Thursday, 2 May 2019

எண்ணெய் உறிஞ்சும் சிவலிங்கம்.!!

மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி. பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது. 

நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மையைக் குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.

ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிராகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்துப் பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், க்ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிளி முகம் கொண்ட சுக முனிவர்.!!

வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாசரின் மகன் தான் சுக முனிவர். இவர் கிளி முகம் கொண்டவர்.

வேதங்களை நான்காக பகுத்தவரும், புராணங்களில் பலவற்றை எழுதியவருமான வேதவியாசரின் மகன் தான் சுக முனிவர். மிகுந்த நினைவு சக்தி கொண்ட இவரால் வேதங்களையும், சாஸ்திரங்களையும் நொடிப்பொழுதில் கற்க முடிந்தது. சுக முனிவர் கிளி முகம் கொண்டவர். 

இவரை அடிக்கடி திருமணம் செய்து கொள்ளச் சொல்லி, வியாசர் வற்புறுத்திய காரணத்தால் வீட்டிற்கு வருவதை தவிர்த்தார். பின்னர் கெஞ்சிக் கூத்தாடி அழைத்ததன் பேரில் சுக முனிவர், வீட்டிற்கு வந்தார். அதன் பிறகும் கூட வியாசர், மகனை திருமணத்திற்கு கட்டாயப்படுத்த முயல, சுக முனிவர் மீண்டும் அங்கிருந்து சென்றார். 

அவரைப் பின் தொடர்ந்தார் வியாசர். வான் வழியாக அவர்கள் இருவரும் பறந்து சென்றனர். அப்போது ஒரு குளத்தில் பெண்கள் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் குளத்தை சுக முனிவர் கடந்து சென்றார். அதே போல் வியாசரும் அந்த வழியாக வந்தபோது, பெண்கள் அனைவரும் தங்கள் உடலை மறைத்துக் கொண்டனர். 

அப்போது வியாசர் அதிர்ச்சியடைந்து, “பெண்களே! என்னை விடவும் என் மகன் வயதில் சிறியவன். அவனைப் பார்த்து நீங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் வயதான என்னைப் பார்த்து உங்கள் உடலை மூடிக்கொள்கிறீர்களே” என்றார்.

அதற்கு அந்தப் பெண்கள், “சுக முனிவர் அனைத்தையும் துறந்தவர். அவர் கடவுளுக்கு நிகரானவர். தாங்கள் பெரும் தவசி என்றாலும், நீங்கள் ஒரு மனிதராகவே எங்களுக்கு தெரிகிறீர்கள்” என்று கூறினர்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பிரதோஷ நேரத்தில் கூற வேண்டிய ஸ்லோகம்.!!

பிரதோஷ காலத்திலும், தினமும் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லவேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி.


ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:

இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

இன்று 2.5.2019 சித்திரை மாத பிரதோஷம்… சிவனை விரதம் இருந்து வழிபட சிறப்பு நாள்.!!

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.

ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். 

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.

இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, விரதத்தை தொடங்கி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும்.

நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் வேறு புண்ணியம் செய்ய வேண்டுமோ?

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் விரதம் இருந்து வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.

வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும்.

வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும். இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மும்மூர்த்திகள் வாசம் செய்யும் கொடுமுடி மகுடேசுவரர் கோவில்.!!

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.

சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி. 

பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும். 

மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது. 

கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது. 

கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் திரிசூலநாதர்.!!

சென்னை மீனம்பாக்கத்தில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்றன, மேலேறி பறக்கின்றன, பரபரப்பாக இயங்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்கள் இங்கு இப்படி ஒரு ஆன்மீக தலம் இருப்பதை அறிவார்களா என்று தெரியவில்லை. இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகிறது. பிரம்மன் வழிபட்ட தலமாக இங்கு திரிசூலநாதர் எழுந்தருளியிருக்கிறார். நான்கு மலைகள் சூழ நடுவில் அமைந்துள்ளது திரிசூல நாதர் திருக்கோயில். தனது படைப்புத்தொழில் இடையூறின்றி நடக்க வேண்டி பிரம்மதேவர் ஒரு குளத்தை வெட்டி அங்கு சிவலிங்கம் அமைத்து வழிபடுகிறார். பிரம்மன் உருவாக்கிய பாணதீர்த்தம் கொண்ட இந்த சிவலிங்கமே திரிசூலநாதர் திருக்கோயில். 


நான்கு வேதங்களே நான்கு மலைகளாக, வேதங்களின் உட்பொருளான இறைவன் அவற்றின் நடுவில் வீற்றிருக்கும் இடமே திரிசூல நாதர் திருக்கோயில்.  பிரம்மதேவர் அமைத்ததாக கூறப்படும் தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜை, வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. விமான நிலையத்திற்கு எதிரில், ரயில்வே கேட்டை கடந்து வந்தால், ஒருகிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நந்தியெம்பெருமானை வழிபட்டு, நல்ல தரிசனத்திற்கு அனுமதிகேட்டு உள்ளே நுழைவோம். நுழைந்ததும் திரிசூலநாதரை தரிசிக்கலாம். திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதராக இருந்தாலும், அவருக்கு அருகே சௌந்தராம்பிகை இருக்கிறார். நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது, காரணம் திரிசூலநாதரின் அருகே இடப்புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இப்படி இருப்பதற்கு பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. 

அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த சௌந்தராம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே அன்னையை இருக்கச்செய்திருக்கிறார்கள். அன்னையும், தந்தையுமாக உயிர்ப்புடன் அருள் தரும் தலம் இது.அன்னையை தரிசிக்க வேண்டும் என்றால், ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால், அன்னையின் தரிசனத்தை பெறலாம். காலம் காலமாக அருள் சுரக்கும் அன்பு முகத்துடன் காட்சிதரும் அன்னை, உண்மையிலேயே சௌந்தரம் ததும்பும் பேரழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

இந்தக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 -1120) காலத்தில் கட்டப்பட்டது. முதலில் வானவன் சதுர்வேதிமங்களம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீற்றுசோழநல்லூர் என்றும் பின்னர் இறைவனின் பெயரால் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லவபரமன வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்களம், திருநீற்றுசோழநல்லூர், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திரிசூலம் என்ற பெயர்களில் இந்த ஊர் வழங்கப்படுகிறது.இக்கோயிலில் ஆதிசங்கரர், ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கோயிலின் பழைமையை இங்கு நுழைந்ததுமே உணர முடியும். யக்ஷர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிரம்மனுக்கே அருள்பாலித்த இடம் என்பதால் திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதரை வழிபட்டால் நமக்கு வரும் கெட்ட நேரங்களும் நல்லநேரங்களாக மாறும்..நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க.. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

மழலை வரம் தந்த சாய் மகாராஜ்.!!

சீரடி தெய்வத்தின் ஒவ்வொரு சொற்களும் அவரின் அடியவர்களுக்கு வேத வாக்கு. அவர் சொல்லும் சொற்கள் மகத்துவம் வாய்ந்தது என்று மனமார நம்பினார்கள். அவர் சொல்லிவிட்டால் அது அப்படியே பலிக்கும் என்பது அவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. ஸோலாபூரைச் சேர்ந்த சகாராம் ஔரங்கபாத்கர் என்பாரின் மனைவிக்கு 27 ஆண்டு காலமாகக் குழந்தையில்லை.  கண்ணில் பட்ட தெய்வங்கள் அனைத்துக்கும் கணக்கற்ற பிரார்த்தனைகளை அவள் செய்துகொண்டாள்.  ஆனால் அதற்கான பலனை தான்  காண முடியவில்லை . இதனால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த அவள்,   இறுதி முயற்சியாகத் தனது சகோதரியின் புதல்வனான விஸ்வநாத்துடன் சீரடி வந்து பாபாவுக்குச் சேவை செய்துகொண்டு இரண்டு மாதங்கள் தங்கியிருந்தாள். 


மசூதிக்கு அவள் சென்றபோதெல்லாம் கூட்டத்தால் மசூதி நிரம்பி இருப்பதையும், பாபா பக்தர்களால் சூழப்பட்டிருப்பதையும் கண்டாள்.அவள் அவரைத் தனியாகக் கண்டு வீழ்ந்து வணங்கி தனது நீண்ட நாள் கோரிக்கையான பிள்ளை வரத்தை வேண்ட விரும்பினாள். ஆனால் அதற்கான  உரிய சந்தர்ப்பம் கிடைக்காத காரணத்தினால், முடிவாக அவள் பாபாவிடம் அவர் தனியாக இருக்கும்போது தனக்காகப் பேசும்படி பாபாவின் நெருங்கிய நண்பரான  ஷாமாவிடம் கேட்டுக்கொண்டாள். 

ஷாமா அவளிடம் பாபாவின் தர்பார் வெளிப்படையானது என்றும், எனினும் அவளுக்காகத் தான் முயற்சிப்பதாகவும், கடவுள் அவரை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் கூறினார்.  தேங்காயுடனும், ஊதுபத்தியுடனும் முன்னிருக்கும் திறந்தவெளியில் பாபாவின் உணவு நேரத்தில் தயாராக இருக்கும்படியும், அவர் அவளுக்கு ஜாடை காண்பித்ததும் வரவேண்டும் என்றும் கூறினார்.  ஒருநாள் உணவுக்குப்பின் பாபாவின் ஈரக்கையை ஷாமா துண்டால் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார். 

இதன் பின்னர் பாபா தமது இருக்கையில் போய் அமர்ந்தார். ஷாமா அந்தப் பெண்மணிக்கு ஜாடை செய்தார்.  அவள் மேலே வந்து வணங்கி தேங்காய், ஊதுபத்தி இவைகளை பாபாவிடம்அளித்தாள்.  பாபா அந்த முற்றல் தேங்காயை ஆட்டினார்.  அதனுள்ளிருந்த பருப்பு உருண்டு சப்தம் செய்தது. 

பாபா: ஷாமா இது உருளுகிறதே, என்ன சொல்கிறது என்பதைக் கவனி. 

ஷாமா:  இந்த பெண்மணி, அந்த மாதிரியாக ஒரு குழந்தையும் தனது வயிற்றில் உருண்டு உயிர்ப்புற வேண்டுமென்று வேண்டுகிறாள்.  எனவே அத்தேங்காயைத் தங்களது ஆசீர்வாதத்துடன் கொடுங்கள். 

பாபா: இத்தேங்காய் அவளுக்கு ஒரு மழலையை அளிக்குமா?  இம்மாதிரி விஷயங்களில் எல்லாம் ஜனங்கள் எவ்வளவு முட்டாள்தனமாகவும், போலி நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.

ஷாமா:  உங்களது மொழி, ஆசி இவைகளின் சக்தியை நாங்களறிவோம் .  உங்களது சொல் அவளுக்கு நிச்சயம் குழந்தைப் பேற்றை அளிக்கும்.  நீங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையான ஆசியை அளிக்கவில்லை.

விவாதம் கொஞ்சநேரம் நடந்துகொண்டு இருந்தது.  பாபா தேங்காயை உடைக்கும்படி மீண்டும் மீண்டும் ஆணையிட்டுக் கொண்டிருதார்.  ஷாமாவோ முழுத் தேங்காயையும் அப்பெண்மணிக்கே அளிக்கும்படி விவாதித்துக்கொண்டிருந்தார்.  முடிவாக பாபா சம்மதித்தார். 

பாபா: அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்

ஷாமா:  எப்போது?

பாபா:  12 மாதங்களில்

இதன்பேரில் தேங்காய் இரண்டாக உடைக்கப்பட்டு ஒரு பகுதியை இருவரும்உண்டனர்.  மறுபகுதி அவளிடம் அளிக்கப்பட்டது. 

பின்னர் ஷாமா அப்பெண்மணியின் பக்கம் திரும்பி 'தாயே ! நீ எனது மொழிகளுக்கு ஒரு சாட்சி.  பாபாவின் கருணையால் பன்னிரண்டு மாதங்களுக்குள் உனக்குக் குழந்தை நிச்சயம் பிறக்கும். நான் கூறுவதை நீ விரைவில் உணர்வாய்' என்று கூறினார்.

பாபாவின் வாக்கு பொய்யாகவில்லை. அவள் ஓராண்டுக்குள் ஒரு புதல்வனைப் பெற்றெடுத்தாள்.  புதல்வனது ஐந்தாவது மாதத்தில் அவனை மசூதிக்கு எடுத்துவந்தாள்.  கணவன், மனைவி இருவரும் பாபாவின் முன்னால் வீழ்ந்து வணங்கினார்கள். பாபாவுக்கு தங்களது  நன்றியை தெரிவிக்க ,அத்தகப்பனார் ரூ.500ஐ அன்பளிப்பாகச் சமர்ப்பித்தார்.  ஷ்யாம் கர்ணா என்ற பாபாவின் குதிரைக்கு ஒரு கொட்டகை கட்டுவதற்காக அத்தொகை செலவிடப்பட்டது.

சீரடி சாய் பாதம் பணிவோம் .........

சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் ......

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡