீரென சேவலை பலியிட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தான். மகனின் பேச்சுக்கு சரிப்பா, இனி பலி கொடுக்க வேண்டாம் என்று அவனது தாய் பதிலுரைத்தாள். அன்றிரவு வீட்டிலுள்ளவர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரம் நடு சாமப்பொழுது, கருங்காளிக்கு நேர்ந்து விட்ட சேவல் கூண்டை விட்டு தானே வெளியே வந்து வீட்டிற்குள் புகுந்தது. அங்கே தூங்கிக்கொண்டிருந்தவர்களை தனது சிறகுகளால் அடித்து எழுப்பியது. சேவலின் செயல்கண்டு எழுந்தவர்கள் வியப்புடன் அதை பார்த்துக்கொண்டிருந்தனர்.
பின்னர் அப்புகுட்டனின் தாயார், மல்லன் கருங்காளியிடம் வேண்டினாள். நான் குழந்தை சொன்னதுக்காக சொல்லிவிட்டேன். நிச்சயம் உனக்கு நேர்ந்து விட்ட சேவல் உனக்குத்தான் கண்டிப்பாக நேர்த்திக்கடனை நிறைவேற்றுவோம் என்று கூறிய சில விநாடிகளில் அந்த சேவல் அமைதிக்கொண்டு கூண்டுக்குள் திரும்பி சென்று விட்டது. மறுநாள் மல்லன்கருங்காளிக்கு உற்றார், உறவினர் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது சேவல் பலியிடப்பட்டது. பூஜையின் போது சாமியாடி அருள்வந்து கூறினார். அப்புகுட்டனை பார்த்து ‘‘நீ, என் கொடி, எனக்கு எதிராக செயல்படுற, எனக்கு பூச கொடுக்க கூடாதுன்னு சொல்லுக, உனக்கு என் சக்தி என்னான்னு காட்டுறேன்.’’ என்று கூறிவிட்டு ஓ, ஓ வென சத்தம் போட்டபடி கையில் இருந்த திருநீற்றை வாரி வீசினார்.
இந்த சம்பவம் நடந்து ஆண்டூகள் சில கடந்த நிலையில் அந்த அப்புகுட்டனுக்கு வயது பதினான்கு ஆன போது, ஒரு நாள் பௌர்ணமி நாளில் அதிகாலை 3 மணி இருக்கும். தூக்கம் வராமல் தவித்தான் அப்புகுட்டன். உடனே தனது பதினாறு வயது நிரம்பிய அண்ணன் ராமையாவுடன் தங்கள் விளைக்கு(தோட்டம்) சென்றனர். மரவள்ளி கம்பு நட வேலையாட்கள் இரண்டு நாட்களாக வராததால் அண்ணன், தம்பி இருவரும் அந்த பணியை செய்தனர். அப்போது பௌர்ணமி நாள் முழுநிலவு ஒளி வீசிக்கொண்டிருக்க, வண்டுகளின் இரச்சல் சத்தம் ஒரு புறம் இருக்க, இரண்டு ஆள் உயரத்திற்கு ஓர் உருவம் அந்த நிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதை சிறுவன் அப்புகுட்டன் பார்த்துக்கொண்டிருந்தான். சில விநாடிகளில் அந்த உருவம் இவர்களை கடந்து சென்றது.
அதன் பின்னர் தனது அண்ணனை அழைத்த அப்புகுட்டன், ‘‘அண்ணே, வா நாம வீட்டுக்கு போலாம், எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு’’ என்று கூறினான். தம்பியின் சொல்லுக்கு இசைவு தெரிவித்து இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். செல்லும் வழியில் எதிரே அவர்களது தாய், மகன்களை தேடி, தனது மகளுடன் வந்து கொண்டிருந்தாள். மகன்களை கண்டதும், ‘‘மக்களே, எங்க போயிருந்த, இது என்ன மண்வெட்டி,’’ அப்போது ராமையா கூறினான். ‘‘அம்மா, நம்ம விளைக்கு மரச்சினி நட,  தம்பி தான் மணி மூணாவது போலுக்கு, விளைக்கு போமாண்ணு கேட்டான். அதனால வந்துட்டோம்.’’ ‘‘மணி மூணு இல்ல, ஒண்ணு. நடு சாமத்தலயா காட்டுக்கு வரது, பேய், பிசாசு அடிச்சிரும். அப்போது குறுக்கிட்ட அப்புகுட்டன், ‘‘அம்ம, நாங்க விளையில நின்னமில்லா, அப்ப ஒரு பெரிய பனை மரம் ஒசரத்துக்கு உருவம் ஒண்ணு அந்த வழியா போச்சு’’ என்று அச்சத்தோடும், வியப்போடும் கூறினான்.
பின்னர் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். மறுநாள் அப்புகுட்டன் கூறியதை அவனது தாய், ஊரார்களிடம் கூற, ஊர் பெரியவர்கள் ‘‘வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி, அமாவாச நாட்களில் வேதாளம் வந்து காவு கோயிலில பூச பண்ணிட்டு போகுமுன்னு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க, உச்ச ராத்திரி அவனுகள யாரு அங்க போகச்சொன்னா’’ என்று கேட்டுள்ளனர். இது நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு அப்புகுட்டன் வாலிபனான். உடல்நலம் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டான். பல மருத்துவமனைகளில் சோதித்துப்பார்த்தும் எந்த நோயும் இல்லை என்றே மருத்துவர்கள் கூறினர். உடல் நலம் பாதிப்புக்கு காரணம் தெரியாமல் தவித்தனர் உறவினர்கள். மாந்திரீகவாதியை அழைத்து அப்புகுட்டனுக்கு பார்வை பார்த்தனர். பல வகையான பழங்களும், பூக்களும் வைத்து பூஜை நடந்து கொண்டிருந்தபோது அப்புக்குட்டனின் வலது கை ஐந்து விரல்கள் விரிந்து, அஞ்சு தலை நாகம் படமெடுத்து ஆடுவது போல ஆடியபடியே கையின் செயல்பாடு இருந்தது.
உடனே மாந்திரீகவாதி, வரும் செவ்வாய்கிழமை இவனை மேளதாளம் முழங்க பூஜை பொருட்களுடன் ஐங்காமம் சிவன் கோயிலுக்கு அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி உறவினர்கள் செய்தனர். கோயிலுக்கு சென்றதும். உற்சாகம் கொண்டு முகமலர்ச்சியோடு இருந்த அப்புக்குட்டன் கருவறைக்குள் ஓடிச்சென்று சிவலிங்கத்தை இரு கரங்களால் இறுக பற்றிக்கொண்டான். உடன் வந்த மாந்திரீகவாதி, கோயில் அர்ச்சகர் மற்றும் ஊர் பெரியவர்கள் வியப்புடன் நிற்க, எழுந்திருக்கவே சக்தியின்றி இருந்த அப்புகுட்டன், சிவனருளால் உற்சாகம் அடைந்ததை கண்டு, மற்றவர்கள் பேரானந்தம் கொண்டு சிவ,சிவா,ஓம் நமச்சிவாயா என்று விண்ணை முழங்க கோஷமிட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு ஆண்டுகள் சில கடந்த நிலையில் ஊரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அப்புகுட்டனுக்கு பதவி கிடைத்தது. ஊரிலுள்ள கக்குளத்தில் குளித்துவிட்டு வரும்போது, அருகில் கிடந்த ஒரு சிறிய பாறையில் சூரிய ஒளி சிவலிங்க வடிவில் விழுந்ததைக்கண்ட அப்புக்குட்டன், அவ்வழியாக வந்த கொல்லரை அழைத்து இந்த பாறையில் அந்த சூரிய ஒளி விழும் பகுதியை அப்படியே லிங்கமாக வடித்து விடு என்றார். காலையில் தொடங்கிய பணி மாலையில் நிறைவுற்றது. சிவலிங்கம் தயாரானது. மாலையில் அங்கு வந்த நபர்கள் துணையுடன் அந்த லிங்கத்தை எடுத்துக்கொண்டு சிறு தெய்வங்கள் குடியிருப்பதாக கூறப்படும் காவு பகுதியில் கொண்டு சென்றனர். அங்கு ஈச்சமரம், வேப்பமரம் நின்ற இடத்தில் வைத்தனர். அன்றிலிருந்து அப்பகுதியில் சிறுதெய்வ வழிபாடு மறைந்தது. ஊர் வளர்ச்சியானது. ஊர் மக்கள் நலம் பெற்றனர். சிவலிங்கம் வைக்கப்பட்ட இடம் கோயிலானது.
அழியாத கால்வாய் பகுதியில் ஆலயம் கொண்டதால் அழிக்கால் ஆதிசிவன் என்ற நாமத்துடன் கோயில் உயர்ந்தது. அதன் பின்னர் ஆவி வழிபாடும், உயிர்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடும் இப்பகுதியில் முற்றிலும் மறைந்தது. கோயிலில் மூலவர் அழிக்கால் ஆதி சிவன் என்ற நாமத்தில் அருள்பாலிக்கிறார். பிராகாரத்தில் இடது பக்கம் முருகனும், வலது பக்கம் கணபதி வீற்றிருக்கின்றனர். நாகர், ரட்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் 65 அடி உயர நுழைவு வாயிலில் இருபுறமும் யானைகள் இரண்டு வரவேற்பது போலவும், கோபுர வாசலின் கீழ் நந்தி சிலைகள் இரண்டும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களியக்காவிளையிலிருந்து தெற்கே இரண்டு கி.மீட்டர் தொலைவில் இருக்கும் ஐங்காமம் ஊரில் குந்நம் விளாகம் பகுதியில் அமைந்துள்ளது. தன்னை வழிபடும் அடியவர்களுக்கு அற்புத வாழ்வளித்து காத்தருள்கிறார் அழிக்கால் ஆதிசிவன்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வல்லமை தருவாள் வண்டி மலைச்சியம்மன்.!!

அஸ்தினாபுரம் அடுத்த பகாசுரவனம் இருந்தது. இங்கு, பகாசுரன் மற்றும் பகாசுரவள்ளி என்னும் அசுர தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். இந்த வனத்தையொட்டி இருந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்துவந்தனர்.அசுரனுக்கு பசி எடுத்தால் கிராமத்துக்குள் நுழைந்து கண்ணில் பட்டவரை கொன்று தின்று விடுவான். கிராம மக்கள் ஏதோ, பேய், பிசாசு, சாத்தான் வந்து இப்படி மனிதர்களை பலிவாங்கி தின்று விடுகிறதே, என்று அஞ்சி இருந்தனர். ஒரு நாள் அசுரன் ஒரு வாலிபனை அடித்து தின்று கொண்டிருந்ததை கிராம மக்கள் பார்த்துவிட்டனர். உடனே அவர்கள் ஏ, அசுரனே, நீ ஒருத்தனை கொன்று தின்க, ஊரையே ஆட்டி படைத்து இறுதியில் ஒருத்தனை கொன்று தின்கிறாய், உனக்கு பசியாறும் அளவிற்கு மலையளவு உணவை ஆக்கி வண்டி கட்டி அனுப்பி வைக்கிறோம். எங்களை ஒன்றும்

செய்யாதே என்றனர்.

அதற்கு அசுரன் ‘‘எனக்கு மது, மாமிசத்துடன் வண்டி நிறைய சோறு வேண்டும். நீங்கள் அனுப்பி வைக்கும் உணவு போதவில்லை என்றால் உணவை கொண்டு வரும் நபரை நான் தின்று விடுவேன். ஆகவே எனக்கு தினமும் ஒரு வாலிபன் தான் உணவை கொண்டு வரவேண்டும்’’ என்று கூற, கிராம மக்களும் சரி என்று ஒப்புக்கொண்டனர். வீட்டுக்கு வீடு முறை வைத்து ஆண் மகனை அனுப்பி வைக்க திட்டமிட்ட அவர்கள், கிராமத்தின் முதல் வீடான, கணவனை இழந்து தனது மகன் மற்றும் வயதான தாயுடன் வாழ்ந்த பெண்ணிடம், அதிகாலை சென்று, நாளை முதல் கிராமத்திலிருந்து அசுரனுக்கு உணவு படையல் அனுப்ப வேண்டும். வரிசைப்படி முதலாவதாக உன்னுடைய வீடு உள்ளது. ஆகவே உணவை உன் மகன் தான் நாளை கொண்டு செல்ல வேண்டும் என்று கிராமத்தினர் சொல்ல, அந்த பெண் அழுதவாறு ஒப்புக்கொண்டாள்.
இதனிடையே, துரியோதனன் அமைத்த அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் அன்று காலை இந்த கிராமத்திற்குள் வருகின்றனர். கிராமத்தின் முகப்பில் இருந்த அந்தண பெண்மணியிடம் குடிக்க நீர் கேட்க, பின்னர் நடந்தவற்றை அவர்கள் கூற அந்த பெண்மணியும், நீங்கள் விரும்பினால் என் வீட்டிலேயே நீங்கள் அனைவரும் தங்கலாம் என்று கூறி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்று வந்தவர்களுக்கு உபசரனைகள் செய்து நல்லமுறையில் கவனித்து வந்த அந்த பெண்மணி மறுநாள் அதிகாலையில் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தாள், ஒரே மகனின் நிலையை எண்ணி, துக்கம் தாளாமல் தனது கன்னத்தில் அவ்வப்போது தன்னையறியாமல் வழிந்தோடும் கண்ணீரை தனது சேலை முந்தானையால் துடைத்துக்கொண்டே இருந்தார். அதைக்கண்ட  குந்தி தேவி அந்த பெண்ணிடம் சென்று , ‘‘ஏனம்மா அழுகிறாய்’’ என்று பரிவுடன் விசாரித்தாள். அசுரனின் கதையை சொன்ன அவள், ‘‘இன்று என் பிள்ளை வண்டி ஓட்டிச் செல்ல வேண்டும். எனக்கு இருக்கும் ஓரே ஆதரவு அவன் தான். அவனையும் அசுரனுக்கு பலி  கொடுக்க போவதை நினைத்து கதறுகிறேன்’’ என்றாள்.
 அப்போது குந்தி தேவி, ‘‘கவலைப்படாதே எனக்கு ஐந்து மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவனை பகாசுரனிடம் அனுப்பி வைக்கிறேன்’’ என்றாள். அதன்படி பீமன் அசுரனுக்கு உணவு கொண்டு சென்றான். செல்லும் வழியில் வண்டியை நிறுத்தி விட்டு,  கொண்டு சென்ற உணவுகளை தானே உண்டான். மீதமிருந்ததை வனவிலங்குகளுக்கு கொடுத்தான். இதைக்கண்டு பசி தாங்காமல் கோபம் கொண்ட பகாசுரன், பீமனை தாக்க ஆரம்பித்தான். பீமன் அவனை வதம் செய்தான். பிறகு பீமன் வண்டியை ஓட்டிக்கொண்டு கிராமத்துக்கு வந்தான்.பகாசுரன் அழிந்ததை கேட்டு அந்த ஊரே மகிழ்ந்தது. அதே நேரம் பகாசுரன் மனைவி பகா சூரவள்ளி, மணாளன் மாண்ட செய்தி கேட்டு அவனது உடல் கிடந்த இடத்துக்கு ஓடி வந்து கதறினாள். பின்னர் அவிழ்ந்த தலையை சூடாமல், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவளின் தவவலிமையை கண்டு மனம் இறங்கிய சிவன், அவள் முன் தோன்ற, தனது கணவனின் உயிரை மீட்டுத் தருமாறு சிவபொருமானிடம் வேண்டினாள். கொடுஞ்செயல் புரிய மாட்டோம், எந்த உயிரையும் துன்புறுத்த மாட்டோம் என்று கூற, அவளது வேண்டுதலை ஏற்ற சிவன், சூரனை உயிர்ப்பித்து, இருவரையும் பொதிகை மலைப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்.
பொதிகை மலை பகுதிக்கு வந்த அவர்கள் இருவரும் தாமிரபரணி  உற்பத்தியாகும் இடத்திலிருந்து பயணித்தனர். பல இடங்களில் தங்கியும் அவர்கள் திருப்தியடையாமல் அம்பாசமுத்திரத்திற்கு வந்தனர். மீண்டும் தங்கள் அராஜகத்தை இருவரும் தொடர்ந்தனர்.  அந்த வழியாக சேர நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு சந்தைக்கு   செல்லும் வண்டிகளை இருவரும் மறித்து(கவிழ்த்து) காய்களை எடுத்து தின்றனர். இதனால்  பயந்த அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் குல தெய்வமான முனியப்பனிடம் சென்று வேண்டினர். முனியப்பன்(சிவனின் அம்சங்களில் ஒன்றான முனீஸ்வரனே, இந்த முனியப்பசாமி) ஆங்கார ரூபம் கொண்டு வந்தார். இருவரையும் கீழே தள்ளினார். அவர்களது தலை முடியை பிடித்து பூமியில் திணித்தார். இருவரது உடலும் பூமியில் பதிந்தது.
அவர்கள் முனியப்பனை வேண்ட, மல்லாந்து வீழ்ந்த வண்டிமலையனும் வண்டிமலையத்தியையும் வீழ்த்தாமல் அவர்களை நம்பி வரும் பக்தர்களுக்கு அவர்கள் அருளும் பொருட்டு வரங்களை கொடுத்துச் சென்றார்.  அவர்களுக்கு எதுவும் கண்ணில் படாது. அவர்கள் கால்பகுதியில் நின்றால் மட்டுமே அவர்களுக்கு வந்தவர்களை தெரியும். இந்த நிலை உருவாக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வண்டிகள் அவர்கள் கண்ணில் படவில்லை. ஊர் மக்களும் பயமின்றி சந்தோஷத்துடன் சந்தைக்கு சென்று வந–்தனர். அவர்களால் ஏதும் தீவிணைகள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கிராமத்து மக்களும், வணிகர்களும், வண்டி மலையனுக்கும், மலையச்சிக்கும்  அவர்கள் மல்லாந்து விழுந்த இடத்தில் அதே போல் மண்ணுருவம் படைத்து திறந்த வெளி ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வந்தனர். இதுவே தற்போது வண்டி மறிச்ச அம்மன் கோயிலாக திகழ்கிறது. இப்போதும் இந்த கோயில் மேல் கூரையில்லாமல் உள்ளது. கோயிலுக்குள் வண்டி மறிச்ச அம்மனும், வண்டி மலையனும் மல்லாந்து படுத்த நிலையில்  உள்ளனர்.
பிரமாண்டமான இந்த இரண்டு சிலைகளும் மண்ணால் செய்யப்பட்டவைதான். இவை மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து வெடிப்புகள் ஏற்பட்டாலும், திருவிழா காலங்களில் இந்த சிலைகளை புதுப்பித்து வண்ணம் பூசுகிறார்கள். இந்த ஆலயத்தில் வேறு துணை தெய்வங்கள் எதுவும் இல்லை. விவசாயம் சிறக்கவும், வாகன விபத்துகள் வராமல் இருக்கவும், வாகன தொழில் செய்பவர்கள் தொழில் சிறந்து விளங்கவும், இந்த கோயிலுக்கு வந்து  வேண்டி சென்றால் உரிய பலன் கிடைக்கிறது. இக்கோயிலில் தை மாதம் கடைசி செவ்வாய் கொடை விழா நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணியளவில் மேளதாளம் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருவார்கள். தொடர்ந்து புதிதாக வண்ணம் பூசப்பட்ட  சாமிக்கு கண் திறக்கும் வைபவம் நடக்கும். அது சமயம் சுவாமிகளுக்கு எதிரே யாரும் போகக்கூடாது. என்று கூறுகிறார்கள். நள்ளிரவு பூஜையின் சுவாமிக்கு அனை பூஜை நடைபெறுகிறது. அப்போது பாகற்காய் நீங்கலாக அனைத்து  வகை காய்களுடன் சமைக்கப்பட்ட உணவு மலைபோன்று படைக்கப்படுகிறது. மறு நாள் புதன்கிழமை காலையில் கிடா வெட்டு பூஜைகளுடன்  திருவிழா நிறைவு பெறும். இது தவிர தை பொங்கலின் போது இக்கோயிலில்  பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
ஒருமுறை இந்த கோயிலுக்கு மேற்கூரை போட முயற்சி செய்தனர். அம்மனிடம் இதற்காக உத்தரவு கேட்டபோது. மக்களை பார்த்து அம்மன், ‘‘என் உயரம் என்னவென்று தெரியுமா, நான் எழுந்து நின்றால் தட்டாத உயரத்துக்கு உங்களால் கூரை அமைக்க முடியுமா’’ என்று எதிர் கேள்வி சுவாமி ஆடுபவர் மூலம் கேட்டதாகவும், அதன் பிறகு கோயிலுக்கு கூரை அமைக்கும் முயற்சியை கைவிட்டதாகவும் அப்பகுதியினர் கூறினர். தற்போதும் கூட அம்மன் கோயிலுக்கு எதிரே இருக்கும் கட்டிடங்கள் குறிப்பிட்ட உயரத்துடனேயே உள்ளன.  அம்மனின் நேரடி பார்வை பட்டால் விவகாரம் ஆகி விடுமே என்ற பய பக்தியே இதற்கு காரணம் என்கிறார்கள், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். கோயில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது...

சு.இளம் கலைமாறன்

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Saturday, 25 April 2020

இந்த 4 பொருட்களை சனிக்கிழமையில் மட்டும் உங்கள் வீட்டில் இப்படி வைத்தால் பணவரவு சீராக இருக்கும் தெரியுமா?

எல்லாருக்கும் இருக்கும் பிரச்சனை பணமாக தான் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் சிலர் பூஜை செய்வது வழக்கமாக இருக்கும். பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை இருப்பதால் அன்றைய தினம் விசேஷமாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி குறைவாக உள்ளவர்கள், பண வரவு இருந்தும் சீரான முறையில் இல்லாமல் இருப்பவர்கள் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றினால் பிரச்சினைகள் தீரும். ஸ்ரீமன் நாராயணின் மனைவியாக இருப்பவர் மஹாலக்ஷ்மி. அந்த லட்சுமி தேவி வாசம் செய்யும் இடங்களில் எல்லாம் பணவரவு சீராக இருக்கும், செல்வம் நிலையாக இருக்கும். எந்த இடத்தில் பணவரவு சீராக இல்லையோ, அந்த இடத்தில் லக்ஷ்மி கடாட்சம் இல்லை என்று தான் அர்த்தம்.

லக்ஷ்மி கடாட்சம் ஒருவரது இல்லத்தில் இருக்க வேண்டும் என்றால், வீடு சுத்தமாக, மணமாக இருக்க வேண்டும். வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டில் நல்ல வாசம் வீச வேண்டும். சுத்தம் இல்லாத வீட்டில் லக்ஷ்மியும் இருக்க மாட்டாள். சிலருக்கு பணம் வந்தால் ஒரேடியாக வரும். இல்லை என்றால் சுத்தமாக வராது. ஒரு சீரான நிலை இல்லாமல் வருமா? வராதா? என்ற பிரச்சனையாக இருக்கும். அது போன்ற பிரச்சனைகள் நீங்க இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலன் தரும்.

உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் நல்ல காற்றோட்டம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வடகிழக்கு மூலையில் உருளி அல்லது அட்சய பாத்திரம் போன்ற வடிவத்தில் இருக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பாத்திரம் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பது இங்கு முக்கியம் அல்ல. பூஜைக்கு பயன்படுத்தும் பாத்திரமாக இருப்பது நல்லது.

இந்த பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். அதில் 8 முதல் 10 சொட்டுக்கள் வரை பன்னீரை சேர்த்து கலக்கவும். அதில் அன்று பறிக்கப்பட்ட துளசி இலைகள் ஒரு கை பிடி அளவிற்கு சேர்த்து கொள்ளுங்கள். இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நல்ல நாள், நேரம் எல்லாம் ஒன்றும் கிடையாது. துளசியை பறிக்கும் போது நீங்கள் சுத்தமாக இருப்பது மட்டும் அவசியம். பின்னர் அதில் 11 ஏலக்காய்களை லேசாக இடித்து விதைகள் வந்தவுடன் இந்த பாத்திரத்தில் சேர்க்கவும்.

இறுதியாக அதில் பச்சை கற்பூரம் சிறிது பொடித்து சேர்க்கவும். பன்னீர், ஏலக்காய், துளசி, பச்சை கற்பூரம் இவற்றை தண்ணீரில் முறையாக சேர்த்து உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். வடகிழக்கு மூலையில் வைக்க முடியாத பட்சத்தில் சிறிது தள்ளி வடக்கில் வைக்கலாம். ஆனால் அங்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

இந்த வாசம் உங்கள் வீட்டில் தெய்வீக தன்மையை உணரச் செய்வதாக இருக்கும். அதில் இருந்து வெளி வரும் ஆற்றல் வீட்டில் இருக்கும் நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்யும். தேவையற்ற எண்ணங்களில் இருந்து விடுபட்டு, இறை நெறியில் செயல்பட வழி செய்யும். லக்ஷ்மி தேவி நிச்சயமாக உங்கள் வீட்டில் வாசம் செய்வாள். இந்த 4 பொருட்களிலும் தெய்வீக ஆற்றல் முழுவதும் நிரம்பி உள்ளது. கஷ்டப்பட்டு ஈட்டிய செல்வத்தை விரயமாகாமல் தக்க வைக்க துணை புரியும். பணவரவு சீராக இருக்கும். நிம்மதி உண்டாக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தன்னுடைய குடும்பத்தை, தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு 3 தந்திர குறிப்புகள்.!!

நம்முடைய குடும்பத்தில் இன்று அதிகப்படியான பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்க ஒரு முக்கிய காரணம் என்னவாக இருக்கும்? முதலில் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் வராது. இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இருந்தாலும் ஏனோ, இன்று எல்லோர் மனதிலும் ‘ஈகோ’ ஆணிவேராக பதிந்துவிட்டது. விட்டுக் கொடுப்பதற்கு மனம் வரவில்லை. என்ன தான் செய்வது?

சரி. எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய அம்மாக்கள் அவர்களுடைய மாமியார் இடத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? அந்த காலத்தில் இருந்த மாமியார்கள், அவர்களுடைய புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொண்டார்கள்! இவைகளை எல்லாம் வைத்து ஆராய்ந்து மூன்று குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த மூன்று குறிப்புகளை பின்பற்றும் குடும்பத்தலைவிகள் கட்டாயம் அவரவர் குடும்பத்தை, அவரவர் வசம் வைத்துக் கொள்ளலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த காலத்து குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களே! இந்த பதிவை முழுமையாக படிப்பதற்கு முன்பு ஒரு விஷயத்தை நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிறகு இந்த 3 விஷயங்களை பெண்கள் கடைபிடிப்பது மிக மிக மிக கஷ்டம்தான். ஆயிரம் மடங்கு கஷ்டமான விஷயம். எல்லா வகையான கோபதாபங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு, இதை நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டோமேயானால், வாழ்க்கையை சுலபமாக வாழ்ந்து விடலாம். எல்லாருக்கும் இது தெரிந்திருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இவைகளை எல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகம் மட்டும் தான். அது என்ன, அந்த மூன்று தந்திர சூட்சமம்? நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

முதலில், கணவர் சம்பாதித்து வந்த, அந்த குறிப்பிட்ட தொகையை மனைவி கையில் தான் கொடுக்க வேண்டும். இதுதான் நம்முடைய பாரம்பரிய பழக்கமும் கூட. அந்த காலத்திலெல்லாம் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது பெண்கள் கையில்தான் இருந்தது. இந்த காலத்தில் ஆண்கள் பெண்கள் இடத்தில் சம்பளத்தை கொடுக்கிறார்களா என்பது தெரியவில்லை. இருந்தாலும், உங்கள் கையில், உங்களுடைய கணவர் அவருடைய சம்பளத்தை கொண்டு வந்து கொடுக்கும் போது, அந்த சம்பளம்  குடும்பத் தேவைகளுக்கு குறைவாக இருந்தாலும், அதை சந்தோஷமாக பெற்றுக் கொள்ள வேண்டும். ‘இதை வைத்துக்கொண்டு எப்படி குடும்பம் நடத்துவது? இது பத்தாது! இந்த மாதம் எவ்வளவு செலவு காத்திருக்கிறது! இந்த மாதம் இந்த செலவு உள்ளது! அந்த செலவு உள்ளது!’ இப்படி கேள்வியை நீங்கள் எழுப்பினால், உங்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். அவ்வளவுதான்! இந்த பேச்சுக்கு இடமே இருக்கக் கூடாது.

உங்கள் கையில் வந்த வருமானத்தில் உங்களது குடும்பத்தை எப்படி சிக்கனமாக நடத்தமுடியும் என்ற பட்ஜெட்டை போட்டு விட்டு, அதிலிருந்து எவ்வளவு மிச்சம் பிடித்து எடுத்து வைக்கலாம் என்பதை தான் நீங்கள் யோசிக்க வேண்டும். இந்த ஒரு நம்பிக்கையை, நீங்கள் உங்கள் கணவருக்கு கொடுத்தால் உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் இடையில் பொருளாதார பிரச்சனை என்ற ஒன்று வரவே வராது. பிரச்சனையில் பாதி முடிந்ததா?.

இரண்டாவதாக, சாஸ்திர சம்பிரதாயங்கள் என்றாலே அது பெண்களுக்குத் தானா! காலையில் எந்திரிக்க வேண்டும் என்றாலும்  பெண்தான் எந்திரிக்க வேண்டும். இரவில் தூங்க செல்லும் போது நாங்கள்தான் கடைசியில் தூங்கச் செல்ல வேண்டும். கட்டுப்பாடுகள் எல்லாம் பெண்களுக்கு மட்டுமே! ஆண்களுக்கு இல்லையா? என்ற இந்த விதண்டாவாத கேள்வியை எந்த ஒரு பெண்ணும் வீட்டில் கேட்கக்கூடாது, என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மனதில் எண்ணமே வரக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளும், பொறுப்புகளும் அவர்களை அடக்குவதற்காகவோ, அவர்களை இழிவு படுத்துவதற்காகவோ கிடையாது. அவர்களுடைய பொறுப்புகளை அதிகப்படுத்துவதற்காக மட்டும்தான்! என்பதை முதலில் நாம் மனதில் விதைக்க வேண்டும். பெண்கள் தலையில் சுமக்கும் பொறுப்புகள் ஏராளம் இருக்குது! பொறுப்புகளை சுமக்க கூடிய தகுதி பெண்களுக்கு உண்டு. அவ்வளவுதான். இது நம் தலைக்கு கிரீடம் மாதிரி!

மூன்றாவதாக நாம் வாழப்போகும் கணவர் வீட்டு உறவுகளை மதிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் புகுந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையும், பிறந்த வீட்டு உறவுக்கு ஒரு மரியாதையையும் கொடுக்கக்கூடாது. வீட்டில் இருக்கும் ஒரு பெண் தன் கணவரது உறவுகளை ஆதரித்தால், சுலபமாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விடலாம்.

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சாத்தியமாகுமா? என்று நீங்கள் மனதுக்குள் கேட்கும் கேள்வி, எனக்கு காதில் விழுகிறது. பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் இதுதான். இதை அறிந்து செயல்படுபவர்கள், வாழ்க்கையில் ஜெயித்து உள்ளார்கள். இவையெல்லாம் பெண்களுக்கு உருவாக்கப்பட்ட அநீதி என்று தலைகனத்தோடு செயல்பட்டவர்கள் உடைய வாழ்க்கை, கேள்விக்குறியாகி இருப்பதை நீங்கள் கூட பார்த்திருக்கலாம். பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய மேற்குறிப்பிட்ட மூன்று விஷயங்களை தன்னுடைய வீட்டில் செயல்படுத்தினால் போதும். உங்கள் வாழ்க்கை சொர்க்கம் ஆகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

எந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர். உங்களுக்கு வரும் துன்பங்களுக்கு என்ன காரணம் எனவும் கூறுகிறார்.!!

மனிதனாய் பிறந்து விட்டால் பாவம் செய்தே ஆக வேண்டுமா என்ன? பாவமே செய்யாமல் எந்த மனிதனும் வாழ்வதில்லையா? எவை எல்லாம் பாவம் என்று தெரிந்தால் தானே? அவையெல்லாம் செய்யாமல் இருக்க முடியும். நமக்கு தெரிந்த பாவங்கள் பட்டியலில் இல்லாத சில பாவங்களும் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன பாவங்கள்? என்ற ஸ்வாரஸ்யமான தகவல்களுடன் இப்பதிவை தொடரலாம் வாருங்கள்.

பாவம் செய்யாத மனிதனே இல்லை என்கிறார் அகத்தியர். அகத்தியாரின் அற்புத நூல்களில் ஒன்று ‘அகத்தியர் பரிபூரணம் 1200’ ஆகும். இதில் இருக்கும் பாடல்களில் பாவம் எந்த வகையில் எல்லாம் மறைமுகமாக வருகிறது என்றும், அந்த பாவங்களின் தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

(1) காணவே யின்னமொரு சூட்சங்ககேளு, கருணையுட னுலத்தோடிருக்கும் போது, பூணவே கண்ணாரக் கண்ட பாவம், புத்தியுடன் மனதாரச் செய்த பாவம், பேணவே காதாரக் கேட்டபாவம், பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம், ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம், ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேள!!

இந்த பாடல் 677 வது பாடலாக இந்நூலில் வருகிறது. இதில் அகத்தியர் கூறுவது என்னவென்றால், ஒருவர் எந்த பாவமும் செய்யாமல் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் கூட அவர்களுக்கு பாவம் வந்து சேருகிறது. அது ஏன்? ஏனென்றால் நீங்கள் ‘கண்ணால் கண்ட பாவமும்’ அதாவது, பிறர் செய்யும் பாவத்தை கண்ணால் காண்கிறீர்கள், ஆனால் அதை தடுக்கவில்லை எனில் உங்களுக்கும் பாவம் வந்து சேரும். அதே போல் ‘காதாரக் கேட்ட பாவம்’ அதாவது, கெட்டவர்கள் அவச்சொல் பேசுவதும், தீய சொற்கள் வீசுவதும், வஞ்சகம் பேசுவதும் உங்கள் காதால் கேட்டும் அதை கண்டு கொள்ளாமல் செல்வதால் பாவம் வந்து சேருமாம்.

மேலும் ‘மனதாரச் செய்த பாவம்’ அதாவது, உங்களின் இன்பத்திற்காக பிறரை துன்பப்படுத்துவது, பெண்களை கொடுமை செய்வது, ‘கோ’ என்றால் பசு, பசுக்களை வதைப்பது, ஓரறிவிலிருந்து ஆரறிவு வரை உள்ள எந்த உயிர்களையும் கொள்வது, உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் என்று பல கோடி பாவங்கள் உள்ளன என்று அப்பாடல் கூறுகிறது. இந்த பாவங்களில் இருந்து விடுபட என்ன செய்வது? இதையும் மற்றொரு பாடல் மூலம் சூட்சமமாக விளக்கியுள்ளார் அகத்திய சித்தர்.

(2) காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே, காலறிந்து யோகமதால் அங்லங்கென்று, நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று நீ, மகனே நூற்றெட்டு உருவேசெய்தால், வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம், வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே!!.

சுத்தபத்தமாக சுத்தமான இடத்தில் கம்பளித்துணி விரித்து கொண்டு, வட மேற்கு திசையை நோக்கியபடி அமர்ந்து, நீங்கள் இடது புறத்தில் விடும் மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பின்னர் ‘ஓம் அங் லங்’ என்ற மந்திரத்தை 108 முறை நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதால் உயிரை கொன்ற பாவம் முதல் கோடி பாவ வகைகளில் எந்த பாவமாக இருந்தாலும் அதனால் உண்டாகும் கர்ம பலன்கள் நீங்கும் என்று அகத்தியர் கூறியுள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இனியும் எந்த பாவமும் செய்துவிடாமல் நல்லதையே செய்து நல்ல வாழ்க்கை வாழ்வோம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சென்னை - சிந்தாதிரிப்பேட்டை முருகனின் அருமருந்தாகும் அருட்பிரசாதம்.!!

வீட்டிலிருந்தபடியே நினைத்து வணங்க வேண்டிய கோயிலில் ஒன்றாக இந்த முருகனின் கோயில் திகழ்கிறது. இக்கோயிலை குறித்த மகிமைகளை நாம் அறிந்துகொண்டு ஊரடங்கு நிறைவடைந்ததும் சென்று தரிசிக்கலாம். எல்லாம் வல்ல பரம்பொருளாகிய முருகப்பெருமான் பக்தர்களின் நலனுக்காக அவ்வப்போது, ஆங்காங்கே அநேக விதமான அருளாடல்களைப்புரிந்து அருள்பாலித்து வரும் தொன்மை வாய்ந்த திருத்தலங்கள் பல. அவற்றுள் தொண்டைத் திருநாட்டில் விளங்கும் சென்னை மாநகரில் சான்றோர்களின் சிந்தையில் வைத்து ஆதரித்த, இறைநேசச் செல்வர்கள் பலர் தங்கி இருந்தும், வாழ்ந்தும், வந்து சென்றும் நல்வழிகாட்டிய பேட்டை குறிப்பிடத்தகுந்தது. 

அது  சிந்தாதிரிப்பேட்டை.  ‘முருகவேள்’ என்று பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாஸ சுவாமிகளால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்று, முருகக்கடவுளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு முன்னாளில் திருப்போரூர் சிதம்பரஸ்வாமிகள், பிற்காலத்தில் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாஸ சுவாமிகள் ஆகிய மகான்கள், தற்போது அமிர்தகடேஸ்வரர் கோயில் இருக்கும் இடத்தில் நீண்ட காலம் தங்கி இருந்து தவம் செய்து வந்திருக்கிறார்கள். பாம்பன் சுவாமிகளே இங்கு முருக பெருமானுக்கு உரிய கடம்ப மரம் வைத்து ‘தல விருட்சமாக’ வளர்ந்திருப்பதும், அருணகிரிநாதருக்கு விக்கிரகம் பிரதிஷ்டை செய்திருப்பதும் குறிப்பிடத்தகுந்தவை. அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழ் சிலவற்றில் ‘சிந்தை நகர்’ என்று குறிப்பிடுவது இந்த கோயிலைத்தான் என்றும், காலப்போக்கில் வெள்ளையர் ஆட்சி அமைந்து பலவித சூழ்நிலை மாற்றங்களால் அந்த ஆதாரங்களும், சில பாடல்களும் மறைந்துவிட நேர்ந்ததாகவும், இப்பகுதிவாழ் பெரியோர்கள் கூறுவர்.

சொன்னால் பிறப்பொழியும் சூராய கூற்றகலும்
என்னாளும் பேரின்பமெய்தும் நெஞ்சே
முன்னாள் பொருசூரன் வல்லுடம்பு போழ்ந்த வயிலேந்து

‘முருகவேள்’ என்று மொழி -என்று இந்த முருகப்பெருமானை பாம்பன் சுவாமிகள் பாடியிருக்கிறார். காஞ்சி மகா பெரியவர்கள் இங்கு வந்து முருகவேளை வணங்கியிருக்கிறார். திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் சிந்தாதிரிப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள் என்பதால் மிக அதிகமாக இந்த முருகனை வணங்கும் பேறு பெற்றதாக அவரே கூறியதும்  உண்டு. வள்ளி-தெய்வானை சமேதராக அற்புத அழகுத் திருமேனி கொண்டு விளங்குகிறார் முருகப்பெருமான். பாம்பன் சுவாமிகளால் தனி பீடத்தில் விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஞானசக்திவேல் இந்த முருகப்பெருமான் உடலுடன் ஒன்றி விளங்குவது அபூர்வமான காட்சியாகும். இந்த வேல் பீடத்தில் இருந்து அளிக்கப்படும் விபூதி திருவருள் பிரசாதம், நோய் தீர்க்கும் அருமருந்தாகவும், வினை தீர்க்கும் வல்லமை உள்ளதாகவும், லட்சுமிகடாட்சம் அருளக்கூடியதாகவும் வேண்டுவோருக்கு வேண்டும் வரமருளும் வரப்பிரசாதமாகவும் திகழ்கிறது. 

இங்கு மூலவர் முருகபெருமானுடன் விநாயகர், திருக்கடையூர்  அமிர்தகடேஸ்வரர், ஐயப்பன், அஷ்டபுஜ கனக துர்க்கை, வெங்கடேசப்பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, காயத்ரிதேவி, கால பைரவர், நவகிரகங்கள், இடும்பன்,கடம்பன், அருணகிரிநாதர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பாம்பன் சுவாமிகள், ராகவேந்திரர், வாரியார் சுவாமிகள் இவர்களுக்கும் அழகு சந்நதிகள் உண்டு. மஹாஸ்கந்தசஷ்டி 10 நாள் திருவிழாவாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் ஆகியவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அனைத்து சமயத்தவர்களும் இங்கு வழிபட வருவது முருகனின் அருளைத்தான் பறைசாற்றுகிறது. சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்தும், அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டிடத்திலிருந்தும் 5 நிமிட நடைபயண தூரத்தில் உள்ள சித்தாதிரிப்பேட்டையில் தெற்கு ஐயா முதலித் தெருவில் விளங்குகிறது இந்த முருகன் திருக்கோயில்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴