Monday, 15 April 2019

அலை பாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா ?

வாழ்க்கையில்  இன்ப துன்பங்களை சரிசமமாக பாவிக்க  வேண்டும் என்ப தைத்தான் புராணக்கதைகளும், இதிகாசங்களும், வேதங்களும், முனிவர் களும், ரிஷிகளும் ஏன்  இறைவனும்  கூட வலியுறுத்துவது இதுதான்..  அலைபாயும் மனத்தை மனிதர்களால் அடக்க முடியுமா என்ன? இதைப்பற்றி  விளக்கும் கதை ஒன்றை பார்க்கலாம்... 

முனிவர் ஒருவர் குருகுல கல்வியை நடத்தி வந்தார்.  புகழ்பெற்ற இக்குரு குலத்தில்  கற்க உலகம் முழுக்க இருந்து மாணாக்கர்கள் படையெடுத்து வந்தார் கள். குருகுலத்தில் எல்லோரும் சமமே.. இங்கு ஏழை எளியவர்கள் என்ற பேத மெல்லாம் கிடையாது. குருகுலத்தோடு பொருந்திகொள்வதில் சில இளவரசர்கள் தடுமாறினார்கள். 

மதனபுரி நாட்டைச் சேர்ந்த வித்யாதரன் என்னும் பெயருடைய இளவரசன் பொறுமைசாலி... அன்பானவன்.. அமைதியானவன்.. குருவின் கண் அசைவில் அவருடைய எண்ணத்தை நிறைவேற்றும் அளவு சிந்திக்க தெரிந்தவனாகவும் இருந்தான்...
ஒருமுறை குரு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்..   மனிதப்பிறவி என்பது மகத்தான பிறவி.. இப்பிறவியில் எந்த நேரமும் இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும் என்றார்... ”வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து வரும்.. ஆனால் மனதை  அலைபாய விடாமல் எப்போதும் நிதானமாக இருக்க வேண்டும்” என்றார்...   போரிடும் போது  நாட்டை இழக்க நேர்ந்தாலும்... ஏன்  எதுவுமே இல்லாத நிராயுத பாணியாக இருந்தாலும்.. உலகின் செல்வம் அனைத்தையும் பெற்றிருந்தாலும் எப்போதும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.. எப்படி முடியும் குருவே? இது மகான்களுக்கே சாத்தியம் என்றார்கள் மாணாக் கர்கள்.

”மனம்  உங்கள் வசம் இருந்தால் எல்லாம் சாத்தியமே” என்றார் குரு.. குருகுல கல்வி முடிந்து எல்லோரும் அவர்கள் நாட்டுக்குத் திரும்பினார்கள்.. இளவரசன் வித்யாதரன் செல்லும்போது  மதனபுரி நாடு சிதைந்திருந்தது..  எதிரி நாட்டு அரசனின் வேலை என்ற மக்கள்  செல்வம் முழுவதையு ம் அவன் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதால்  நாடு வளமிழந்துவிட்டதாக தெரிவித்தார் கள். ”ஓ.. அப்படியா” என்று சென்று விட்டான். 
தந்தையின் கட்டளைப்படி எதிரி நாட்டின் மீது பரிவாரங்கள் சூழ  படையெடுத்துச்சென்றான்.  வளம் இழந்ததால் கோபத்தில் இருந்த மக்கள் அடித்து துவம்சம் செய்துவிட்டார்கள். பெரும் வெற்றி பெற்று  இழந்த செல் வத்தை மீட்டு நாடு திரும்பினான். அரண்மனைக்குத் திரும்பிய வித்யாதரனை எதிர்கொண்ட அரசர் ”என்ன மகனே உன் முகம் எவ்வித சந்தோஷத்தையும், துக்கத்தையும் காண்பிக்கவில்லையே” என்றார்... 

”குருவின் அறிவுரையில் இதுவும் ஒன்று.. இவையெல்லாம் நிரந்தரமில்லை.. வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை  அமைதியான முறையில் எதிர்கொள்ள வேண் டும்” என்று அவர் கூறியதைக் கடைப்பிடித்தேன் அவ்வளவுதான் என்று சென்று விட்டான்.. 
மகானிடம்  கல்வி பயிலும் குழந்தைகளும் மிகச்சிறந்த உதாரணபுருஷர்களாய் மாறிய  மனிதப்பிறவிகளும் உண்டு. வாழ்வில் துன்பத்தைக் கண்டு மலைக் காதீர்கள். அமைதியாக கடந்து செல்ல பழகிக்கொள்ளுங்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தமிழ்ப் புத்தாண்டில் விஷுக் கனி.!!

ஸ்வஸ்தி ஸ்ரீ விகாரி  வருடம்  சித்திரை மாதம் முதல் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை)  சுக்லபக்ஷ நவமியும், ஆயிலய நட்சத்திரமும் சித்த யோகம் கூடிய  சுபயோக சுபதினத்தில்  பகல் 1 மணி  15 நிமிடத்துக்கு கடக இலக்னத்தில்  பிறக்கவிருக்கிறது.

கேரள மக்கள் விஷுக் கனி காணுதல் என்னும் கொண்டாட்டத்தை இந்தப் புத்தாண்டு தினத்தில் கொண்டாடிமகிழ்வார்கள். வளமாக வாழும் நம்பிக்கை யைக் கொடுக்கும் புத்தாண்டு தொடக்கத்தில் விஷுக்கனி பார்த்தால்  வருடம் முழுவதும் நன்மையே நடக்கும் என்பது ஐதிகம்.. கேரளாவை ஒட்டியுள்ள மாநிலங்களில் கொண்டாடப்பட்ட இம்முறை தற்போது தமிழகத்திலும் பரவ லாகியுள்ளது. விஷு கனி வழிபாடு  வாழ்வில் மேலும் வளம் தரும் என்கிறார்கள் பலன்பெற்ற மக்கள்.. 

வருடப்பிறப்புக்கு முந்தைய நாள் வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்து மாவிலை தோரணங்களை வாயிலில் கட்ட வேண்டும்.  இரண்டு முனையிலும் ஒரு கொத்து வேப்பிலையைச் செருக வேண்டும். பூஜையறையில் ஒரு பெரிய தாம்பாளத்தட்டில்   விதவிதமான பழங்களை நிரப்பி வைக்க வேண் டும். வெற்றிலைப்பாக்கு, புனிதமான  புத்தகம்,  வெண்கல அல்லது ஐம்பொன் கலந்த சிறிய பாத்திரம் வழிய அரிசி, தங்கம் அல்லது வெள்ளிக்காசுகள்  நகைகள், சில்லறைகள், நோட்டுகள் போன்றவற்றை நிரப்பி வழிய வைத்து அருகில் முகம் தெரியும்  பெரிய கண்ணாடி  ஒன்றை வைத்துவிடுவார்கள். 
மறுநாள் புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்து கண்களைத் திறவாமல் குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்கள்  மெதுவாக பூஜையறை வந்து  நிரம்பிய தாம்பாளத்தட்டைப் பார்த்து கண்ணாடியில் முகம் கண்டு  வணங்குவார்கள். வருட துவக்கத்தில் மகிழ்ச்சித்தரக்கூடிய இப்பொருள்கள்  வருடம் முழுக்க வீட்டிற்குள் தங்கும் என்பதே இந்த விஷுக்கனி வழிபாடு.. பிறகு வீட்டில் இருக்கும் அனைவரையும் எழுப்பி கண்களைத் திறவாமல் கைப்பிடித்து அழைத்து வந்து விஷுக்கனி காண வைப்பார்கள். கேரளாவில் மிக முக்கியமாக சம்பிரதாயத் தோடு இதைக் கடைப்பிடிப்பார்கள்.
குளித்து முடித்து புத்தாடை உடுத்தி வீட்டிலிருக்கும் பெரியவர்களிடம் ஆசிர் வாதம் பெற்று. பூஜையறையில் வைத்திருக்கும் பணத்தை  பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி கொடுக்கும் பணம்  வருடம் முழுவதும் வளரும் என்பது ஐதிகம்.  வீட்டில் பூஜை செய்த பிறகு  அருகிலுள்ள கோயிலுக்கு சென்று  தலை வாழை விருந்தோடு  உணவு உண்டு பலகாரங்களை பரிமாறிக்கொள்வார்கள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நவக்கிரக  வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே.!!

உங்கள் ஜாதகத்தில் சனி திசை நடக்கிறது. சனி பகவான் உங்களுக்கு இன்னல்களைத் தராமல் போக மாட்டார்.”   ”ஜாதகத்தில் கேது திசை நடப்பதால்  வீட்டில் கெட்ட காரியம் நடந்தே தீரும்..” ”சுக்கிரதிசை நடக்கிறது. ஆனால் இடை யில் ராகு குறுக்கிடுவதால் நல்லது நடக்க வாய்ப்புகள் குறைவுதான்” இப்படி ஜாதகங்களை அலசி  பலனை சொல்பவர்கள்  பரிகாரத்தையும் சொல்ல தவறு வதில்லை. 

உங்கள்  ஜாதகத்தில் இந்த திசை நடப்பதால் இத்தத்திருத்தலத்திற்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உங்களுக்குரிய பகாவனை வழிபட்டு அபிஷேகம் செய்யுங்கள்... குறைகள் நிவர்த்தியாகும். இப்படித்தான் 100 க்கு 90 பேர் கிரகங்கள் சரியில்லை என்று நவக்கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளு நாளுவை போயறுங் குற்றமில்லார்களே-
                      என்று திருஞான  சம்பந்தர் கூறியிருக்கிறார்.  
உலகில் உள்ள   ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் பொறுப்பைக் கொண்ட சர்வேஸ்வரனையே நாம் வணங்கும் கோள்கள் வணங்கி பெருமை அடைந் திருக்கின்றன. அப்படியிருக்கும் போது நாம்  முக்காலமும் அறிந்த சர்வேஸ் வரனை விடுத்து நவக்கிரகங்களை மட்டுமே காப்பாற்றும் அபயமாக சுற்றலாமா என்கிறார். ஏனெனில் சிவப்பெருமானின் கட்டளை ஏற்று  தான் நவக்கிரகங்கள் செயல்படுகிறது...

சூரியன், செவ்வாய், சந்திரன், புதன், குரு, சுக்ரன்,  சனி, இராகு, கேது  என ஒன்பது நவக்கிரகங்களும் சிவபெருமானை வழிபட்ட தலம் பற்றிய விளக்கங் களை புராண நூல்களில் காணலாம்.
பிறப்பு இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாத ஒருவர் அகிலத்தை ஆளும் நாயகன் மட்டுமே. அதனால் தான் அவர்  முழு முதற் பரம் பொருள் என்று அழைக்கப்படுகிறார். அபயம் என்று  சரணடையும் பக்தர்களைக் காக்கும் கடவுளாய்  இவர் இருக்கும்போது நவக்கிரகங்களிடம் தீங்கு செய்ய வேண்டாம் என்று அபயம்  வேண்டலாமா  என்பதே இவரது கருத்து..

நாள் என் செய்யும் கோள்  என் செய்யும் நமசிவாயத்தை நம்பியோருக்கு என்று சொல்லியிருக்கிறார்கள்.  நமசிவாயத்தைப் பற்றி கொள்ளுங்கள்.. நவக்கிரகங் கள் நன்மையையே அளிக்கும்....  நவக்கிரக  வழிபாட்டில்   நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

அஷ்டமி திதியில் பைரவர் விரத வழிபாடு.!!

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருந்து பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.

காலபைரவர் அல்லது மார்த்தாண்ட பைரவரை, தேய்பிறை அஷ்டமியில் வழிபடுவது உகந்தது. தொடர்ந்து எட்டு அஷ்டமியில் இந்த பைரவரை விரதம் இருந்து வழிபட்டு வந்தால் இழந்த பொருட்களை மீண்டும் பெறலாம். அடகுவைத்த நகைகளை திருப்பும் வாய்ப்பும் கிட்டும். 

தேனும், பாலும் கலந்து பைரவருக்கு அபிஷேகம் செய்தால் எதிர்ப்புகள் அகலும். பொதுவாக அஷ்டமி திதியில் பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். செவ்வாய்க் கிழமை தீபமேற்றி வழிபட்டால் வராத கடன்கள் கூட வசூலாகும். வாழ்க்கை வளமாகும்.

இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.

தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.!!

மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.

ஆன்மிக அதிர்வலைகள் நிரம்பிய நாடு தமிழ்நாடு. கண்ணுக்கு தெரியாத ஏராளமான அற்புதங்களும், அதிசயங்களும் இன்னும் மண்ணுக்குள் புதையுண்டு கிடக்கின்றன. கலியுகத்தில் இடர்களால் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்கவே பல ஆலயங்கள் வழிபாட்டில் உள்ளன. அந்த வகையில் மிகவும் புகழ்வாய்ந்த ஆலயம் தான், கடலூர் அருகே ஆலப்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் புனிதவல்லி சமேத புஜண்டேஸ்வர சுவாமி கோவில்.

நந்திகேஸ்வரர் தமது சீடர்களாகிய புஜண்ட மகிரிஷிக்கும், மார்க்கண்டேயருக்கும், சிவபெருமானின் பெருமையை இந்த இடத்தில்தான் உபதேசித்து அருளினார். அதன் பின்னர் தான் சித்தர் காகபுஜண்டர் இங்கு சிவலிங்கம் நிறுவி வழிபட்டார் என்பது தல வரலாறு. மூலஸ்தானத்தில் உள்ள புஜண்டேஸ்வர சுவாமியாக அருள்பாலிக்கும் சிவலிங்கமும், புனிதவல்லி அம்பாளும், நந்தி பெருமான் சிலையும் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையானதாகும். கோவிலின் தல விருட்சமாக நாகலிங்க மரம் விளங்குகிறது.

சித்தர் காகபுஜண்டரால் சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதற்கு சான்றாக கோவிலின் தென்புறத்தில் வடக்கு திசை பார்த்தவாறு காகபுஜண்டர், தனது மனைவி பகுளாதேவியுடன் அருள்பாலிக் கிறார். காகபுஜண்டர் பல இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபாடுகள் செய்திருந்தாலும், தமிழகத்திலேயே காகபுஜண்டர் பெயரில் உள்ள சிவலிங்கம் இது மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்.

காகபுஜண்டர் ஜோதிடத்தில் மிகவும் வல்லவர். இவரை வழிபடுவதன் மூலம், நமக்கு நவக்கிரக தோஷங்கள் இருந்தால் விலகி விடும். இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசையன்று காகபுஜண்டருக்கும், பகுளா தேவிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. புஜண்டேஸ்வரர் முன்பு 21 நெய் விளக்குகள் ஏற்றி சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு, சித்தரையும் வழிபாடு செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

கோவிலை வலம் வரும்போது விநாயகர், வள்ளி -தெய்வானையுடன் முருகன், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கடலூர் - சிதம்பரம் சாலையில் கடலூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆலப்பாக்கம் கிராமம். இங்குதான் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

காரிய தடை நீக்கும் ஸ்ரீமஹா கணேச த்யானம்.!!

எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

விநாயகரைப் பணிந்து வணங்கினால் நன்மை பல பெற்று வாழலாம். எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம். எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்.

பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீனா முபம ச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆன : ச்ருண்வன்னூதிபி : ஸீத ஸாதனம்
சுக்லாம்பர தரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேச்வர பாத பங்கஜம்
அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிசம்
அனேகதம் தம் பக்தானாம் ஏக தந்தம் உபாஸ்மஹே
வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா
மூக்ஷ?க வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே
களத் தாள கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்
சலத் சாரு கண்டம் ஜகத்ராண சௌண்டம்
லஸத் தான கண்டம் விபத்பங்க சண்டம்
சிவ ப்ரேம பிண்டம் பஜே வக்ர துண்டம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Sunday, 14 April 2019

மயில் ஏறும் மயில்வாகனன்.!!

முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது பழமொழி. ஆரோக்கியத்தைச் சீராக்குவது சுக்கு. அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பது சுப்ரமணியர் வழிபாடு. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு எண்ணற்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவரது ஒவ்வொரு பெயருக்குமே அதற்கான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

சுவாமிநாதன் - தந்தைக்கு உபதேசம் செய்தவன்

கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன்

சேவற்கொடியோன் - சேவலைக் கொடியாகக் கொண்டவன்

சரவணபவன் - சரவணப் பொய்கையில் தோன்றியவன்

காங்கேயன் - கங்கையில் வளர்ந்தவன்

மயில்வாகனன் - மயிலை வாகனமாகக் கொண்டவன்

சுப்ரமணியன் - பிரம்மத்தில் உயர்ந்தவன்

சண்முகன் - ஆறுமுகம் கொண்டவன்

வேலவன் - வேலைக் கையில் கொண்டவன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டிய வழிபாடு.!!

உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு.

உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு. பல சிறப்புகள் நிறைந்த சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்தால் நமக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்று பார்ப்போம் வாருங்கள். 

சித்திரை முதல் நாளில் நாம் குளித்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்துகொண்டு வீடு வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும். அந்த அரிசி மானிவை சிறு எறும்புகள் உண்பது நமக்கு நன்மையை தரும். அதன் பிறகு வீட்டு வாசல்படியில் மஞ்சள் குங்குமம் இடவேண்டும். மஞ்சள் குங்குமமானது கிருமி நாசினியாக மட்டும் இல்லாமல் நமது வீட்டினுள் துர் சக்திகளை நுழைய விடாமல் தடுக்கிறது. 

அதன் பிறகு வீட்டில் விளக்கேற்றி தமிழ் கடவுள் முருகனை போற்றி பூஜை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை படிக்கலாம். இந்த ஆண்டு முழுக்க எல்லா விதமான நற்பலன்களையும் தந்தருள முருகப்பெருமானிடம் மனமுருகி வேண்டலாம். முடிந்தால் முருகன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்யலாம். 

செய்ய வேண்டிய பரிகாரம்: சித்திரம் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே ஆகையால் விசிறி, மோர், கூழ் போன்றவற்றை ஏழை எளியோருக்கு இன்று தானம் செய்வது நமக்கு நல்ல பலன்களை தரும். வெய்யிலின் தாக்கத்தில் இருக்கும் ஏழைகளுக்கு எப்படி நாம் கொடும்கோடும் பொருளும் உணவும் குளிர்ச்சியை தருகிறதோ அது போல நமது வாழ்வும் ஆண்டு முழுவதும் எந்த வித சங்கடங்களும் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡