Saturday, 4 July 2020

சூரிய வம்ச குல வரலாறு.!!

பிரம்மா
|
பிரம்மாவின் மகன் மரீசி
மரீசியின் மகன்✡காஸ்யபர்
✡காஸ்யபர் மகன் விவஸ்வான்(சூரியன்)
விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
வைவஸ்வத மனு மகன் இஸ்வாகு (இவர்தான் அயோத்தியை உருவாக்கினார்).
இஸ்வாகு மகன் குக்ஷி.
குக்ஷி மகன் விகுக்ஷி
விகுக்ஷி மகன் பானன்
பானன் மகன் அனரன்யன்
அனரன்யன் மகன் பிருது
பி்ருது மகன் திரிசங்கு (இவருக்காகத் தான் விஸ்வாமித்திரர் சொர்க்கம் படைத்தார்)
திரிசங்கு மகன் துந்துமாரன்
துந்துமாரன் மகன் யுவனஷ்வன்
யுவனஷ்வன் மகன் மாந்தாதா
மாந்தாதா மகன் சுசந்தி
சுசந்தி மகன் துவசந்தி மற்றும் பிரசந்ஜித்
துவசந்தி மகன் பரதன்
பரதன் மகன் அஸித்
அஸித் மகன் சகரன்
சகரன் மகன் அசமஞ்சன்
அசமஞ்சன் மகன் அம்சுமான்
அம்சுமான் மகன் திலீபன்
திலீபன் மகன் பகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
பகீரதன் மகன் காகுஸ்தன்
காகுஸ்தன் மகன் ரகு(காளிதாசன் ரகுவம்சமே)
ரகு மகன் பிரவர்த்தன்
பிரவர்த்தன் மகன் ஷங்கனன்
ஷங்கனன் மகன் சுதர்ஷன்
சுதர்ஷன் மகன் அக்னிவர்னன்
அக்னிவர்னன் மகன் சீக்ரகன்
சீக்ரகன் மகன் மேரு
மேரு மகன் பிரகஷ்ருகன்
பிரகஷ்ருகன் மகன் அம்பரீஷன்
அம்பரீஷன் மகன் நகுஷன்
நகுஷன் மகன் யயாதி
யயாதி மகன் நபாகன்
நபாகன் மகன் அஜன்
அஜன் மகன் 👑தசரதன்👑
தசரதன் மகன்கள்👑ராமன்👑, லட்சுமணன், பரதன், சத்ருக்னன்
ராமன் மகன்கள் லவன் மற்றும் குசன்.
பரதன் மகன்கள் தஷகன் மற்றும் புஷ்கலன்.
லட்சுமணன் மகன்கள் அங்கதன்,சந்திரகேது.
சத்துருகனன் மகன்கள் சுபாகு,சூரசேனன்.
குசன் மகன் அதிதி
அதிதி மகன் புண்டரீகன்
புண்டரீகன் மகன் ஷேமதனுவா
தேவானீகன்
அகீனரு
குரு
பாரியாத்திரன்
பலன்
சலன்
உற்தன்
வச்சிரநாபன்
சங்கணன்
வியுஷிதாசுவன்
விசுவயஹன்
ஹிரண்யநாபன்
தனமன்
துருவசந்தி
சுதரிசன்
அக்னிவர்ணன்
சீக்கிரகன்
மரு(இவரே அடுத்து வரும் கிருத யுகத்தின் சூரிய வம்சத்தில் முதல் மன்னன் ஆவார்).
பிரசுசுரன்
சுசந்தி
அமர்ஷன்
ஸஹஹ்வான்
விசுவபவன
பிரகத்பலன்(இவரே சக்கரவியூகத்தில் 🌙அபிமன்யுவை எதிர்த்த 6 மகாரதர்களில் ஒருவராவார்.அபிமன்யுவால் கொல்லப்படுவார்.

இன்னும் பல…….
ஆதாரம் :வால்மீகி இராமாயணம் அயோதியா காண்டம் சர்கம் 110 மற்றும் ஸ்ரீ விஷ்ணு புராணம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.!!

(1) மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்….

(2) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

(3) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

(4) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

(5) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

(6) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

(7) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

(8) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

(9) மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

(10) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

(11) ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

(12) அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

(13) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது – இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் – அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.

(14) நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் – கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ராகு தோஷம் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பொதுவான பரிகாரம்.!!

ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார வழிபாடுகளை தினமும் செய்து வந்தால் வாழ்வில் நல்ல மாற்றங்களை காணலாம்

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 3 July 2020

துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி ?

பல சந்தா்ப்பங்களில் நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தொிகின்றன. ஆயினும் , எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையில் இதை நான் செய்தேன் என்று நமது மனோசாட்சியைத் திருப்திப்படுத்தி விடுகிறோம். இன்னும் சொல்லப்போனால் , நாம் செய்யும் தவறுகளுக்கு காரணம் கண்டுபிடித்து, நம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

திருந்தவேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி நமக்கு ஏற்படும். ஆனால் , திருந்துவதற்க்கான வழி தொியாமையால் திருத்தம் பெறாமல் திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறோம். அவற்றின் பயனாகிய துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம். நமக்கு ஏற்படுகின்ற இந்த நிலைகளையெல்லாம் இறைவன் நன்றாக அறிந்து வைத்தே இருக்கிறான்.

திருந்த விரும்பும் ஒவ்வொருவரும் , துன்பங்களிலிருந்து விடுப்படுவதற்கு விரும்பும் ஒவ்வொருவரும் , திருந்தி மகிழ்ச்சியாக வாழும் பொருட்டே இறைவன் அருளாளா்களை , இப்பூவுலகிற்கு அனுப்பி , அவா்களைக் கொண்டு அருள்வாக்குகளை வழங்கச் செய்திருக்கிறான். அந்த அருள் வாக்குகளை வழங்கச் செய்திருக்கிறான். அந்த அருள்வாக்குகள் , நமது அறியாமையைப் போக்கி , நம்மைத் தீவினைகள் செய்வதிலிருந்து காப்பாற்றி , நம்மைத் தீவினைகள் செய்வதிலிருந்து காப்பாற்றி , நம்மைத் சிறிது சிறிதாக திருந்தச் செய்கின்றன. கொலைகாரா்களும் குணங்கெட்டவா்களும் கூட , அந்த அருள் வாக்குகளைப் பாராயணம் செய்வாா்களாயின் , நல்லவா்களாகி விடுவாா்கள்.

இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும். பழமையான உயர்ந்த ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை, சம்பிரதாயங்களை, நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும். ” ~ ஸ்ரீ ராமானுஜர்”.

உலகம் இயற்கையாகவே இயங்குவது போல் தோன்றினாலும், இதனை இயக்கும் அருட்சக்தியைத் தான் பகவான் என்று குறிப்பிடுகிறோம். பகவான் இன்றி உலகில் எச்செயலும் நடைபெறுவதில்லை. மண் இல்லாமல் எப்படி மண்குடம் உண்டாகாதோ, எப்படி தங்கம் இல்லாமல் ஆபரணம் உண்டாகாதோ அதுபோல கடவுள் இல்லாமல் உலகம் உண்டாவதில்லை.

பிராணிகள் கூட கடமையிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. நாய் வீட்டைக் காக்க தவறுவதில்லை. பசு பால் தர மறுப்பதில்லை. ஆனால், நாம் மட்டும் ஏனோ நம் கடமையிலிருந்து தவறி விடுகிறோம்! கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.

ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல்நாள் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்குவது போல, நாமும் சென்ற பிறவியின் தொடர்ச்சியையே இப்பிறவியில் தொடர்கிறோம். தோலால் ஆன பர்ஸ் அழகாக இருந்தாலும், அதில் பணமிருந்தால் மட்டுமே மதிப்பு உண்டாகும். அதுபோல சரீரம் என்னும் இந்த ‘பை’ எத்தனை அழகாக இருந்ததாலும், உயிர் இருந்தால் மட்டுமே உடம்புக்கு மதிப்புண்டு.

கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல அஞ்ஞானம் குடி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும். அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான். இருப்பினும், தளராது, முகம் கோணாது, ஞானப் பிரவாகமாக இருந்து, தெளிவு பெறும் வரை உபதேசிக்கும் ஆசார்யர்களுக்குத் தான் எத்தனை காருண்யம்! அத்தனை ஆசார்யர்களுக்கும்
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ குருப்யோ நமஹ !

குருவடி திருவடி சரணம் !

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ராமரின் விரதத்தை சோதித்த பெண்.!!

சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை.

அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது.

ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு முறை ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்தி வந்திருந்தாள்.

அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய அனுமதி வழங்கினார்.

அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது.

கலைக்கு அதிபதியான கடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது.

அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. ‘நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்த பெண்ணே!

இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் கேட்டுப் பெற்றுக்கொள்!’ என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், ‘அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?’ என்றாள். ‘கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை.

எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்’ என்று கூறினார் ராமபிரான். ‘அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்து தான் நான் இங்கு வந்தேன்.

உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!’ என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். ‘சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர்.

இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர்.

ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். ‘ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே.

அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!’ என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள்.

அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். ‘அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்..

!! ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம !!

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Thursday, 2 July 2020

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்..?

1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு சனீஸ்வரன் அருகில் வரமாட்டார்

2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..

3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்…

4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்…

5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள் சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் …

6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு வினைகளை அழிக்கும் விநாயகர் உன் வீடு
தேடி வருவார்…

7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு அழகன் முருகன் உன் வீட்டினில் அவதாரிப்பான்…

8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் அப்பொழுது கண்ணன் வருவான் அகத்திற்கு…

9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில், உலகை படைத்த ஜோதியான தந்தை ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு…
ஓம் நமசிவாய ஓம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சிவனுக்கு இரண்டு மனைவியா?

இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென பதில் கூறிவிடுவார்கள். முருகன், திருமாள் கதையை பிறகு பார்ப்போ ம். சிவனுக்கு வருவோம். சிவனின் மனைவி இருவர். அதவாது, உமா தெவியாரும், முடி மீது தாங்கும் கங்கா மதாவும் என்று பரவலாக கூறப்ப டுகிறது. உலகத்தை காக்கும் கடவுளுக்கு இரண்டு மனைவி என்று கேட்டால் நன்றாகவா இருக்கிறது? சிவனின் மனைவி உமையாள் மட்டுமே. அப்படியனால் சிவன் தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? கங்கை கொண்டானின் திருமுடியில் கங்கை வந்த கதையை பார்ப்போ ம்.

அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கை யாக ஓடி கொண்டி ருந்தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவ ர்களை எல்லாம் ஒரு உபாதை கூரும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர் ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களி ன் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.

பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா அரசன் முன் எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள்.

“தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வெண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியி னரையும் உய்விக்க வேண்டும்.”

”வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆக, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான். என் வலிமையை தாங்க முடியும்” என்று கூரி மறைந்தாள்.

பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கை யை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமு டியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியி ருக்கிறாள்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நானும் சிவன் தான் என்று ஆணவம் பிடித்த தேங்காய் கதை தெரியுமா?

பக்தி திருவிளையாடல் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த பயனுள்ள கருத்துகள் ஏராளமாக இருக்கின்றன. அவை அனைத்தும் மனிதனை நெறிபடுத்தும் வகையில் அமைந்திருக்கும். இவ்வகையில் ஆணவம் கொண்ட தேங்காய் எம்பெருமான் ஈசனிடமே கர்வமாக பேசி வாங்கி கட்டிய கதை தான் இது. ‘யாகவாராயினும் நாகாக்க’, என்ற வள்ளுவன் கூற்றை கடைபிடிக்க தவறியவர்கள் யாராக இருந்தாலும் இறுதியில் அவமானப்பட்டு தான் போக வேண்டி இருக்கும். அப்படி இவர்களுக்குள் என்ன தான் நடந்தது என்று பார்ப்போமா? 

ஒரு முறை கைலாயத்தில் சபை கூடிய போது அங்கு இருந்த தேங்காய் நடப்பவற்றை எல்லாம் பார்த்து கொண்டும், கேட்டு கொண்டுமாய் இருந்தது. கூட்டம் கலைந்து அனைவரும் சென்றதும் ஆணவம் கொண்ட அந்த தேங்காய் சிவனை நோக்கி திரும்பி பார்த்து நானும் சிவன் தானே? என்றது. உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? நீயும் நானும் ஒன்று தான் என்று கர்வமாக கூறியது. இதை கேட்ட சிவ பெருமானுக்கு கோவம் வரவில்லை. தேங்காய் என்ன தான் சொல்ல வருகிறது பார்ப்போமே என்று உரையாடலை தொடர்ந்தார். முக்கண் உள்ள தேங்காய்க்கும், முக்கண் மூர்த்தியாகிய சிவனுக்கும் ஆணவ திருவிளையாடல் அரங்கேறியது. 

தேங்காய் கூறியது: நானும் உன்னை போல தேவர்களை காத்தருள்வதால் தானே எனக்கு தேங்காய் என்ற பெயரே வந்தது? 

ஈசன் கூறியது: ஓ! அப்படியா? என்று சிவன் தேங்காயிடம் ஏதும் தெரியாதது போல் கேட்டார். பின்னர் நான் ஆமையின் தகர்க்க முடியாத வலுவான ஓட்டை தரித்திருக்கிறேன் என்றார். 

தேங்காய் கூறியது: நானும் தானே வலுவான ஓட்டை அணிந்திருக்கிறேன்? தேங்காய் ஓடு போல் கெட்டியாக இருக்கிறது என்பார்களே? நீர் அறிந்ததில்லையோ? என்று ஏளனமாக கேட்டது. 

ஈசன் கூறியது: சிவனும் விடுவாதாயில்லை. நான் என் உடல் முழுவதும் திருநீர் அணிந்து செக்க செவெளென காட்சி தருகிறேன் என்று வம்புக்கு இழுத்தார். 

தேங்காய் கூறியது: நான் தான் எதுவும் பூசாமலேயே சிவந்து காணப்படுகின்றேனே? உன்னை போல திருநீர் தரித்து தான் நான் வெள்ளையாக வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே நான் வெள்ளையாக தான் இருக்கின்றேன் என்று இருமாப்பொடு பதில் கொடுத்தது. 

ஈசன் கூறியது: ஓகோ! அப்படியா? நான் புலி, யானை போன்ற கம்பீர விலங்குகளின் தோல்களால் ஆன ஆடையை உரித்திருக்கிறேன் என்றார் விடாமல் சிவனும். 

தேங்காய் கூறியது: நான் மட்டும் என்ன? என் மீது இருந்த மட்டியை உரித்து தானே இங்கே அமர்ந்திருக்கிறேன் என்று கொலுப்பெடுத்து பேசிக்கொண்டே சென்றது தேங்காய். 

ஈசன் கூறியது: நான் என்னுடன் கங்கையை கொண்டு இருக்கிறேனே? என்றார். 

தேங்காய் கூறியது: அதை கேட்டதும் தேங்காய்க்கு சிரிப்பு வந்து விட்டது. நமட்டு சிரிப்புடன் என்னுள் இளநீர் உள்ளதே!! என்றது. 

ஈசன் கூறியது: ஈசன் எனக்கு முக்கண் உள்ளது என்றார். 

தேங்காய் கூறியது: எனக்கும் தான் முக்கண் உள்ளது என்றது தேங்காய். 

ஈசன் கூறியது: நான் மறைகளின் முடியில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு தலையில் சடைக்குடுமி இருக்கிறது என்றார். 

தேங்காய் கூறியது: பதிலுக்கு தேங்காயும் நானும் தான் தென்னையின் முடியில் அமர்ந்திருக்கிறேன். எனக்கு மட்டும் என்ன குடுமி இல்லையா? என்றது. 

ஈசன் கூறியது: இதற்கு மேல் தேங்காய்க்கு புத்தி வராது என்பதை அறிந்த ஈசன் ஆணவம் பிடித்த தேங்காயே உனக்கு எவ்வளவு திமிறு? கொஞ்சம் கூட பணிவே இல்லை. இனி உன்னை ஆலயங்களில் சிதறு தேங்காயாக உடைப்பார்கள் என்று சாபம் கொடுத்து விட்டார். 

இந்த நிகழ்விற்கு பிறகு தான் ஆலயங்களில் தேங்காய் சிதறும் படி உடைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். இன்றும் சிவனுக்கு அபிஷேகம் செய்யும் போது இளநீரை மட்டும் பயன்படுத்துவதில்லை. தேங்காய் மட்டும் உடைப்பார்கள். இது போன்ற திருவிளையாடல்கள் மூலம் மனிதர்களின் அகம்பாவம் ஒழிந்து நல்வாழ்வு கிடைக்க வழி கோளாக இருக்கும். ஆணவம், அகம்பாவம் மனிதனை நிர்மூலமாக்கி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Wednesday, 1 July 2020

லட்சுமி பூஜையின் போது சொல்ல வேண்டிய போற்றி.!!

எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமியை கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

எப்படி அழைத்தாலும் வரக்காத்திருக்கும் வரலட்சுமி விரத நாளில் நமது வீட்டில் உள்ள பூஜைப் பொருட்களை பயன்படுத்தி எளிமையாகவும், பூஜை செய்யலாம். துதிப்பாடல்கள் மூல மந்திரங்கள், காயத்ரி மந்திரங்கள் தெரியவில்லையே என யாரும் பூஜை செய்யாமல் இருந்து விட வேண்டாம். முதலில் விநாயகர் பாடல் எல்லோருக்கும் தெரியும். அதை சொல்லியே பின் கீழ்க்கண்ட போற்றியை 108, 1008 பூக்களை மட்டும் வைத்துக் கொண்டு உள்ளன்போடு போற்றினாலே போதும்.

1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!

2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!

3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!

4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!

5. தான்ய விருத்தியளிக்கும்- தான்ய லட்சுமியே போற்றி!

6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்- விஜயலட்சுமியே போற்றி!

7. சவுபாக்கியங்கள் தரும்- மகாலட்சுமியே போற்றி!

8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்- வீரலட்சுமியே போற்றி!

9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி.!!

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

கேட்டதும் கிடைக்கும் சன்னதி.!!

ஒரு சுமங்கலி தன் மகனை அழைத்துக் கொண்டு மகானிடம் வந்து “இவனுடைய வாயில் புண் இருக்கு…எத்தனையோ மருந்து கொடுத்தும் போகலே. பெரியவாதான் காப்பாத்தணும்” என்று வந்து நின்றாள்.
உடனே ஸ்ரீ பெரியவா அங்கிருந்தவர்களைப் பார்த்து “தேங்காய் பூ கிடைக்குமா” என்றார்.
பலபேருக்கு அப்படி ஒரு பூ இருப்பதாக தெரியவில்லை. தேங்காய் பூ பற்றி தெரிந்தவர்களுக்கோ அது கேட்டவுடனே கிடைக்கும் வஸ்து அல்ல என்பது தெரியும். ஏதாவது ஒரு தேங்காயில் அபூர்வமாக தென்படக்கூடியதாயிற்றே இப்படி திடுதிடுப்பென்று கேட்டால் கிடைக்காத பொருளாயிற்றே என்று செய்வதறியாமல் நின்றனர்.
இப்படி ஸ்ரீ பெரியவா தேங்காய் பூ கிடைக்குமா என்று கேட்டு நிறுத்திய உடனேயே காக்கிநாடாவிலிருந்து சிந்தாமணி கணபதி என்ற பண்டிதர் பக்தி பரவசத்தோடு ‘சந்திரசேகர பாஹிமாம்’ என்று பாடிக்கொண்டே வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்.
மேலும் தான் கொண்டுவந்த முப்பது தேங்காய்களை ஸ்ரீ பெரியவா முன்னே வைத்தார். எப்போதும் எல்லோரும் செய்வது போல தேங்காய்களை அப்படியே சமர்பிக்காமல் எல்லா தேங்காய்களையும் ஸ்ரீ பெரியவா முன்னாலேயே உடைத்து உடைத்து தட்டில் வைத்தார்.
என்ன அதிசயம்….அவற்றுள் நாலு மூடி தேங்காய்களுள் அரை எலுமிச்சை அளவில் தேங்காய் பூ என்ற கட்டி இருந்தது. அவைகளை அந்த மாதுவிடம் கொடுக்கச் சொல்லி “வெயிலில் உலர்த்தி தினமும் கொஞ்சமாக சாப்பிடச் சொல்லு” என்றார்.
பையனுக்கோ அவசரம். அதை உடனே அப்படியே வாயில் போட்டுக் கொண்டான். பெரியவா மற்ற பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்க ஒரு மணி நேரம் ஆனது. பையன் திரும்பி வந்தான். சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பையனுக்கு என்ன ஆனதோ என்று திகீரென்றது.
“பாதி புண் சரியாயிடுத்து” என்றான் பையன்!
இப்பேற்பட்ட ஆனந்த அனுபவங்களை அள்ளித் தந்து, தன் அபார கருணையால் ஆட்கொண்டருளும் ஸ்ரீ மகா பெரியவாளிடம் நாம் கொளும் பூர்ண சரணாகதம் நமக்கு சகல நன்மைகளையும், சர்வ மங்களங்களையும் அருளும் என்பது திண்ணம்.
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

தரித்திரமும் கண் திருஷ்டியும் நீங்க பரிகாரம்.!!

வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.

வீட்டில் சுத்தம் மிகவும் அவசியம். அளவுக்கு மீறிய கடன்கள், வருமானமின்மை, வரவுக்கு மீறிய செலவு ஆகிய அனைத்திற்கும் வீட்டில் இருக்கும் அழுக்குகளே காரணம். இவை நெகடிவ் எனர்ஜியின் பெட்டகங்கள். பழைய பேப்பர்கள், பால் பைகள், கிழிந்த துணிகள், இதர தேவையற்ற குப்பைகள் ஆகியவற்றைச் சேர்த்து பின்னால் வெளியில் விற்பதால் வரும் வருமானம் பத்து ரூபாய் என்றால் அதனால் இழக்கும் பணமோ ஆயிரம் என்பதை நினைவில் கொண்டு இவற்றைச் சற்றும் தாமதிக்காமல் அகற்றி விட வேண்டும்.

வீட்டில் உள்ள நெகடிவ் எனர்ஜியைப் போக்கவும் கண் திருஷ்டியைப் போக்கவும், ஆக்க பூர்வமான பாஸிடிவ் சக்தியை உருவாக்கவும் தினமும் வீட்டு அறைகளை நீரால் மெழுகித் துடைக்கும் போது அந்த நீரில் சிறிது கல் உப்பைச் சேர்த்தல் வேண்டும். (பவுடர் உப்பு அல்ல) ரத்தினக் கற்களை அணியுங்கள் என்பது சரகர் தரும் அறிவுரை. அவரவர் தேவைக்குத் தக்க உரிய ரத்தினக் கற்களையும் உபரத்தினங்களையும் தேர்ந்தெடுத்து அணிதல் வேண்டும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

குன்றி மணி.!!

இதை சிறுவயதில் நாம் பறித்து விளையாடி இருப்போம் அப்பொழுது நாம் அடைந்த சந்தோஷம் வேறு இப்பொழுது அதை வைத்து அடையும் சந்தோஷம் வேறு

குன்றி மணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்

10ரூபாய்க்கே தேவையான அளவு கிடைக்கும்

அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும்

குன்றி மணிகள் பலவகை உண்டு அனைத்தும் தன ஆகர்ஷனம் தரகூடியது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?

பொதுவாகவே பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும் என்றாலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். வீட்டில் கெட்ட சக்திகள் தங்காமல் இருக்க பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். இப்படி பல வகைப்பட்ட அற்புதங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்தப் பச்சை கற்பூரத்தை வைத்து எப்படி திலகத்தை தயார் செய்வது? இதை குறிப்பிட்ட எந்த நாளில் தயார் செய்தால் அதிக பலன் கிடைக்கும்? அந்த திலகத்தை தினம் தோறும் நெற்றியில் வைத்துக் கொண்டால், என்னென்ன பலன்களை நம்மால் அடைய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த பச்சை கற்பூர திலகத்தை தினந்தோறும் நெற்றியில் வைத்துக்கொண்டால் பலவிதமான பண பிரச்சனைகள் சுலபமாக ஒரு முடிவுக்கு வந்து விடும். அதாவது கொடுத்த கடன் தொகையை வசூலிக்க செல்லும் போது சிறிதளவு இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான கான்ட்ராக்டுகள் உங்கள் பக்கம், சாதமாக கையெழுத்தாக வேண்டும் என்றால் இந்த திலகத்தினை கொஞ்சம் நெற்றியில் வைத்துக் கொண்டு செல்லலாம். நல்ல காரியம் வெற்றியில் முடிய, உங்களுக்கு சாதகமாக முடிய வேண்டும் என்றால் இந்த திலகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திலகத்தை தயார் செய்ய வேண்டிய தினம் பவுர்ணமி நாள். அந்தப் பௌர்ணமி தினத்தன்று சுக்கிர ஹோரையில் தான் கட்டாயமாக திலகம் தயார் செய்யபடவேண்டும். மற்ற நேரங்களில் இந்த திலகத்தை தயார் செய்து நெற்றியில் வைத்துக் கொண்டாலும் அதற்கான பலன் முழுமை அடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திலகத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம். இந்த திலகத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள் பச்சை கற்பூரம், சாதாரண பூங்கற்ப்பூரம் 1கட்டி(மெழுகு கற்பூரம் பயன்படுத்தப்படக் கூடாது), ஜாதிப் பத்திரி, ஏலக்காய். உங்களுக்கு எந்த அளவில் திலகம் தேவையோ அந்த அளவிற்கு, இந்த பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக இடித்து, ஒரு மண் சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம். இந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தால் சாம்பலாகிவிடும்.

அந்த சாம்பலை சேகரித்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பசு நெய்யை விட்டு அந்த சாம்பலை குழைத்து நெற்றியில் வைத்துக்கொண்டால் போதும். இந்த திலகத்தை பூஜை அறையில் வைத்து தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, வீட்டில் மற்ற இடங்களில் வைக்கக்கூடாது. பெண்கள் மாதவிடாய் நாட்களில் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள கூடாது. மற்ற நாட்களில் காலை மாலை இரு வேலையும் ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இத்திலகத்தை தொடர்ந்து நெற்றியில் வைத்துக்கொண்டால் உண்டாகும் மாற்றத்தை அனுபவபூர்வமாக உங்களால் கட்டாயம் உணர முடியும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் உண்டு...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴