Saturday, 18 April 2020

பேச்சியம்மன் எனும் சரஸ்வதிதேவி.!!

தாய்தெய்வ வழிபாடு அக்காலம் தொட்டு இக்காலம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது. நவராத்திரியில் துர்க்கா பரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனை வடிவங்களும் ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா சஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது, அவளே சிருஷ்டி செய்பவள். (ஸ்ருஷ்டிகர்த்ரி - ப்ரம்மரூபா), அவளே பரிபாலனம் செய்பவள். (கோப்த்ரீ - கோவிந்த ரூபிணி), அவளே சம்ஹாரம் செய்பவள். (ஸம்ஹாரிணீ - ருத்ர ரூபா) என்று சொல்கிறது. லலிதா, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான், மகாலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்.

லட்சுமி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகையை நம’ என்று வருகிறது. சரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம’ என்று வருகிறது. படைப்பு, காப்பு, அழிப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வடிவங்களாக உருவெடுத்து வெவ்வேறு காரியங்களைச் செய்கிறாள். துர்க்கையாக இருக்கிற போது வீரம், சக்தி எல்லாம் தருகிறாள். மகாலட்சுமியாகி சம்பத்துக்களைத் தருகிறாள். சரஸ்வதியாகி ஞானம் தருகிறாள்.

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதி என்று சொல்லலாம். அவள் இமவானின் புத்திரியானதால் மலைமகள். மகாலட்சுமி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். சரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.
பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து (பாற் கடல்) பிறந்த மகாலட்சுமியும் இரண்டு மகரிஷிகளுக்கு பெண்களாக அவதரித்திருக்கிறார்கள். மகாலட்சுமியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தவம் இருந்தார். அதற்கிணங்கவே லட்சுமி தேவி அவருக்குப் புத்திரியாக அவதாரம் எடுத்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்குப் பார்கவி என்று பெயர் ஏற்பட்டது. இப்படியே காத்யாயன மகரிஷி சாட்சாத் பரமேஸ்வரியைப் மகளாக அடைய வேண்டும் என்று விரும்பி தவம் செய்தார்.
அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்கு மகளாக பிறந்ததாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. தெய்வத்தைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால் ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும், குரோதமும், துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த நேரத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த நேரத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை உள்ளுக்குள் வாங்கிக் கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம்.
உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது. காத்யாயனியைத்தான் கிராம மக்கள் ‘காத்தாயி’ என்று சொல்லி வழிபட்டு வருகிறார்கள்.
‘பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீவித்யா உபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான் நம் கிராம மக்கள் ‘பிடாரி’ ‘முப்பிடாதி’ என்று அழைத்து வழிபட்டு வந்தார்கள். பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதை ‘படாரி மானியம்’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம். இவ்வாறே நம் கிராம மக்கள் சரஸ்வதியை பேச்சு தரும் தாய் பேச்சு+தாயி என்பதே ‘பேச்சாயி’ என்றும் பேச்சு தரும் அம்மா, அம்மன் என்றும் பேச்சு+அம்மன் என்பதை பேச்சியம்மன் என்றும் நாமமிட்டு வழிபட்டு வந்துள்ளனர். இந்த பேச்சியம்மன் தான் பெரியாச்சி என்றும் பேராச்சி என்றும் அழைக்கப்படுகிறாள். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பேச்சாயி, பெரியாயி, பெரியாண்டியம்மன் என்றும் பல நாமங்களில் பேச்சியம்மன் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பேச்சி, பிரம்மசக்தியாய் அருளும் கலைமகள்.!!

கோபாலசமுத்திரம், நெல்லை மாவட்டம்.



கயிலாய மலையில் தேவியுடன் சிவபெருமான் வீற்றிருந்த வேளையில், தேவர்கள் சிவசக்தியை காண, கைலாச மலைக்கு வந்தனர். சிவனுடைய பாதத்தை வணங்கி நின்ற வேளையில், சிவன் தேவர்களை பார்த்து சொல்லுகிறார்.
‘‘மண முடிந்த தருணத்தில் எங்களை காண வந்த தேவர்களே, எனக்கு என்ன கொண்டு வந்தீர்கள்’’ என்று கேட்க, ‘‘தேவா! இந்தக் கயிலாயத்தில் இல்லாத வகை என்ன இருக்கின்றது. தாங்களோ, விருப்பு வெறுப்பு இல்லாதவர், எதையும் தாங்கள் விரும்பியது கிடையாது.” அப்போது சிவபெருமான் சொல்லுகிறார்.
‘‘தேவர்களே! அரிதிலும் அரிதான பாற்கடலில் பிறக்கும் பொன்னரிய மாலையை கொண்டு வாருங்கள். உங்கள் திறத்தைப் பார்ப்போம். என்று சொன்னதும் தேவர்கள் நிச்சயம் கொண்டு வருவதாக கூறிச் சென்றனர். திருப்பாற்கடலில் மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அமிர்தம் கடைய, பல்வேறு பொருட்கள் வந்து கொண்டிருந்தாலும் பொன்னரிய மாலை வரவில்லை. உடனே தேவர்களின் தலைவனான இந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டார். பிரம்மதேவன் அரளிப் பூவெடுத்து உருப்பிடித்துப்போட கடலில் பொன்னரிய மாலை வந்தது. அதை எடுத்த தேவர்கள் மனது மகிழ்ந்தனர். பின்னர் அதை பொன் குடம் ஒன்றில் வைத்து கயிலாயத்திற்கு எடுத்து வருகிறார்கள்.
 
வரும் வழியில் ராட்ஷச படைகளுடன் வந்து கொண்டிருந்த சண்டமுண்டன் என்ற ராட்ஷசன் தேவர்களிடம் வம்பு செய்தான். அப்போது அவர்கள் கொண்டு வந்த பொன்னரிய மாலையை பொன்குடத்துடன் அபகரித்துச்சென்றான். பொன்னரிய மாலையை பறிகொடுத்தவர்கள் வெறுங்கையுடன் கயிலாயம் சென்றார்கள். நடந்ததை சிவனாரிடத்தில் எடுத்து உரைத்தார்கள். உடனே சிவபெருமான், எமதர்மராஜனையும், ஆதித்தனையும் அழைத்து சண்டமுண்டனிடம் இருக்கும் மாலை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு இறைவா! அது எங்களால் இயலாத காரியம் அன்றோ என பதிலுரைத்தனர். உடனே பார்வதி தேவி, சிவனாரிடம் மகாதேவா, சக்தி என்னால் முடியும் என்றுரைக்க, பிரம்ம தேவன், தேவா, உங்களுக்கு செய்யும் பணி செய்யும் பொருட்டு என்னை இதில் உட்படுத்துங்கள் என்றார். புன்னகைத்தார் சிவபெருமான். ம்... ஆகட்டும் என்றவர் சேவகர்களை அழைத்து 51 அடி ஆழமும், 64 அடி சதுர வடிவமும் கொண்ட வேள்விகுழியை வெட்டுமாறு கூறினார்.
அதில் பலவகையான மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அணலை மூட்ட தயாரானார்கள். சிவன், சக்தியை பார்க்க, சக்தியின் அம்சம் சிவனுள் செல்ல, அதை சிவன் தன் நுதலில்(நெற்றி) ஏற்றி, நெற்றிக்கண் வழியாக அணலாக வெளிக்கொணர்ந்தார். நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த தீயை கப்பறையில் ஏந்தினார் பிரம்மதேவன். பின்னர் அதை வேள்விக்குழிக்குள் விடுகிறார். வேள்வித்தீ  கொளுந்து விட்டு எரிகிறது. அதில் பிரம்மன் தனது சக்தியை மெருகேற்றி கலைமகளின் ரூபமாக வெண் தாமரையும், மலைமகளின் ரூபமாக செவ்வரளி மலரையும், மஞ்சளும், குங்குமம், மஞ்சனையையும் அந்த தீயில் போட்டார். உடனே தீ பிளம்பிலிருந்து தோன்றினாள் பிரம்ம சக்தி. பிரம்மனால் ஒருங்கிணைந்து ஆக்கப்பட்ட சக்தி என்பதால் பிரம்மராக்கு சக்தி என்றும் அழைக்கப்பட்டாள்.
பிரம்மராக்குசக்தி, சண்டமுண்டன் என்னும் ராட்ஷசனை அழித்தாள். தென் மாவட்டங்களில் பேச்சியம்மன் துணையோடு தான் பிரம்ம சக்தி நிலையம் கொண்டிருக்கிறாள். சில இடங்களில் பிரம்மசக்தியையும் பேச்சியம்மன் என்றே தனித்தெய்வமாக வைத்து வழிபடுகின்றனர். நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் சீவலப்பேரி சுடலை கோயிலில் பேச்சி, பிரம்மசக்தி வீற்றிருக்கின்றனர்.  பிரச்சனைகளை தீர்த்து வைத்து நல்லருள் புரிகின்றனர். பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர், தனது முறைப்பெண் அதே ஊரைச்சேர்ந்த பண்டாரம் என்பவரின் மகள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சில ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒரு முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் தெரிந்தது. லட்சுமி பூப்பெய்ய வில்லை, அதனால் பெண்களுக்கு உண்டான மாதவிடாய்கள் வருவதில்லை. ஆகவே குழந்தை பேருக்கு சாத்தியமில்லை என்றனர். உடனே சுப்பையாவின் தாயார் வற்புறுத்தலின் பேரில் லட்சுமியை அடுத்த தெருவிலிருக்கும் அவரது வீட்டில் கொண்டு விட்டார். பின்னர் வாரிசு இல்லாத வாழ்வு என்ன வாழ்க்கை என்று கூறி, தனது மகன் சுப்பையாவிற்கு வேறு பெண் பார்க்க முற்பட்டாள் அவரது தாயார்.
லட்சுமியை நினைத்து அழுத அவளது தாயார், கோபாலசமுத்திரத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மன் சந்நதிக்கு தனது மகளை அழைத்து வந்தார். பேச்சியிடம், தாயே, ‘‘நீயும் ஒரு பெண் தானே, நீ தெய்வமாக இருந்தாள் என் மகள் முழுமையான ஒரு பெண்ணாக மாற்றித்தா, இல்லையேல் என் மகளை இந்த மண்ணுலகை விட்டு எடுத்துவிடு. பொம்மையாக ஒரு பிள்ளை எனக்கெதுக்கு’’ என்று அழுதாள். முறையிட்டாள். கோயில் பூசாரி திருநீறு கொடுத்து அனுப்பி வைத்தார். அன்றிலிருந்து 21 வது நாள் லட்சுமிக்கு மாதவிடாய் ஏற்பட்டு மங்கையானாள்.
சுப்பையா இதை அறிந்து மனைவியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். மறு வருடமே அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அது மட்டுமன்றி தொடர்ந்து மொத்தம் 3 பெண் குழந்தைகளை பெற்றாள். முதல் குழந்தைக்கு பேச்சியம்மன் என்றும், 2 வது குழந்தைக்கு பிரம்மராக்கு சக்தி என்றும், 3 வது குழந்தைக்கு செல்வசுடலி என்றும் தனக்கு வாழ்க்கை கொடுத்த கோயிலின் மூல தெய்வங்களின் பெயர்களையே சூட்டினாள்.  பெண்களின் பிரச்னையை தீர்ப்பதில் பேச்சி வல்லமை கொண்டவளாக திகழ்கிறாள்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Friday, 17 April 2020

பெருவாழ்வு அளிப்பாள் பேச்சாயி.!!

பிரம்மா, மகாவிஷ்ணுவை நேரே உருவாய் காண வேண்டும் என்று சத்தியவிரத க்ஷேத்ரமான இன்றைய காஞ்சிபுரத்தில் யாகம் நடத்தினார். இதற்கு தன்னை அழைக்கவில்லை என்று கோபம் கொண்ட அவரது தேவி, நாவுக்கரசி கலைவாணி பிரம்மனின், யாகத்தை தடுக்கும் பொருட்டு வேகவதி ஆறாக உருவெடுத்து வந்தாள்.

வேகவதி வெள்ளம் பொங்கி வருவதைக் கண்ட பிரம்மா, திருமாலின் உதவியை நாடினார். அப்போது வேகாசேது என்ற திருநாமத்துடன், அந்த வேகவதி நதிக்குக் குறுக்கே அணையாக வந்து சயனித்தார் திருமால். இதனால் ஆத்திரமுற்ற சரஸ்வதி தேவி, வேகவதி ஆற்றின் கரையோர பகுதியான தும்ப வனத்தில் ஆக்ரோஷம் கொண்டு அலைந்தாள், திரிந்தாள். விண்ணுக்கும், மண்ணுக்குமாய் பெரிய ரூபம் கொண்டு யாகம் நடைபெறும் இடம் செல்ல முற்பட்டாள். அவளை மகாவிஷ்ணு சாந்தப்படுத்த மணம் வீசும் நறுமன மலர்களை தூவி, அவ்விடமே கலைவாணி மயக்கமுற்று மல்லாந்து படுத்தாள். அந்த தேவியை அப்பகுதியில் வாழ்ந்த கிராம மக்கள் பேச்சாயி என்றும், பெரியாயி என்றும் நாமமிட்டு பூஜித்து வந்தனர்.
ஆற்காடு நவாப் காலத்தில் அக்கோயிலும் சிலையும் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அம்மனை வழிப்பட்டவர்களின் வம்ச வழியில் வந்த ரகுவின் தந்தை என்பவர், சென்னை தேனாம்பேட்டையில் குடியேறினார். ரகு என்பவரின் கனவில் வந்த பேச்சாயி தனக்கு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கேட்டதன் காரணமாக குன்றத்தூர் அருகேயுள்ள புதூர்நல்லூரில் ஏரிக்கரையோரம் கோயில் கட்டினார். பேச்சாயி என்றும் பெரியாயி என்றும் நாமமிட்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
சென்னை, குன்றத்தூர் அருகேயுள்ள புதூர் நல்லூர் ஸ்ரீபெருமந்தூர் சாலையில்  இக்கோயில் உள்ளது. ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில், அருள்வாக்கு மேடையில் அமர்ந்து ரகு அருள்வாக்கும் சொல்கிறார்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சாஸ்தாவுக்கு யானை வாகனம்.!!

தெய்வங்களுக்கான வாகனங்களில் யானை வாகனமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. சாஸ்தாவின் வாகனம் யானை ஆகும்.  யானையின் உடம்பு மிகப்  பெரியது. உலகப் பொருட்கள் அனைத்தும் அடங்கும் ஒரே பிண்டமாக யானையின் உடம்பு தோற்றம் அளிக்கிறது. அதிலிருந்து திரும்பித் தோன்றுவது லயத்தின் பின் ஸ்ருஷ்டி தொடங்குவதைக் குறிப்பதாகும். ஜடத்துவம், சுவாச சூட்சுமம், ஜீவத்வம், பிராணாயாமம் இவைகளைக் குறிக்கிறது.
தேவர்கள் இழந்த சுபிக்ஷத்தை அடைய, மந்தர மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு, அசுரர்கள் துணையுடன் பாற்கடலை கடைந்தனர்.  பகவான் கிருஷ்ணன் தன்வந்தரி வடிவத்தில் கைகளில் அம்ருத கலசத்தினை ஏந்தி தோன்றினார். அசுரர்கள் அம்ருதத்தை அவரிடமிருந்து பலவந்தமாக  அபகரித்துக் கொண்டனர். இருவர் செய்த உழைப்பின் கூலியை ஒருவர் மட்டுமே எடுப்பதை, அதுவும் பலவந்தமாக அபகரித்ததை பகவானால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை. அம்ருதத்தில் ஒரு துளி கூட அசுரர்கள் இனி அருந்த கூடாது என்றெண்ணி, மோஹினி அவதாரம் எடுத்தார்.
அசுரர்கள், மோஹினியின் பேரழகை கண்டு திகைத்தனர். மோஹிகினி  ‘‘அனைவரும் வரிசையில் அமருங்கள் நானே பங்கிட்டு தருகிறேன்.’’ என்று கூறி  அம்ருதத்தை தேவர்களுக்கு முதலில் வழங்கினார். அதை உண்ட தேவர்கள், அசுரர்களை வென்றனர். தேவேந்திரன் மீண்டும்  மூவுலகையும் ஆட்சி புரியலானான்.  நடந்தவைகளை நாரதர், பரமேஸ்வரனிடம் கூறினார். மறுகனமே ஈசன் பரந்தாமனை காண பாற்கடல் வந்தார். அகிலத்தையே மயக்கிய மோஹினி அவதாரத்தை  எனக்கு காட்ட வேண்டும் என்றார்.
அடுத்திருந்து நந்தவனத்தில் ஈசனிடம், பரந்தாமன் தான் எடுத்த மோஹினி அவதாரத்தை காட்டினார். பேரழகுடன் இருந்த மோஹினியை கண்ட ஈசன்  மோஹினியுடன் நெருங்கினார். அரியும், அரனும் சங்கமமாகினர். அரிஹர சக்தியும் ஒருங்கே பெற்று மஹா சாஸ்தா அவதரித்தார். உயிர்களை தீய  சக்திகளிடமிருந்து காத்து இரட்சிப்பவர் சாஸ்தா. சாஸ்தா, பிரபஞ்ச இயக்கத்தின் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவர். அதனால் தான், உலகப் பொருட்கள்  அனைத்தும் அடங்கும் ஒரே பிண்டமாக தோற்றமளிக்கும் யானையையே தனது வாகனமாக கொண்டிருக்கிறார் சாஸ்தா...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

பேச்சியம்மனின் அவதாரம்.!!

சிவபெருமான் உயிர்களுக்கு படி அளக்க புறப்பட்டபின் கயிலையில் பார்வதிதேவி, சிவபெருமான் உண்மையிலேயே படி அளக்கத்தான் செல்கிறாரா? அது எல்லா உயிர்களுக்கும் கிடைக்கிறதா? என்பதை சோதிப்பதற்காக தேவி, சிமிழில்  இரண்டு கட்டெறும்புகளை போட்டு அதில் திருகு ஆணி இட்டு இடுப்பில் சொருகி கொள்கிறார். படி அளந்துவிட்டு கைலாயம் வந்த சிவனிடம், ‘‘சுவாமி, எல்லா உயிர்களுக்கும்படி அளந்தீர்களா?’’
‘‘அவரவர் செய்த முற்பிறவியின்படி எறும்பு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளந்து தான் வருகிறேன்.’’

‘‘என்னிடத்தில் இரண்டு ஜீவன்கள்
பசியோடு உள்ளது.’’ ‘‘எங்கே அந்த ஜீவன்களை என்னிடத்தில் காட்டு’’.
பார்வதிதேவி தன்னிடமுள்ள சிமிழை திறந்து காட்டினார். அப்போது இரண்டு கட்டெறும்புகளும் தனது வாயில் அரிசியை கவ்விக் கொண்டு சிமிழுக்குள் வலம் வந்து கொண்டிருந்தது. இதைக்கண்ட தேவியார், சிவனிடம், ‘‘சுவாமி தங்களை சோதித்தமைக்கு என்னை மன்னித்தருள வேண்டும்.’’ ‘‘என்னையே! சோதித்தமைக்காக  வனப் பேச்சியாகவும், நாகக் கன்னியின் கருவில் அஷ்ட காளியாகவும் பிறக்கவேண்டும்’’ என சிவனார் கூறினார்.
இந்நிலையில் பார்வதிதேவி குழந்தை வரம் கேட்க தூண்டா மணிவிளக்கை சிவனார் தூண்ட, பார்வதி தேவியின் முந்தானையில் முத்துச் சுடர் மூன்று விழுந்தது.
முதல் பிறந்தவன் முண்டன், பின் பிறந்தவள் பேச்சி, அடுத்து பிறந்த சுடலை என மூன்று பேரையும் சிவபெருமான் பூலோகம் அனுப்பி வைக்கிறார். பூலோகம் வந்தவர்கள் தில்லை வனம் வருகிறார்கள். அங்கிருந்து மலையாளநாடு சென்றவர்கள் தென் பொதிகை மலைக்கு வந்து அமர்கிறார்கள். மயானம் சென்றதால் மயான பேச்சி என்றும், பேய்களை ஆட்சி செய்ததால் பேய்ச்சியானதாகவும் அது மருவி பேச்சி என்றும் அழைக்கப்பட்டது.  பிரம்மனின் சக்தியே இந்த பேச்சியம்மை என்றும் கூறுகின்றனர். இங்கு பிரம்மனின் சக்தி என்பது சரஸ்வதி ஆவாள். சரஸ்வதி கல்வி, கேள்வி, பேச்சு, கலை போன்றவற்றிற்கெல்லாம் அதிபதி ஆவாள். படைப்பு என்பதை பிரம்மனாக கொண்டால் அந்த படைப்பிற்குள் நுணுக்கத்தையும், நுட்பங்களையும், அழகியலையும், அள்ளித்தெளித்து படைப்பை வேறொரு கோணத்தில் காட்டும் சக்தியையே சரஸ்வதி என்கிறோம். எனவே தான் புராணங்கள் பிரம்மனையும், சரஸ்வதியையும் தம்பதியராக போற்றுகின்றன.
இந்த இரு தெய்வங்களும் படைப்பிற்குள் அழகும், அழகிற்குள் படைப்பும் என பிரிக்கொண்ணாத அளவுக்கு இடம் பெற்றிருக்கின்றனர். கிராமங்களில் மிக எளிதாக, நேரிடையாக சரஸ்வதியை பிரம்மசக்தி என அழைத்து பூஜித்து வருகின்றனர். மேலும் பேச்சியை சுற்றிலும் செவி வழிக்கதைகள் சொல்வதற்கான காரணம் என்பது அந்த தெய்வத்தை பல்வேறு கோணங்களில் சமூகத்தில் நிலைநிறுத்தவே ஆகும். இன்னும் பார்ப்போமானால் வழிபாடு, சடங்கு என்று பல்வேறு கால கட்டங்களில் உருவாக்கி அந்த தெய்வத்தை பெரும் மரபில் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். இதுபோன்று பேச்சியம்மன் குறித்து பல்வேறு கதைகள் கிராமப்புறங்களில் செவி வழிக்கதைகளாக
சொல்லப்படுகிறது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நாளை 18.4.2020 சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி! இந்த மந்திரத்தை உச்சரித்தால் மகா விஷ்ணுவின் அருளை முழுமையாகப் பெற முடியும்.!!

சித்திரை மாதம் என்பது பலவிதமான மங்கள காரியங்களை செய்வதற்கு ஏற்ற மாதமாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு விசேஷங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் நாளை தேய்பிறை ஏகாதேசி வரவிருக்கிறது. இந்தத் ஏகாதேசி மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்து. இந்த விசேஷமான நாளில் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை, குடும்பத்தோடு சேர்ந்த உச்சரிப்பதன் மூலம், குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். அமைதி நிலவும். சந்தோஷம் நிலவும். என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. விஷ்ணுவும், மகாலட்சுமியும் எப்படிப்பட்ட தம்பதியினரோ, அதேபோல் வீட்டில் இருக்கும் கணவன் மனைவியும் சேர்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு 8 மணிக்கு முன்பாக பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, நைவேத்தியமாக உங்களால் முடிந்தை இறைவனுக்கு படையலாக வைத்து, குடும்பத்தோடு சேர்ந்து மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார நினைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான மந்திரம் இதோ..

ஓம் சக்கரதாரியே நமஹ!

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை மகாவிஷ்ணுவை நினைத்து உச்சரிக்கவேண்டும். கட்டாயமாக  உங்களது குடும்பம் சுபிட்சம் பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. உங்களால் காலை நேரத்தில் பூஜை செய்ய முடியவில்லை என்றால் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம்.

பூஜையை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியில் வந்து ஆகாயத்தை ஒருமுறை உற்றுநோக்கி மனதார இரு கைகளையும் கூப்பி மகாவிஷ்ணுவை மனதார நினைத்து வணங்குங்கள். அதன்பின்பு மனதிலிருக்கும் கோரிக்கையை வேண்டிக்கொள்ளுங்கள். கூடிய விரைவில் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், தும்பிக்கை பலத்தோடு விரைவில் கடனை அடைத்து விடுவீர்கள்! உங்களது வாழ்வே சுபிட்சமாக மாறிவிடும்.!!

நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால், நமக்கு தும்பிக்கை வைத்திருக்கும் யானை பலம் ஏற்பட்டு எப்படிப் பட்ட கடனையும் அடைக்க மனதைரியம் வந்துவிடும். தும்பிக்கை நாதனை கும்பிட்டால் தீராத பிரச்சனை கூட தீரும் என்பதுதானே நம்பிக்கை. அந்த விநாயகப்பெருமானை வழிபடுவதன் மூலம் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையும் தீரும். எந்த குறிப்பிட்ட நாளில் விக்னங்களை தீர்க்கும் விநாயகரை, எப்படி முறையாக வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு தீராத கடன் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் ஏதோ ஒரு கெட்ட நேரம் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம். கெட்ட நேரத்தை நம் வீட்டிலிருந்து துரத்தியடிக்க என்னதான் செய்வது என்று போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் நல்ல வழிகாட்டியாக அமையும். ஏனென்றால் எந்தப் பிரச்சனையும் கண்டு அஞ்சாத மன தைரியம் ஒருவருக்கு வந்து விட்டாலே போதும். அந்த பிரச்சனையை சுலபமாக தீர்க்க ஒரு வழி நமக்கு கிடைத்துவிடும்.

ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி, அஷ்டமி திதி, அல்லது பிரதமை திதி இந்த நான்கு நாட்களிலும் விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். அப்படி விநாயகர் கோவிலுக்கு செல்லும் போது கட்டாயமாக அருகம்புல் மாலையை வாங்கி செல்ல வேண்டும். அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாத்திவிட்டு, உங்களது பேரைச் சொல்லி அர்ச்சனையும் செய்து விடுங்கள்.

அதன் பின்பு புரோகிதரிடம் சொல்லி, விநாயகர் கழுத்திலிருந்து ஒரு அருகம்புல் மாலையை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு வர வேண்டும். (அந்த மாலையானது நீங்கள் செலுத்திய மாலையாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒருவர் செலுத்திய மாலையாகவும் இருக்கலாம். ஆனால் அந்த அறுகம்புல் விநாயகரின் திருவுருவத்தை தொட்டு இருக்கவேண்டும் அவ்வளவுதான்.)

எடுத்து வந்த அந்த மாலையை உங்கள் வீட்டு பூஜை அறையில் பத்திரமாக வைத்து விடுங்கள். இரண்டு மூன்று நாட்களில் அருகம்புல் நன்றாக காய்ந்த நிலைக்கு வந்துவிடும். பின்பு அதை நன்றாக தூள்செய்து உங்கள் வீட்டில் சாம்பிராணி பொடியோடு கலந்துவிட வேண்டும். அருகம்புல் தூளை, கலந்த சாம்பிராணிப் பொடி தூபத்தை தினம்தோறும் போட்டு உங்கள் வீடு முழுவதிலும் காட்டி வாருங்கள்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்துவந்தால் நல்ல பலனை உங்களால் உணர முடியும். உங்களுக்கு இருக்கும் தீர்க்க முடியாத கடனை தீர்ப்பதற்கும் ஒரு வழி கிடைக்கும். வருமானம் பெருகும். வீட்டில் நிம்மதி நிலவும். வீட்டிலிருக்கும் எந்த கெட்ட சக்தியும் தெறித்து ஓடிவிடும்.

உங்களது பிரச்சினைகள் தீர்ந்து விடும். தொடர்ந்து கடன் பிரச்சனை வராமல் இருக்க,  மேற்குறிப்பிட்டுள்ள இந்த நான்கு தினங்களில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வரலாம். ஒருமுறை வாங்கிவந்த அறுகம்புல் பொடி கலந்த சாம்பிராணி தூபம் தீர்ந்து விட்டால், மறுபடியும் இந்த நான்கு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் விநாயகர் கோவிலில் இருந்து அறுகம்புல் மாலையை வீட்டிற்கு வாங்கி வந்து இதேபோல் பொடியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நம்முடைய வீட்டில் சுபிட்சம் நிறைந்து இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பார்ப்பதற்கு இது ஒரு சிறிய பரிகாரம் போல் தெரிந்தாலும் அருகம்புல்லுக்கு இருக்கும் சத்து மிக அதிகம். விநாயகரின் சிலையின் மேலிருந்து எடுக்கப்பட்ட அறுகம்புல்லின் வலிமையை சொல்வதற்கு வார்த்தை இல்லை. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

ராசியா? லக்னமா? லக்னம் என்றால் என்ன? உங்கள் பலனை துல்லியமாக எதை வைத்து ஜோதிடம் பார்ப்பது?

ஜாதகத்தை பார்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஜாதகம் பார்த்து நம்மிடம் சரியாக தான் பலன் சொல்கின்றார்களா? என்று யாருக்கு தெரியும்? முந்தைய காலங்களில் திறமையான ஜோதிடர்கள் இருந்தனர். இன்றைய நிலையில் யார் சரியாக சொல்வார்கள் என்று தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். இன்று மேலோட்டமான பலன் சொல்பவர்களே மிகுதியாக இருக்கின்றனர். ஜோதிடர்கள் நம் ஜாதகத்தை வைத்து நம்மை பற்றிய முக்காலத்தையும் பொதுவாக பலன் கூற வேண்டும். நாமாகவே நம்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு நிறைய கேள்விகளுடன் ஜோதிடர்களை நம்பி செல்கிறோம். நாம் கேட்கும் கேள்விக்கு மட்டும் மேலோட்ட பதிலை அளித்து விடுகின்றனர். வீட்டிற்கு வந்தும் ஜாதகம் பார்த்த திருப்தி கூட இருப்பதில்லை. மறுபடியும் வேறொரு நபரை தேடி அலைகிறோம். ஜோதிடம் என்பது மனித வாழ்வுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை. அதை சரியாக பயன்படுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை. லக்னம் என்றால் என்ன? லக்னத்தை வைத்து பலன் பார்ப்பது முறையா? ராசியை வைத்து பலன் பார்ப்பது முறையா? பலரும் குழம்பி கொள்ளும் விஷயம் இது. இதை பற்றிய அலசல் இதோ..

மனிதனின் ஜாதகம் அவன் பிறந்த நேரத்தை வைத்து அப்போது இருக்கும் வானியல் கிரக அமைப்புகளின் அடிப்படையில் ஜாதகம் எழுதப்படுகிறது. 9 கிரகங்கங்கள் ஒரு மனிதனின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என்று அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதே அற்புதமான விஷயம் தான். ஜாதகத்தை கணிப்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நுண்ணிய அறிவாற்றல் கொண்டிருக்க வேண்டும். ஜாதகத்தில் லக்னம், நட்சத்திரம், ராசி இந்த மூன்றும் முக்கியமாக குறிக்கப்பட்டிருக்கும். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இதில் எதை வைத்து பலன் சொல்கிறார்கள் என்றே பலருக்கும் புரியாத புதிராக இருக்கும்.

தமிழரின் வருட பிறப்பு சித்திரை தானே? தமிழில் ஏன் சித்திரையை முதல் மாதமாக பார்க்கப்படுகிறது? சித்திரையில் தான் சூரியன் மேஷ ராசியில் உதயமாகிறது. 2 மணி நேரத்திற்கு இது நீடிக்கும். பின்பு அடுத்த ராசியான ரிஷபத்திற்கு சென்று விடும். இது ஒரு சுழற்சி முறை. ஒரு குழந்தை பிறக்கும் போது சூரியன் எந்த ராசியில் இருக்கிறதோ அந்த ராசியை லக்னமாக குறிப்பிடுகிறார்கள். லக்னம் தான் முதல் கட்டம். லக்னம் என்பது மாற்ற முடியாத விஷயமாகும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் உங்களது ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டதிற்குள் உங்களது போன ஜென்மம், இந்த ஜென்மம், அடுத்த ஜென்மம் என்று அனைத்தையும் குறித்து விடலாம். இதில் லக்னம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன் ஜென்ம பாவங்கள், புண்ணியங்களை குறிக்கிறது. அதை மாற்ற முடியாது. ஜனனம், மரணம் எப்படியோ லக்ன பலன்களும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. இதையே விதி என்கிறோம்.

ஜென்ம நட்சத்திரம் உங்களின் நிகழ்கால வாழ்க்கையை இயக்கி கொண்டிருப்பவை. குழந்தை பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திர காலில் இருக்கிறாரோ அந்த நட்சத்திரம் தான் ஜென்ம நட்சத்திரமாக குறிப்பிடுகிறார்கள். நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றாலும் நட்சத்திர அடிப்படையில் உங்களை கிரகங்கள் இயக்கி கொண்டிருக்கும். நீங்கள் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டும், யாரையெல்லாம் சந்திக்க வேண்டும், எதையெல்லாம் வாங்க வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்று அனைத்தையும் தீர்மானிக்கும். இதுவும் வேறு வழி இல்லை. நாம் எப்படி இருக்க போகிறோம் என்று நமக்கு எப்படி முன்கூட்டியே தெரியும்?

ஜனன நேரத்தில் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே உங்களது ஜென்ம ராசியாக இருக்கும். முகூர்த்தம் பார்ப்பது, சுப காரியங்கள் செய்வது, வீடு காட்டுவது என்று எந்த நல்ல காரியத்திற்கும் ராசியை வைத்தே பொதுபலன் பார்க்கிறோம். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ஒரு சிலர் தாங்களாகவே நாட்காட்டியின் மூலமோ, இன்ன பிற செயலிகளின் மூலமோ கூறப்படும் பலன்களை வைத்து ஜோதிடம் அறிகிறார்கள். அவை யாவும் பொதுவாக சொல்லப்படும் பலன்கள் தான். உண்மையில் உங்களது லக்னத்தின்படி உங்களையுடைய அடிப்படை பலனை முதலில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். இதுவே ஆதி பலன். அதை அறிந்து வைத்திருந்து பின்னர் தசாபுத்திகளின் படி ராசி பலன் பார்ப்பது சரியாக இருக்கும்.

நீங்கள் விரும்பியதை அடைய மதியை வைத்து தான் விதியை வெல்ல முடியும். எழுதப்பட்ட விதியை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லவா? நாம் விரும்பியது நடக்க தானே ஆசைபடுவோம்? அதற்கு மதியை பயன்படுத்த வேண்டும். எந்த கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறது? எந்த கிரகங்கள் உங்களுக்கு பாதகமாக இருக்கிறது? என்பதை பாருங்கள். கிரகங்களின் பெயர்ச்சியின் பொழுது ராசி அடிப்படையில் பலன் பார்க்கலாம்.

ஒரு விஷயத்தில் இத்தனை வருட காலம் பொறுத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினால் அதன் படி நல்ல நேரம் வரும் வரை பொறுத்திருந்து செயலாற்றுவது தான் நல்லது. நேரமில்லை என்று உங்களுக்கு வசதியான நேரத்தில் ஜோதிடம் குறித்தால் அதில் பலனும் இல்லை. உங்களின் கர்ம வினை பயன்கள் கட்டாயம் வந்தே தீரும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சரியாக ஜோதிட பலன் பார்ப்பது ஒன்றே வழியாக இருக்கும்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

இறைவனுக்காக காட்டப்படும் கற்பூர ஆராதனையை, முறைப்படி இப்படி காட்டினால் மட்டுமே பலன்.!!

இறைவனுக்காக படைக்கப்படும் எல்லாப் பொருளும் இறைவனை முழுமையாக சென்றடைவது இல்லை. அதாவது இறைவனுக்கு படைத்துவிட்டு, அதன் பின்பு அதை நாம்தான் பயன்படுத்திக் கொள்கிறோம். பிரசாதமாக இருந்தாலும், வெற்றிலை, பாக்கு, பழம் எதுவாக இருந்தாலும் சரி. ஊதுவத்தியில் கூட சாம்பல் மிச்சம் இருக்கிறது. ஆனால் கற்பூரம் ஒன்று மட்டுமே அக்கினியில் எரிந்து கரைந்து, இறைவனை முழுமையாக சென்று அடைகின்றது. இப்படி இருக்க, இந்த

கற்பூர ஆராதனையை முறைப்படி, நாம் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? கற்பூர ஆராதனையை முறைப்படி எப்படி செய்தால், வீட்டில் சுபிட்சம் உண்டாகும், வீட்டிலுள்ள தரித்திரம் அனைத்தும் நீங்கும், என்பதை பற்றியும், அந்த இறைவனின் அருளை முழுமையாக பெற என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சில பேரது வீட்டில், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை கற்பூர ஆராதனை இறைவனுக்காக காண்பிப்பார்கள். சில வீடுகளில் தினம்தோறும் கற்பூர  ஆராதனையை அந்த இறைவனுக்காக காட்டப்படும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் சரி. முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் கற்பூர தீபத்தை ஏற்ற வேண்டும். அதன் பின்பு பூஜை அறைக்குள் இருக்கும் இறைவனின் திருவுருவப் படத்திற்கு ஆரத்தியை காண்பித்து விட்டு, அதன் பின்பு உங்கள் வீட்டு சமையலறைக்கு காண்பிக்க வேண்டும்.(கேஸ் பக்கத்தில் கற்பூர ஆரத்தியை கொண்டு போய் விடாதீர்கள்.)

அதன் பின்பு உங்கள் வீட்டில் எத்தனை அத்தனை அறைகள் உள்ளதோ, அவை அனைத்திற்கும், கற்பூர தீபத்தை காண்பிப்பது தான் சரியான முறை. இறுதியாக உங்கள் வீட்டு நில வாசற் படிக்கு வெளியில் சென்று நின்று, வீட்டின் உள் பக்கம் பார்த்தவாறு, உங்கள் நில வாசற்படிக்கு மூன்று முறை ஆரத்தியை காட்டி, சூரியபகவானுக்கும் மூன்று முறை கற்பூர ஆரத்தி காட்டி, அதன் பின்பு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் திரும்பவும் மூன்று முறை ஆரத்தி காட்டி உங்களது தீப ஆராதனையை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

இறுதியாக, எந்த இடத்தில் எல்லாம் தீப ஆராதனை காட்டி வந்தீர்களோ அந்த இடங்களில் எல்லாம்,  தீர்த்தம் விட வேண்டும். இதுதான் சரியான முறை. இதேபோல் சிலருக்கு இந்த கற்பூர ஆரத்தியை வீட்டிற்கு வெளியில் கொண்டுபோய் காமிக்கும் போது, காற்றினால் தீபம் அணைந்து விடும். இதை அபசகுணம் என்று கருதவேண்டாம்.

காற்றில் தீபம் அனைவது இயற்கை தான். இதில் வறுத்த படுவதற்கு எதுவும் இல்லை என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனதார தவறு செய்யாத எவர் ஒருவரையும் அந்த கடவுள் எதற்காகவும் தண்டிக்க மாட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த முறைப்படி வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டி வருவதன் மூலம் வீட்டில் எந்த இடத்திலும் கெட்ட சக்தி தங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கான முக்கியத்துவத்தை அன்னலட்சுமிக்கும் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

இதேபோல் சிலருக்கு மந்திரத்தை உச்சரித்துவிட்டு, கற்பூர ஆரத்தி காட்ட வேண்டுமா? அல்லது கற்பூர ஆரத்தியை காண்பித்த பின்பு மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா? எந்த சந்தேகமும் இருந்து வருகிறது. முதலில் மேல் குறிப்பிட்டுள்ள முறைப்படி கற்பூர ஆரத்தியை காட்டி முடித்து விட்டு, அதன் பின்பு அமர்ந்து மந்திரத்தை உச்சரியுங்கள். இறுதியாக ஒருமுறை கற்பூரத்தை ஏற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் சுவாமி படத்திற்கு மட்டும் தீபத்தை காண்பித்து பூஜையை நிறைவேற்றி கொள்வதே சரியான முறை...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

சித்திரை முதல் வெள்ளியான இன்று, இந்த மந்திரத்தை உச்சரியுங்கள். அபூர்வ சக்திகளைப் பெற்றுத் தரக்கூடிய, அற்புதமான நாள் இது. தவறவிடாதீர்கள்.!!

ஆடி மாத வெள்ளிக்கிழமை என்றால் தானே சிறப்பு. சித்திரை மாத வெள்ளிக்கிழமைக்கு என்ன சிறப்பு இருக்கிறது! என்ற சிந்தனை இந்த தலைப்பை படித்தவுடன் எல்லோருக்கும் வந்திருக்கும். ஆனால் ஆடி மாதத்தில் அம்மனுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ, அதே அளவிற்கான அற்புதமான சிறப்புகள் சித்திரை மாத வெள்ளிக்கிழமைக்கும் உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். இதனால் சித்திரை மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் சக்தி தேவியை மனதார நினைத்து வீட்டில் பூஜை செய்து வரவேண்டும். அந்த பூஜையை எப்படி செய்வது? எந்த மந்திரத்தை சொல்லி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

வழக்கம் போல உங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பூஜையை எப்படி செய்கிறீர்களோ அதன்படியே செய்யலாம். காலையில் பூஜை செய்வதாக இருந்தால் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம். மாலை பூஜை செய்வதாக இருந்தால், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பூஜையை செய்யலாம். 

பெண்கள் இந்த பூஜையை உங்கள் வீட்டில் செய்யும் போது முழுக்க முழுக்க அம்மனை மனதார நினைத்து செய்ய வேண்டும். அதாவது சக்தி தேவியின் அபரிவிதமான ஆற்றலைப் பெறுவதற்கு இந்த தினம் மிகவும் உரிய தினமாக சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பிரச்சனைகளை சமாளிக்கும் மன தைரியமானது இந்த பூஜையை செய்வதன்மூலம் உண்டாகும். என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 

எல்லா பெண்களும் அந்த பராசக்திக்கு நிகராக போற்றப்படுபவர்கள் தான். இப்படியிருக்க அந்த உமாதேவியின் அருளை முழுமையாகப் பெற்று விட்டோமேயானால் இந்த உலகத்தில் சுலபமாக எதையுமே வென்றுவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பெண்களுக்குள் வந்துவிடும். இப்படிப்பட்ட அபரிவிதமான இந்த சக்தியை, இந்த ஒரு மந்திரம் கொடுக்கும் என்றால், அதை உச்சரிப்பதில் என்ன தவறு இருக்கிறது. உங்களுக்கான அந்த மந்திரம் இதோ.. 

“ஓம் ஸ்ரீம் உமா தேவியே போற்றி” 

இந்த மந்திரத்தை கிழக்குப் பக்கமாக அமர்ந்து 108 முறை மனதார உச்சரியுங்கள். அதன்பின்பு உங்களது கோரிக்கைகளை உமாதேவியிடம் சொல்லுங்கள். அது கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சித்திரை மாதம் வரும் வெள்ளிக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொல்லி, உங்களது பூஜையை நிறைவு செய்யுங்கள். அபரி விதமான மாற்றத்தை, அனுபவப்பூர்வமாக உங்களாலேயே உணர முடியும். 

அதாவது உங்கள் வீட்டுப் பூஜையறையில், தீபம் ஏற்றி வைத்து தீப, தூப ஆராதனை காட்டி, வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, கிழக்குப் பக்கமாக அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். உங்களால் முடிந்த நைவேதினத்தை இறைவனுக்கு படைக்கலாம். வேறு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை உங்களது பூஜையை மனதார செய்யுங்கள். கட்டாயமாக வெற்றி நிச்சயம் உண்டு...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

வாடகை வீட்டில் இருப்பவர்கள், செய்யும், பூஜை புனஸ்காரங்களின் பலன் யாரைப் போய் சேரும்.!!

மனிதனாக பிறந்த எல்லோருக்குமே சொந்த வீட்டில் வாழும் பாக்கியம் கிடைத்து விடாது. நம்மில் பலபேர் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள். சிலபேருக்கு வாழ்க்கையில், சொந்த வீடு கட்டிக்கொண்டு போகும் யோகம் வந்துவிடும். சில பேருக்கு கடைசி வரை வாடகை வீடு தான் என்ற சூழ்நிலை இருக்கும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பலபேருக்கு, இந்த சந்தேகம் இருக்கிறது. வாடகை வீட்டில் நாம் செய்யும் பூஜையாக இருந்தாலும், ஹோமங்களாக இருந்தாலும், அதன் பலன் யாரை சேரும்? வீட்டுக்குச் சொந்தக்காரர் ஆன, அதாவது வீட்டு ஓனரை போய் சேருமா? அல்லது வீட்டில் குடியிருக்கும் உங்களுக்கு சேருமா? இந்த சந்தேகம் பல பேருக்கு உண்டு. 

இப்படிப்பட்ட சந்தேகங்களை எழுப்புவதற்காகவே சிலர் இருக்கிறார்கள்! ‘வாடகை வீட்டில் இருக்கும் நீ, எதற்காக ஹோமங்களை எல்லாம் செய்கிறாய்? இதற்கான பலன் வாடகைக்கு குடியிருக்கும், உனக்காக வரப்போகிறது! இந்த வீட்டின் உரிமையாளரை தான் போய் சேரும்.’ என்று சொல்லி உங்கள் மனதை குழப்பி விடுவார்கள். அதாவது சில பேர் வாடகை வீட்டில் இருந்தாலும் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், போன்ற ஹோமங்களை செய்வார்கள். இந்த ஹோமங்களில் கிடைக்ககூடிய பலன் யாரைப் போய் சேரும் என்ற, இந்த சந்தேகம் உங்களில் யாருக்காவது உள்ளதா? இந்த பதிவின் மூலம் தெளிவு படுத்திக்கொள்ளலாம். 

மனிதர்கள் தான், ஏழை பணக்காரன் என்ற பாரபட்சத்தை பார்த்து பழகுவான். கடவுளுக்கு ஏழை, பணக்காரன், சொந்த வீடு வைத்திருப்பவர், வாடகை வீட்டில் குடி இருப்பவர், என்றெல்லாம் தெரியாது. உண்மையான பக்தி மட்டுமே அவர் கண்ணுக்கு தெரியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாடகை வீட்டிலிருந்து கடவுளை அழைத்தாலும் சரி, வீடு இல்லாமல் காட்டில் தங்கி கடவுளே அழைத்தாலும் சரி, உண்மையான பக்திக்கு செவிசாய்ப்பவர்தான் அந்த இறைவன். ஆகவே, பூஜை புனஸ்காரங்களை மனதார எவரொருவர், மனத்தூய்மையோடு செய்கிறாரோ, அதற்க்காண பலனை அவர் கட்டாயம் பெறுவார். நீங்கள் வாடகை வீட்டில் தங்கி செய்யும் எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அதற்கான புண்ணியம் நிச்சயம் உங்களை வந்து அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

வாடகை வீட்டில் குடியிருந்து இந்த பூஜைகளை செய்கிறோமே! அதற்கான பலனை நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என்ற சந்தேகத்தோடு மட்டும் தயவு செய்து அந்த பூஜைகளை செய்யாதீர்கள். சந்தேகம் என்பது பூஜையில் வந்துவிட்டால், அந்த பூஜை கட்டாயமாக முழுமை அடையாது. 

சிலபேருக்கு மற்றொரு சந்தேகமும் உண்டு. நம்மில் பல பேர் இதை அனுபவப் பூர்வமாகவே பார்த்திருப்போம். அதாவது நம்முடைய வீட்டில் நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு இலைபோட்டு பிரசாதத்தை படித்திருப்போம். அந்த இலையில் இருந்து எடுக்கப்பட்ட பிரசாதத்தை அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் தான் உண்ண வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். அக்கம்பக்கத்தினர் கொடுப்பதாக இருந்தால் அந்த இலையில் வைத்த பிரசாதத்தை கொடுக்கமாட்டார்கள். அதாவது இறைவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதம் உங்களுக்கு மட்டுமே சொந்தம் இல்லை. அந்த பிரசாதத்தை நீங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் கொடுக்கலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

அடுத்ததாக, சிலபேருக்கு வீட்டில் நோன்பு நூற்கும் பழக்கம் இருக்கும். அதாவது தீபாவளி நோன்பு கார்த்திகை தீப நோன்பு, இப்படிப்பட்ட நோன்பு முறையினை கடைப்பிடிப்பவர்கள். அந்த நோன்பு தட்டில் நோன்பு கயிறு, குங்குமம், பிரசாதம் போன்றவற்றை வைத்து கோவிலுக்கு கொண்டு போய் அவர்களுடைய கோத்திர பெயரைச் சொல்லி, அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். அந்த குறிப்பிட்ட தட்டில் இருக்கும், அந்த பிரசாதத்தை வெளியாட்களுக்கு பகிர்ந்து கொடுக்க மாட்டார்கள். சில வீடுகளில் இந்த பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த நோன்பு பலகாரம், கயிறு இவைகளை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பார்கள். இது அவரவர் வீட்டு பாரம்பரியம். இந்தப் பாரம்பரிய பழக்கத்தை கடைபிடிப்பது தவறில்லை என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பழக்க வழக்கம் எல்லாம் இந்த காலகட்டத்திலும் கடைப்பிடிக்கிறார்களா, என்பது தெரியவில்லை. ஆனால் சில சாஸ்திர விதிமுறைகளை மீறாமல் இருப்பது நல்லது. 

‘சில பேர் எங்கள் வீட்டு பூஜை அறையில், இலையில் வைத்த பிரசாதத்தைக் கூட, வெளி ஆட்களுக்கு தருவது வழக்கம் இல்லை.’ இதுதான் எங்களுடைய பாரம்பரியம் என்று சொன்னாலும் பரவாயில்லை. அவரவர் வீட்டு பழக்கத்தை அவரவர் மாற்றிக் கொள்ளாமல் இருப்பது இன்னும் சிறப்பு. அது நம்முடைய பாரம்பரிய பழக்கவழக்கங்களை பலப்படுத்தும். 

எது எப்படியாக இருந்தாலும் சரி. இறைவன் என்பவன் எல்லோருக்கும் சமமானவன். அவன் யாருக்காகவும், எதற்காகவும் பாரபட்சம் பார்த்து அருளை வழங்க மாட்டான் என்பது மட்டும் உண்மையான ஒன்று. இந்த உலகத்தில் உள்ள பொருட்களில் இது எனக்கு சொந்தம். அது எனக்கு சொந்தம் என்று நம்மால் சொந்தம் கொண்டாட முடியுமே தவிர, இறைவன் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று யாராலும் சொந்தம் கொண்டாட முடியாது. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானவன் அந்த இறைவன். உண்மையான மனதோடு தன்னலம் கருதாமல் எவரொருவர் இறைவனின் பாதங்களை சரணடைகிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் முழுமையான ஆசீர்வாதம் கிடைக்கும், என்ற கருத்தினை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

Thursday, 16 April 2020

என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்கவில்லையா? முடி வளரவில்லையா? இதோ தீர்வு.!!

அந்த காலங்களில் எல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்படும். சொல்லப்போனால் வயது முதிர்ந்தாலும், நரைமுடி வருமே தவிர பெருசா வழுக்கை ஒன்றும் விழாது. ஆனால் காலம் மாறிவிட்டது. வளர்ந்து வரும் இந்த கால கட்டத்தில், நம்முடைய உடல் சூழ்நிலையும் மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த முடி உதிர்வு பிரச்சனை, ஒரு பெரிய பிரச்சனை தான்.

வீட்டை கூட்டி சுத்தம் செய்தால் குப்பை வருகிறதோ இல்லையோ? அந்த குப்பையில் முடி தான் வரும். முடி உதிர்வு பிரச்சனை இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக தான் இருந்து வருகிறது. இதற்கு தீர்வே கிடையாதா! என்று, புலம்பி கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கப்போகிறது.

முடி உதிர்வுக்கான முதல் காரணம் மன அழுத்தம். அதிகப்படியான வேலைப்பளு, டென்ஷன் காரணமாகவும், அதிகப்படியாக மூளையை கசக்கி சிந்திப்பதன் மூலமாகவும் முடி உதிர்வு ஏற்படுகிறது. அதன்பின்பு, நம்முடைய சுற்றுச்சூழல் மாசு. இந்த சுற்றுச்சூழலின் மூலம் தலைமுடி அதிகமாக பாதிப்பு அடைகிறது. அடுத்ததாக நாம் குளிக்கின்ற தண்ணீர். சில பேருக்கு தண்ணீர் மாறினால் கூட தலையிலிருந்து முடி உதிரும். இப்படியாக முடி உதிர்வுக்கு பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எது எப்படியாக இருந்தாலும், முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச் செய்ய இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்.

அந்த பொருள் சின்னவெங்காயம். சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய சல்பர் என்னும் வேதிப்பொருள் முடிஉதிர்வை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. முதலாவதாக இந்த சின்ன வெங்காயத்தில் இருக்கும் சாறை எடுத்து, 5 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு, முடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு, முடி அடர்த்தியாக வளர வழிவகை செய்கிறது.

அதாவது நாம் தலையில் தேய்க்கும் எண்ணெய்க்கு பதிலாக, எந்தவித செயற்கையான கலப்படமும் இல்லாத, இந்த சின்ன வெங்காய சாற்றினை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, பிழிந்து எடுத்தால் சின்ன வெங்காய சாறு கிடைத்துவிடும். தண்ணீர் ஊற்ற வேண்டாம். இதை எண்ணைக்கு பதிலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக, சின்ன வெங்காயத்தை எடுத்து வெண்ணீரில் போட்டு, வேக வைத்து அதன் பின்பு அதிலிருந்து சாறை வடிகட்டி எடுத்து, அந்த நீரினை தலையில் நன்றாக மசாஜ் செய்து ஊற வைத்து, ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளித்து விட்டால் போதும். ஒரே மாதத்தில் பாருங்கள்! உங்களது முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளரும். முடி உதிர்வு பிரச்சினைக்கு இந்த சின்ன வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
  

_ என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
       
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴

விஷக் காய்ச்சலை துரத்தும் திருநீலகண்டப் பதிகம்.!!

திருஞானசம்பந்தப் பெருமான் ஒரு முறை திருசெங்கோட்டிற்கு அடியார்களோடு வந்திருந்தார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் விஷக் காய்ச்சல் பரவியிருந்தது. மக்களும், இவருடன் சென்ற அடியார்களும் சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர். திருஞானசம்பந்தப் பெருமான் மக்களின் இந்த துயரத்தைப் போக்குவதற்காக இறைவனை நோக்கி திருநீலகண்டப் பதிகம் என்று பாடி அருளினார். செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம் என்று ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் வேண்டியபடி அமைந்த பதிகம் இது. கொரோனா வைரஸ் என்று நாம் எதிர்கொண்டிருக்கும் இந்த தொற்று நோய் காலத்தில் தினமும் வீட்டிலேயே அமர்ந்து ஈசனை மனதில் நிறுத்தி சொல்லியபடி இருந்தால் விரைவிலேயே ஈசனின் திருவருளால் இவ்வுலகம் விரைவிலேயே மீண்டெழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  
 திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்ட பதிகம்


அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக்கொய்து மலரடி போற்றுதும்நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்

முலைத்தட மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்டவிரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

விண்ணுலகாள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

மற்றுஇணை இல்லா மலை திரண்டன்ன திண்  தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

மறக்கு மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடுவந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே
திருவிலித் தீயினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழிந்தும்
பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

பிறந்த பிறவியில் பேணி எம் செல்வம் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே...

🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔🛕🪔

           🎪 *ஓம் நமசிவாய* 🎪

🌴🛕🌴🛕🌴🪔🌴🛕🌴🛕🌴
   

 _     என்றும் இறைப்பணியில்_

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*

             📲 +919486053609

     🕉️ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ 🕉️
        
       🙆🏻‍♂️ *இறைத்தொண்டு!* 🙆🏻‍♂️

🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴🎪🌴