Friday, 30 November 2018

முருகப் பெருமான் எடுத்துக் கொடுத்த முதல் பாடல் அடி.!!

தமிழ்க்கடவுள் முருகனைப் பாடிப்பாடி மெய் உருகினவர்கள் ஏராளம். முருகனைப் பாடியதால் தமிழ் வளர்ந்தது. தமிழ் செழிப்படைந்தது. முருகன் துதிகளில் மிகச்சிறப்பானது திருப்புகழ்.பாடும்போதும், கேட்கும் போதும் மனதை கரைக்கும் மந்திரசக்தி திருப்புகழுக்கு உண்டு.

அருணகிரிநாதரை திருப்புகழ் எழுத வைத்ததும் முருகனின் பெருங்கருணையே. திருப்புகழ் தந்த அருணகிரி நாதர் பிறந்த ஊர் காவிரிப் பூம்பட்டினம் என்று சிலர் சொல்கின்றனர்
அருணகிரி நாதரின் மூத்த சகோதரி  திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தார் என்று சொல்கின்றனர்.

இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அருணகிரிநாதருக்கு. உரிய வயதில் திருமணமும் நடந்தது. கர்மவினையின் காரணத்தாலோ என்னவோ, பிற பெண்களின் தொடர்பு  அவருக்கு அதிகமாய் இருந்தது. கட்டிய மனைவி  இருந்தும், வெளியில் தவறான பெண்களிடம் ஈடுபாடு கொண்டு  சேர்த்து வைத்த புகழையும் பொருளையும் தொடர்ந்து இழந்தார்.
அருணகிரிநாதரின் காமம் தலைக்கேறியதால்  சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது. பெருநோயால் அவதிப்பட்ட நிலையிலும் காமம் தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முயன்றார். நோய்க்கோலம் கொண்டவரை புறக்கணித்தாள் மனைவி. வெறுத்து ஒதுக்கிய அவமானத்தைக் கடந்து காமத்தில் அருணகிரிநாதர் தவிக்க , கடும் கோபமுற்ற சகோதரி, உனக்கு பெண் தானே வேண்டும் என்று சொல்லி தன்னைப் பெண்டாளுமாறு  சத்தமிட, அந்த நிமிடத்தில் தன்னிலை உணர்ந்தார் அருண்கிரிநாதர்.
தீராத வேதனையுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்றார்.அங்கு கோபுரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தனது  உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றபோது காட்சி தந்தார் தமிழ்க்கடவுள் முருகப் பெருமான்.
குன்றுதோறாடும் குமரன், தனது திருக்கரங்களால், “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார். திகைத்த அருணகிரிநாதருக்கு தம்மைக் காப்பாற்றியது மயில்வாகனன் என்பதை அறிந்து பரவசமானார்.

இந்த உணர்ச்சிப் பெருக்கில் இருந்து மீளாத அருணகிரி தவிக்க , முருகனோ “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.

“முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு  சென்றார் முருகப் பெருமான். தித்திக்கும் திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும். மனம் தெளிவு பெரும். முருகப்பெருமானின் கருணைப் பார்வை நம் துன்பங்களை போக்கும்.
ஓம் முருகா...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்த ரங்கன்.!!

இந்து மதம் கடவுளையும் பக்தனையும்  தொலை தூரத்தில் தள்ளி வைக்கவில்லை. பக்தர்களைப் பக்கத்தில் வைத்து பரவசப்படுத்தும் பகவான் இங்கு உண்டு. ஈசனின் திருவிளையாடல்களும் எம்பெருமான் பெருமாளின் பல சம்பவங்களுமே இதற்கு மெய் சாட்சி. சூடி கொடுத்த சுடர் கொடி ஆண்டாளை தன்னகத்தே பெருமாள் ஏற்றுக் கொண்டது வரலாறு. இதற்கு சாட்சியாக நின்ற அழகருக்கு இன்றைக்கும் அக்காரா அடிசல் படைக்கப்படுகிறது. சாதிப் பிரிவினைகள் பார்க்காமல் இந்து தர்மத்தை நிலைநாட்டிய  ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த அற்புத மண் இது.

பக்தை ஒருவர் வீட்டில் பெருமாள் ஸ்ரீரங்கநாதர் கீரை உணவு உண்ட சம்பவம் ஒன்றை நம்மை நெகிழச்செய்கிறது. 
ஒரு தாயும் பிள்ளையும் மட்டுமே இருக்கும் ஏழைக் குடும்பம்.பையன் வேதம் படித்து வருவதற்காக ஒரு பள்ளியில் சேர்க்கப் படுகிறான்.15 நாளைக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்து அம்மா கையால் எண்ணை தேய்த்துக் கொண்டு காவேரிக்குப் போய் தோழர்களுடன் கும்மாளம் போட்டு விட்டு வருவானாம்.

அப்படி ஒரு தடவை  வீட்டுக்கு வந்த போது அம்மாவிடம் ஆசை ஆசையாகக், கீரை சமைக்கச் சொல்லிவிட்டு ஓடி விட்டது அந்தப் பையன்.அம்மாவும் சுடு சாதம் செய்து, சட்டியில் நல்ல அரைக் கீரையைச் சுத்தம் செய்து,வாசனையாகப் பெருங்காயம், கடுகு தாளித்து மசித்து வைத்துக் காத்திருக்கிறாள்.
குளிக்கப் போன பையனைக் காணோமே என்று கதவுக்கும் உள்ளுக்குமாக நடக்கிறாள்.
நீச்சலில் சூரன் பையன். ஆட்டம் போடாமல் திரும்ப மாட்டான், எல்லாம் தெரியும்.இருந்தாலும் நேரத்தோடு சாப்பிட்டால் தேவலையே என்று ரங்கா ரங்கா என்று அன்னை ஸ்ரீ ரங்கனை கூப்பிடுகிறாள்.
“கீரை செய்து இருக்கேண்டா, சீக்கிரம் வா”ன்னு வேற அழைக்கிறாள். அந்தப் பிள்ளை காதில் விழுந்ததோ இல்லையோ. நம் பள்ளிகொண்ட பெருமாள் காதில் விழுந்துவிட்டது.

அவருக்குக் கீரை சாப்பிட ஆசையாம்.உடனே எழுந்து இந்த ஏழைத்தாய் வீட்டு வாசலில் அவள் மகன் போலவே வந்துவிட்டார்.மகனைக் கண்டதும் அம்மாவுக்குக் கோபம் இருந்தாலும், 'பாவம் பிள்ளை பசியோடு இருப்பான்' என்று வாடா உள்ளே என்று கையைப் பிடித்து அழைத்துஆசனம் போட்டு, சரகு இலையில் சுடச்சுட அமுது பரிமாறுகிறாள்.மகனாக  வந்த பெருமாளும் கீரையும் சோறுமாக ,அத்தனை சோற்றையும் சாப்பிட்டுவிட்டு,அம்மா உனக்கு இல்லையே என்கிறான். அவளுக்கோ மகன் சாப்பிடுவதைப் பார்த்தே வயிறு நிரம்பிவிட்டது. “இன்னிக்கு விரதம்”ன்று சொல்லி விடுகிறாள்.
பையனும் வெளியே ஓடிவிட, காவிரியில் ஆட்டம் போட்ட பிள்ளை வருகிறான் பசியோடு. களைப்பாகப் பசியோடு படுத்திருக்கும் அம்மாவை எழுப்பி,“அம்மா எங்கே கீரை?” என்கிறான். அம்மா,“நீதானே இப்ப சாப்பிட்டுப் போனியேப்பானு”குழம்புகிறாள். “நேரத்தோடு வரலை அம்மா . நண்பர்கள்  எல்லாம் சேர்ந்து குளித்ததில் நேரம் ஆகிவிட்டது.பசிக்கிறதும்மா” என்று சொல்லும் பிள்ளையைப் புரியாமல் பார்க்கிறாள்.
அடுக்களையில் சட்டி அலம்பிக் கவிழ்த்தாச்சு. இது என்ன நான் சொப்பனம் கண்டேனா என்று மீண்டும் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீரைப் பாத்தியிலிருந்து இலைகள் கிள்ளி மறுபடியும் சமைக்கும்போது, வந்தப் பையனை நினைக்கிறாள்.
எப்போதுமே அம்மாவைப் பார்த்து ' நீ சாப்பிட்டியானு கேக்காத பிள்ளை, உனக்கு இல்லியேம்மா'னுகேட்டுதே என்று நினைக்கும் போதே அவளுக்குப்புரிந்தது,வந்தது யார் என்று.கண்ணில் நீர் பெருக ரங்கனின் கோபுரத்தைப் பார்த்துக் கைகூப்புகிறாள் அந்த தாய்.அழைத்த உடனே வந்தியா ரங்க ராஜா'' என்று மனம் குழைந்துஅழுகிறாள். 

தெய்வங்கள் ஒரு நொடியும் நம்மை விட்டு விலகுவதில்லை. இறுக இறைவனின் பாதாரவிந்தங்களைப் பிடித்துக் கொண்டால் நமக்கு விமோசனம் நிச்சயம் உண்டு.
"ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகளே சரணம்"

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

குலதெய்வத்தை எப்படி தெரிந்துக் கொள்வது?

ஒருவர் குடும்பத்தில்,பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வமே குலதெய்வமாகும். குலத்தைக் காக்கும் தெய்வமாதலால், வீட்டில் நடக்கும் எல்லா  பூஜைகளுக்கும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுப்பது நமது வழக்கம்.

சிலருக்கு வாழ்க்கை பெரும் போராட்டமாகவே இருக்கும். காரணத்தை ஆராய்ந்துப் பார்த்தால், அவர்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை சரி வர செய்யாதவர்களாக இருப்பார்கள். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் சேர்த்துப் பெற்று தர வல்லது இந்த குலதெய்வ வழிபாடு. இவ்வளவு ஏன் எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும் என்ற கருத்தில் இருந்து, குலதெய்வ வழிபாட்டின் சிறப்பினைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

வாழ்க்கையில் அதிகமாக கர்மவினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. அத்தகையவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை தங்களுக்கு காட்டிருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் வைக்கக்கூடாது.
இவ்வாறு உடல் மற்றும் மன சுத்தியுடன், 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். விரதம் மேற்கொள்ளும் இந்த 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக புலனடக்கம் தேவை.
இப்படி செய்வதால் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி யார் மூலமாகவோ அல்லது கனவிலோ அறிய வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை  இன்றும் நிலவுகிறது. இந்த வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்ய வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இந்த கோடையில் நமக்கும் (கருணை) மழை கொண்டுவருவார் காஞ்சி பெரியவா.!!

காஞ்சி மகாப் பெரியவர் ஆன்மீக உலகின் இமயம். பல வறண்ட  மனங்களை… மனிதர்களை பசுமையாக்கியவர். அடியாரின் துயரங்களைப் பொடிப்பொடியாக்கியவர். இயற்கையும் காஞ்சிப் பெரியவாவின் கட்டளைக்கு கட்டுபட்டதே. 
நாகை மாவட்டத்தில் ஒருமுறை காஞ்சி முனிவர் செய்த கருணை சம்பவம் இதோ....
1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போறார் என்று தெரிஞ்சதும்,நாகப்பட்டணத்துக்காராளுக்கெல்லாம் பரமானந்தம். அதற்குக் காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் வெடிச்சிருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது.பெரியவா அவர்கள் பாதம் பட்டால் தங்களுக்கு விடிவு பிறக்காதா என்ற ஏக்கம்.

பஞ்சமும்,வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன்னோட திட்டத்தை மாத்திக்காம அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லிவிட்டார்.
எங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு ஸ்நானம் செய்வதற்கும், மற்ற பூஜை காரியங்களை செய்வதற்கும் தேவையான நீரை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்,ஊர்க்காரர்கள் .
இரண்டு மூன்று நாட்கள் கழிந்தது. நாலாவது நாள்காலை  நீலாயதாக்ஷி அம்மன் கோவிலின்  சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தார்கள். அவர்களோடு  ஊர்ப் பெரியமனுஷர்கள்  சிலரும் வந்திருந்தார்கள். எல்லோர் முகத்துலயும் கவலைரேகை பட்டவர்த்தனமாவே தெரிந்தது.
வந்தவர்கள்,ஆசார்யாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினார்கள். அவர்களை ஆசிர்வதித்த ஆசார்யா,

"எல்லாருமா சேர்ந்து என்கிட்டே ஏதோ விஷயத்தை சொல்றதுக்காக வந்திருக்கறாப்ல தெரியறது? என்ன சேதி?" அப்படின்னு கேட்டார்.
"பெரியவா..உங்களுக்கு தெரியாதது இல்லை. நாலஞ்சு வருஷமாகவே இங்கே மழை இல்லை. ஊரே வறண்டு கிடக்கு. போனவருஷம் வரைக்கும் எப்படியோ சிரமப்பட்டு கோயில் திருவிழாவை நடத்திட்டோம். இந்த வருஷம் அதுக்கு எந்த வகையிலயும் சாத்தியமே இல்லாத சூழ்நிலை.அதான் திருவிழாவை நிறுத்திடலாம்னு தோணுது. நாங்களா தீர்மானிக்கறதைவிட உங்ககிட்டே சொல்லிட்டு அப்புறம் தீர்மானிக்கலாம்னுதான் வந்திருக்கோம்!" தயங்கி தயங்கி சொன்னார்கள்  எல்லாரும்.
எல்லாத்தையும் கேட்டுண்ட ஆசார்யா, மௌனமா கையை உயர்த்தினார். "அவசரப்பட வேண்டாம்.கொஞ்சம் பொறுத்துப் பார்த்துட்டு தீர்மானிக்கலாம்!" சொல்லிட்டு கல்கண்டு பிரசாதம் குடுத்து அவர்களை ஆசிர்வாதம் செய்தார்.
அன்றைக்கு மத்தியானம் உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த நேரத்தில், முகாமில் இருந்து  புறப்பட்டு எங்கேயோ வெளியில் போனார் பரமாசார்யா. எல்லாரும் என்ன காரணம்? எங்கே போறார்னு புரியாம பார்த்துக் கொண்டு இருக்க, மளமளவென்று  நடந்துபோய், பக்கத்துல இருந்த கோயில் குளத்தில இறங்கினார்.

குளம் வறண்டு பெரிய மைதானம் மாதிரி இருந்ததோட, பாதம் கொப்பளிக்கற அளவுக்கு சூடேறி இருந்தது.அதுல இறங்கின பெரியவா ,கோயில் பிராகாரத்துல அடிப்பிரதட்சணம் செய்யற மாதிரி தன்னோட பாதத்தை ஒவ்வொரு இடமா பதிச்சு, மெதுவாக நடந்தார்.

ஒரு இடத்துல நின்னவர், சட்டுன்னு கால் விரலால ஒரு இடத்துல கீறுறாப்புல தோண்டினார். அந்த இடத்துலேர்ந்து கொஞ்சமா ஜலம் வந்தது.உடனே அந்த ஜலத்துல தன்னோட வலது பாதத்தை வைச்சவர்,இடது காலைத் தூக்கிக் கொண்டு  மாங்காடு காமாட்சி ஒற்றைக்காலில்  தவம் இருக்கிறமாதிரி ஒரு சில நிமிஷம் நின்னு ஆகாசத்தை உற்றுப் பார்த்தார் .அடிச்ச வெயில்ல கொஞ்ச நாழிகையிலேயே பெரியவா பாதம் பதிஞ்சிருந்த இடத்துல இருந்த தண்ணியும் வந்தது. யார்கிட்டேயும் எதுவும் பேசலை பெரியவா கொஞ்ச நேரத்துல அங்கேர்ந்து புறப்பட்டு முகாமுக்கு வந்துவிட்டார்.
அன்னிக்கு சாயந்திரம் வானத்துல இருந்த வெள்ளை மேகம் எல்லாம் திடீர்னு கருநீலமா மாறி மளமளவென்று மழையா பொழிய ஆரம்பித்தது. ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. தொடர்ந்து நாலுநாள் மழை கொட்டித் தீர்த்து ஊர் முழுக்க வெள்ளப் ப்ரவாகமா ஓடி, கோயில் குளம் உட்பட.அந்த ஊரில் இருந்த எல்லா நீர்நிலையும் நிரம்பி வழிஞ்சுது.ஊரும், ஊர் மக்களோட மனசும் பூரணமா குளிர்ந்தது.

கோவில்காரர்கள்  மறுபடியும் பெரியவாளைப் பார்க்க வந்தார்கள்.
"அதான் மழை பெய்ஞ்சு குளமெல்லாம் ரொம்பிடுத்தே, அப்புறம் என்ன,ஜாம்ஜாம்னு திருவிழாவை நடத்துங்கோ!" ஆசிர்வதித்தார் ஆசார்யா.
வறட்சியா இருக்கிற ஊர்னு தெரிஞ்சும் நாகப்பட்டணத்துல வியாசபூஜை பண்ணணும்,சாதுர்மாஸ்ய விரதம் இருக்க முகாம் இடணும்னு பெரியவா தீர்மானித்தது, அங்கே அங்கே நிலவற வறட்சியை நீக்கவேண்டிய பணி தனக்கு இருக்குன்னு முன்பே அவருக்கு தெரிந்ததாலேயா ? இதற்கு  விடை, நாகை நீலாயதாக்ஷிக்கும் மகாபெரியவாளுக்கும் மட்டும் தெரிந்த  ரகசியம்.
இந்த கொதிக்கும் கோடை வெப்பத்ததையும் பெரியவா கருணை நிச்சயம் குளிமையாக்கும்.

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!!!

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அமாவாசை அன்று - இதை செய்வதால் தோஷங்கள் மறையும்.!!

அமாவாசை என்றதும் பிதுர் தர்ப்பணத்திற்கு அடுத்து அனைவருக்கும் நினைவிற்கு வருவது பூசணிக்காய் தான். வீட்டில்,தொழில்  நடத்தும் இடங்களில் திருஷ்டி கழியஅமாவாசை அன்று பூசணிக்காயை உடைப்பது வழக்கம். அதன் தாத்பரியம் பற்றி தெரிந்துக் கொள்வோமா ?

கூச்மாண்டன் என்ற அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் வழக்கம் போல், திருமாலை சரணடைந்தார்கள். தங்கள் நிலைமையை சொல்லி வைகுண்டவாசனிடம் கதறியழுதனர்.
அசுரனை வதம் செய்யம் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்த நாராயணன் அரக்கனுடன் போருக்கு  சென்றார். வந்திருப்பது இறைவன் என்று தெரிந்தும், கூச்மாண்டனும் ஆணவத்தால்  சண்டைக்கு தயாரானான்.

யுத்தத்தின் இறுதியில் திருமாலின் கரத்தால் கொல்லப்பட்டு,வேர் அறுந்த மரம் போல் விழுந்தான்.இறக்கும் தருவாயில், கூச்மாண்டன்,“வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வரமாக தர வேண்டும்” என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.
இறைவனும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க,“நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.”என்று யாசித்தான் அரக்கன்.
“இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையையும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?” என்று இறைவன் கேட்க, “பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கையால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்”.என்று வேண்டினான் கூச்மாண்டன்.
இறைவனும் மனம் இரங்கி, “சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.”என்று வரம் அருளினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ராம நாமத்தை ஒரே ஒருமுறை சொன்னதால் கிடைத்த பலன்.!!

பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், 'இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்...' என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் அவனும் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ' ஒரே ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்...' என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே...' என்று கூறியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, 'ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்...' என்றான்.
திகைத்த யமதர்ம ராஜா, 'ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது...' என்று எண்ணி, 'இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்...' என்றார்.
'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா...' என்றான்.
'இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான்...' என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, 'ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்...' என்றார்.
'யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன்...' என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.
அவரும், 'ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்...' என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை...' என்றனர்.

'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா...' என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡