Saturday, 1 June 2019

தண்டனையில் மிகவும் கடுமையானது.! மன்னிப்பு.!!

யார் ஒருவர் என்ன செய்தாலும் அவரை தண்டித்து கடுமை காட்டுவதை விட பெரிய தண்டனை அவரை மன்னித்து விடுவிப்பதுதான் என்கிறது இந்து தர்மம். அத்தகைய மன்னிப்பை பெற்றவர்கள் மீண்டும் வாழ்க்கையில் எவ்வித தவறும் செய்யமாட்டார்கள் என்றும் வலியுறுத்துகிறது. இதை உணர்த்தும் கதை ஒன்றை பார்க்கலாம்.
முனிவர் ஒருவர் இருந்தார். அவரது ஆசிரமத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும். அவர் பிரச்னைகளை அணுகி தீர்வு சொல்லும் விதம் மக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருந்ததால் எப்போதும் அவரிடம் கூட்டம் இருக்கும். முனிவரைப் பற்றி கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு மக்கள் எல்லாம் அவரை தேடி ஓடி வந்தார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்காமல் நல்ல தீர்ப்புகளை சொல்லி வந்தார் முனிவர்.

திருடன் ஒருவன் இருந்தான். மக்கள் கூட்டம் கூடும் இடங்களில் சென்று அவர்களது ஆபரணங்களைத் திருடி வந்தான். முனிவரின் ஆசிரமத்தில் கூட்டம் கூடுவதை அறிந்து ஆசிரமத்துக்குள் நுழைந்தான். நல்ல வேட்டை கிடைத்தது. தொடர்ந்து இதே போல் மக்களின் கவனம் திசைதிரும்பும் போது அவர்களது நகைகளைத் திருடிவிடுவான். ஒருமுறை இப்படிச் செய்யும் போது முனிவரின் சீடர்களிடம் மாட்டிக்கொண்டான். இனி இப்படிச் செய்யக்கூடாது என்று சீடர்கள் அறிவுறுத்தி அவனை வெளியனுப்பினார்கள். ஆடினகாலும் பாடின வாயும் சும்மாயிருக்குமா என்ன?
திருடன் மீண்டும் ஆசிரமத்துக்கு வந்தான்.
இம்முறையும் மாட்டிக்கொண்டான். உனக்கு தண்டனை கொடுத்தால்தான் திருந்துவாய் என்று அவனை முனிவரின் முன்னால் கொண்டு போய் நிறுத்தி நடந்ததை தெரிவித்தார்கள். முனிவர் எதுவும் பேசாமல் அவனை பார்த்தார். பிறகு எதுவும் சொல்லாமல் சீடர்களை பார்த்து ”அவனை விட்டுவிடுங்கள்” என்றார். ஒரு சீடன் மட்டும் முனிவரைப் பார்த்து ”குருவே இது இரண்டாவது முறை. இனியும்  இவனை தண்டிக்காமல் விட்டால் இவனுடைய கைவரிசை நீண்டுவிடும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. அதனால் தாங்கள் இவனுக்கு தக்க தண்டனை கொடுத்தே தீர வேண்டும்” என்றான். ஆனால் முனிவர் ”இவனுக்கு தண்டனை அளிப்பதில் எனக்கு எவ்வித உடன்பாடும்  இல்லை” என்று மறுத்துவிட்டார். திருடனுக்கு மகிழ்ச்சி பெருத்தது.

ஆசிரமத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்திருந்தார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்துகொண்டார்கள். நீண்ட நாள் கழித்து மீண்டும் அந்தத் திருடன் உள்ளே நுழைந்தான். இம்முறையும்  அவன் கைவரிசையைக் காட்டி மாட்டிக் கொண் டான். சீடர்கள் அவனை நைய புடைத்து முனிவர் முன்னிலையில் நிறுத்தினார் கள். ”நாங்களும் ஒவ்வொரு முறையும் அவனை கொண்டு வந்து நிறுத்துகிறோம். நீங்களும் அவனை மன்னித்து விடுகிறீர்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். முனிவர் சீடர்களையும், திருடனையும் மாறி மாறி பார்த்தார்.
”என்னிடம் குருகுல வாசம்பயில வந்திருக்கும் நீங்கள் கற்க வேண்டியவற்றை சிறப்பாக கற்றுகொண்டு விட்டீர்கள். ஆனால் இவன் களவை தவிர வேறு எதையும் கற்கவில்லை. அதனால் அவனை  இங்கேயே தங்க வையுங்கள். அவனை மனிதனாக்கி வெளியே அனுப்புகிறேன். இல்லையென்றால் முழு கள்வனாகி விடுவான் என்றார். திருடன் ஓடி வந்துமுனிவரின் காலில் விழுந்தான். தாங்கள் என்னை தண்டித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மன்னிப்பு கொடுத்து தண்டித்து உங்கள்சீடனாகவும் ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கதறினான்.

யாருடைய குறைகளையும் பெரிதாக்காமல் குறைகளே என்றாலும் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இறைவன் விரும்புவதும் இத்தகைய குணத்தைத்தான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

குழந்தைப் பாக்கியம் பெறுவதற்கு என்ன அபிஷேகம் செய்ய வேண்டும்?

செல்வத்தைக் கொடு, குபேரனாக்கு, ஆயுளை அதிகரி, பிணியின்றி வைத்திரு, வீடு பேறை அளி, நிம்மதியைக் கொடு இப்படியான வழிபாடுகளை இறைவன் மீது எல்லோரும் வைக்கிறோம். அதே நேரம் திருமணத்தடை, தொழிலில் தேக்கம், குழந்தைப்பேறு, நல்ல வேலை போன்றவற்றை வேண்டி பரிகாரம் செய்வதும் இறைவனிடமே..அப்படி கேட்டதுகிடைத்துவிட்டால் இறைவனை மகிழ்ச்சி படுத்தும் வகையில் பல்வேறு அபிஷேகங்களையும், ஆராதனைகளையும், தர்ம காரியங்களையும் முன்வந்து நடத்துகிறோம்.
பரிகாரங்கள் போலவே அபிஷேகங்களை செய்தும் இறைவனிட.ம் வேண்டியவற்றை கேட்பதும் உண்டு. ஆனால் அப்படி கேட்கும் போது நாம் வேண்டுவதற்கு ஏற்ப அதற்குரிய பொருளை அபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். அபிஷேகங்களுக்குரிய பொருள்களையும், அதற்கான பலன்களையும் முன்னோர்களும் அறிந்துவைத்திருந்தார்கள். குறைகளுக்கேற்றவாறு உரிய அபிஷேகம் செய்து குறையை நிவர்த்தி செய்து கொண்டார்கள்.

பிரார்த்தனைக்குப் பிறகு செய்யும் அபிஷேகத்தை விட பிரார்த்திக்கும் போதே செய்யும் வழிபாடுக்கு பலன் நிச்சயமுண்டு. என்னென்ன திரவியங்கள் எந்தெந்த பலனைத் தரும் என்று பார்க்கலாம். மனம் அலைபாய்ந்து நிம்மதியின்றி தவித்தால் இறைவனுக்கு நெய் அபிஷேகம் செய்யுங்கள். மனம் குளிர்ந்து உங்கள் அமைதிக்கு அருள் புரிவார் இறைவன்.
இளநீரினால் அபிஷேகம் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை தங்கும். உறவினர்களுடனான பிணக்குகள் தீர்ந்து அனைவரும் ஒருமித்து வாழ்வீர்கள். சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்தால் ஆயுள் நீடிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தால் நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய வேண்டும். கடனை அடைக்கமுடியாமல் சுமைகள் அதிகரித்தால் மாப்பொடியினால் அர்ச்சனை செய்வது நல்லது. கரும்புச்சாறினால் அபிஷேகம் செய்தால் பிணிகள் அகன்றுவிடும்.

மனதில் ஏற்படும் அச்சத்தை போக்க எலுமிச்சைச்சாறில் அபிஷேகம் செய்வது பலன் தரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் தடையில்லா செல்வம் உண்டாகும். எட்டு விதமான செல்வங்களையும் அடையலாம். முக்கியமான வேண்டுதல் புத்திரபாக்கியம் என்பதுதான். இவர்கள் பசுந்தயிரால் அபிஷேகம் செய்தால் புத்திரபாக்கியம் பெறுவார்கள். அறிந்தும் அறியாமலும் செய்த அனைத்து பாவங்களும் நீங்க பஞ்சகவ்ய அபிஷேகம் கைமேல் பலன் தரும்.
வழிபாடுகளில் சிறந்தது அபிஷேக வழிபாடு என்கிறது ஜோதிட சாஸ்திரம். இறைவனிடம் வேண்டுதலை நிறைவேற்றினால் அபிஷேகம் செய்து பூஜைகள் தருகிறேன் என்று வழிபடுவதை விட தேவையை உணர்ந்து அபிஷேகம் செய்து வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் கண்கூடாக நிறைவேறுவதைக் காணலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தீராத நோய் தீர்க்கும் கொடிமலை முருகன் கோவில்.!!

பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

மலேசியா நாட்டின் முதன்மையான மலை வாசஸ்தலமாக விளங்கும் ஆலயம், குன்றக்குடி குமரனை நினைவுபடுத்தும் கொடிமலை முருகன், ஆடிக் கிருத்திகைக்கும், கந்தசஷ்டி விழாவிற்கும் புகழ்பெற்ற கோவில், புதுமையான கயிற்றிழுவை ரெயில் கொண்ட மலை, தமிழர்களின் அபிமான முருகன் தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது, மலேசியா நாட்டில் உள்ள, பினாங்குமலை என்னும் கொடிமலை முருகன் திருக்கோவில்.

ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்கள் கால் பதித்து கெடாரம் கொண்ட பூமி. சோழ மன்னன் வென்ற கெடாரம், இன்று பினாங்கை அடுத்து ‘கெடா’ என்ற பகுதியாக அமைந்துள்ளது. 18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழர்கள் குடியேற்றம் நடந்து, தமிழ் மக்கள் நிறைந்த தீவாக இந்தப் பகுதி விளங்கி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பூமி, மலேசியாவின் கவுரவமாகத் திகழும் மாநிலமாகவும் இருப்பது தனிச்சிறப்பாகும்.

ஆலய வரலாறு :

பல்லாண்டு காலமாக, இந்த மலையின் உச்சியில், முருகப்பெருமானின் ஆயுதமான வேல் ஒன்று நிறுவப்பட்டு, மலைவாழ் அடியவர்களால் வணங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடத்தில், கோவில் கட்டிக்கொள்ள மலேசியா அரசு இடமளித்து அனுமதியும் வழங்கியது. 1971-ம் ஆண்டில் கொடை வள்ளலாகவும், தொழிலதிபராகவும் விளங்கிய மலேசியத் தமிழரான ஆறுமுகம் பிள்ளை என்பவரை தலைவராகக் கொண்டு, ஆதிமூலம் மற்றும் சிங்காரம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் எழிலான முருகன் கோவில் அமைக்கப்பட்டது. அந்த ஆலயம் கொடிமலை அருளொளி திருமுருகன் திருக்கோவிலாக இன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

தொடர்ந்து 1988-ம் ஆண்டு அரசின் மானியத்துடன் சமுதாய கூடம் அமைக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகியோரது சிலை வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் வடிக்கப்பட்டு மலேசியா கொண்டு செல்லப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தல இறைவனான கொடிமலை முருகன், கிழக்கு முகமாய் வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானாக பன்னிரு கரங்கள் கொண்டு அருளாட்சி புரிகிறார். வடக்கு நோக்கிய அசுர மயில் மீது எழிலாக அமர்ந்து அருள் வழங்குகிறார். இந்த முருகப்பெருமானை முருகனை மத வேறுபாடின்றி அனைத்து மதத்தவரும் வழிபட்டுச் செல்வது, இவரின் அருளாற்றலை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை, கார்த்திகை, சஷ்டி திதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவை தவிர, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, வரலட்சுமி நோன்பு, கார்த்திகை தீபம் உள்ளிட்ட விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடிக்கிருத்திகை விழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதேபோல, கந்தசஷ்டி விழாவும் ஏழு நாட்கள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன.

இத்தலம் குன்றக்குடி குமரனின் தலத்திற்கு இணையாகத் திகழ்வதாக, இங்கு வந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் உளமாரப் பாராட்டியுள்ளார். தீராத நோய் உள்ளவர்களுக்கு இங்கே தீர்வு கிடைப்பதாக, இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

பினாங்கு தீவின் பெருமைமிக்க இடமாகத் திகழ்வது, பினாங்கு மலை. இதனைத் தமிழர்கள் ‘கொடிமலை’ என்று அழைக்கின்றனர். ராணுவத்தின் கொடி, இந்த மலை மீது ஏற்றப்பட்ட காரணத்தால், இதனை கொடிமலை என்று அழைப்பதாக கூறப்படுகிறது. மலேசிய நாட்டின் முதலாவது மலை வாசஸ்தலமாக விளங்கும் பெருமை பெற்றது, இந்த மலை.

மாநிலத் தலைநகரான ஜார்ஜ் டவுனில் இருந்து மேற்கே 9 கிலோ மீட்டர் தொலைவில், பினாங்கு மலை அமைந்திருக்கிறது. இந்த மலையின் உயரம் 2,733 அடி ஆகும்.

பிரான்சிஸ் லைட் என்பவர் இந்த மலையையும், இதன் சிறப்பையும் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார். இந்த மலையில் அருளொளி முருகன் கோவில், புத்தர் கோவில், மூலிகைப் பூங்கா, பயணிகள் தங்கும் விடுதிகள் என பல உள்ளன. இம் மலையின் தட்பவெப்பம் மற்றும் இழுவை ரெயில் போன்றவை அனைவரையும் கவர்ந்திழுப்பதாக இருக்கிறது.

கொடிமலை ரெயில் :

ஆயர் ஈத்தாம் அடிவாரத்தில் இருந்து, 6550 நீளத்திற்கு கயிற்று இழுவை ரெயில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில் நடைபயணமாகவும், குதிரைகள் மீது ஏறியும், முடியாத நபர்களை டோலியின் மீது அமர வைத்தும் மலையேறி வந்தனர். கி.பி. 1897-ம் ஆண்டு இருப்புப்பாதை போடும் திட்டம் உருவானது. 1906-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு, 1923-ம் ஆண்டு அந்தப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்தது. அந்த ஆண்டில் இருந்து கயிற்று இழுவை ரெயில், மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது மீண்டும் 2010-ம் ஆண்டு நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருமாறியிருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கடன் பிரச்சினை தீர்க்கும் குலதெய்வ பரிகாரம்.!!

கடன் பிரச்சினை விரைவில் தீர, மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம். அதில் ஒன்றுதான் கடன் பிரச்சினை. இந்த கடன் பிரச்சினை விரைவில் தீர, மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

ஒரு சிலருக்கு குலதெய்வம் இருக்கும் ஆலயம், வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பவுர்ணமிகள் செல்ல இயலாத நிலை இருக்கும். அது போன்ற சமயங்களில் ஒரு சில பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம்.

வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள், அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கப்படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சினைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள், குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.

கடன் பிரச்சினை தீர இன்னும் சில பரிகாரங்களும் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை குளித்து பூஜைகள் செய்து, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.

வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

வளர்பிறையில் வரக்கூடிய திருதியை அன்று அன்னதானம் செய்தாலும் கடன் பிரச்சினை மற்றும் பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதை ஒவ்வொரு மாதமும் செய்யலாம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அட்சயமாக வளர்ந்த சந்திரன்.!!

பாற்கடலில் தான் மகாலட்சுமியை போல் பிறை நிலாவாக சந்திரன் அவதரித்தார். மகாலட்சுமி பார்வை பட்டதால் பிறை நிலவான சந்திரனும் அட்சயமாக வளரத் தொடங்கினார்.

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்த சிறப்புக் குரியவள். அதே பாற்கடலில் தான் பிறை நிலாவாக சந்திரன் அவதரித்தார். 

மகாலட்சுமி பார்வை பட்டதால் பிறை நிலவான சந்திரனும் அட்சயமாக வளரத் தொடங்கினார். அதன் பயனாக பவுர்ணமியாக பிரகாசித்தார்.

ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகிவிட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

லட்சுமியை வரவழைக்க மிக எளிய பிரார்த்தனை ஸ்லோகம்.!!

செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை ஸ்லோகம் தரப்பட்டுள்ளது... இதனை படித்து பலன் பெறுங்கள்.

செல்வத் திருமகளான மகாலட்சுமியை வழிபட இந்த பிரார்த்தனை தரப்பட்டுள்ளது...

மகாலட்சுமி தாயே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! சங்கு, சக்கரம் தாங்கியவளே! பாற்கடல் வாசனின் மனத்தாமரையில் குடியிருப்பவளே! உன்னை வணங்குகிறேன். வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத்தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன். அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டு பவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுப வளே! என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக் காத்தருள வேண்டும்.

முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித் தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

செந்தாமரைப்பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன்மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே!உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலைகடலில் உதித்த அருட் பாவையே! சரணடைந் தவர்களைக் காக்கும் ஜகன் மாதாவே! அஷ்ட ஐஸ்வர்யங் களையும் தந்தருள் பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.
பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள்பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக்கட்டும். பயிர்பச்சை செழித்து வளரட்டும். 

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும். செல்வ வளம் தருக! செய்யும் தொழில் வளர்க! கருணை பொழியும் கண்களைக் கொண்ட தாயே! அபயமுத்திரை காட்டி அருள்பவளே! அலங்கார மண்டபத்தில் வீற்றிருப்பவளே! நவரத்தின ஆபரணங்களைச் சூடியவளே! மஞ்சள் பட்டு வஸ்திரத்தை விரும்பி ஏற்பவளே! அருள் வடிவானவளே! ஆதிலட்சுமி தாயே! செல்வ வளம் பெறவும், செய்யும் தொழில் வளரவும் உன்னை வணங்குகிறேன்.

ஜடாமகுடம் தாங்கி நிலையாக ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சந்தானலட்சுமித் தாயே! கங்கணத்தை அணிந்த கையால் வரதமுத்திரை அளிப்பவளே! பூரண கலசம் ஏந்தியிருப்பவளே! மகாராணியைப் போல இருபுறமும் இளங்கன்னியர் சாமரம் வீச காட்சியளிப்பவளே! குழந்தைச் செல்வத்தை இடுப்பில் வைத்திருப்பவளே! சந்தானபாக்கியம் தந்தருள்பவளே! உன் திருவடி தாமரைகளைச் சரணடைந்து பணிகின்றேன்.

தேவர்களாலும், முனிவர்களாலும் விருப்பத்துடன் வணங்கப்படும் வித்யாலட்சுமியே! கலைகளெல்லாம் அள்ளித்தருபவளே! அலைமகளே! கல்விச்செல்வம் தந்து அறியாமையை அகற்றிக் காப்பவளே! ரத்தினமயமானதும், நவரத்தினத்தால் இழைக்கப்பட்டதுமான ஆபரணங்களை அணிந்தவளே! பாவத்தைப்போக்குபவளே! விருப்பங்களை நிறைவேற்றி அருள்பவளே! மதுசூதனனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே! வித்யாலட்சுமியே! எனக்கு அருள்புரிய இதுவே நல்ல தருணம்.
தங்கம் போல பிரகாசிக்கும் தனலட்சுமித்தாயே! பூரணகும்பம், சங்கு, சக்கரம், வில், அம்பு, தாமரையை கரங்களில் தாங்கியிருப்பவளே! உயிர்களுக்கு அருள்புரிபவளே! சங்கநிதி, பதுமநிதிகளின் அதிதேவதையே! சகல சவுபாக்கியங்களையும் கடைக்கண்ணால் வாரிவழங்குபவளே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரியே! அரவிந்தனின் அன்புத் துணைவியே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.

சர்வ அலங்கார ரூபிணியே! தான்யலட்சுமித்தாயே! மலர்ந்த தாமரை, கரும்பு ஏந்தியிருப்பவளே! கருணை நிறைந்த கடைக் கண்களால் அன்பர் குறை தீர்ப்பவளே! நதிக்கரைகளில் விருப்பமாக வீற்றிருப்பவளே! வற்றாத நீர்வளமும், தானியபெருக்கமும் செய்து உயிர்க்குலத்தைக் காப்பவளே! எப்போதும் என் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிலைத்துஇருக்க அருள்புரிவாயாக. சிவந்த தாமரை மலரில் வீற்றிருந்து அருள்புரியும் கஜலட்சுமித்தாயே! ஆற்றல் மிக்க இரு யானைகள் இருபுறமும் நின்று திருமஞ்சனம் செய்ய மனம் மகிழ்பவளே! அழகுமிக்க அணிகலன்களுடன் கம்பீரமாக இருப்பவளே! உன் அருளால் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைபெற வேண்டும்.

எட்டுத்திருக்கரங்களைக் கொண்ட வீரலட்சுமித்தாயே! சங்கு, சக்கரம், சூலம், வில், அம்பு, கபாலம் தாங்கியவளே! வெற்றிமாலையைக் கழுத்தில் அணிந்தவளே! பக்தர்களின் அச்சத்தைப் போக்குபவளே! தைரியத்தை நல்கிடும் வீரலட்சுமியே! வெற்றி தேவதையே! நாங்கள் செய்யும் செயல்களில் வெற்றியைத்தந்தருள்வாயாக.

மின்னல் போல ஒளிவீசும் விஜயலட்சுமி தாயே! வாசனை மிக்க திரவியங்களை விரும்பிஏற்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! சந்திரனின் சகோதரியே! பள்ளி கொண்ட பரந்தாமனின் மார்பில் குடிகொண்டவளே! வளம் நிறைந்த செல்வ வாழ்வு பெற நல்வழிகாட்டுவாயாக...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நரசிம்மருக்கு 30 பெயர்கள்.!!

நரசிம்மருக்கு உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன.

சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.

விஷ்ணு மூலவராக உள்ள ஆலயங்கள் தமிழகத்தில் சுமார் 5,200 உள்ளன. அவற்றில் பெருமாளுக்கு வழங்கும் சுமார் 6000 நாமங்களில், பரவலாக உள்ளதில் நரசிம்மரும் ஒன்று அப்பெயரோடு சுமார் 100 கோவில்கள் உள்ளன. அங்கெல்லாம், பெருமாள் வெறுமனே நரசிம்மர் என்று மட்டும் அழைக்கப்படுவதில்லை. உருவ அமைப்பு ஏந்தியுள்ள ஆயுதங்கள், பார்வை நிலை, அணிந்துள்ள ஆபரணங்கள், இருக்கும் பாங்கு, அருட்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு அடைமொழியோடு 30 திருப்பெயர்கள் உள்ளன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  

     என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡