Thursday, 1 November 2018

சிருங்கேரி சாரதா பற்றிய ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம்.!!

சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.

(ஸ்ரீவித்யாரண்யர் அருளியது)

சிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது. இதைப்படித்தால் சகல வித்தைகளும் வரும். மங்களங்களும் உண்டாகும். அந்த அஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-

ஸ்ரீசிருங்கேரியில் வசிப்பவளே! சுகர் முதலிய மகரிஷிகளால் சேவிக்கப்படுகிற பாத கமலங்களை உடையவளே! தனது அங்கங்களின் காந்தியால் திரஸ்கரிக்கப்பட்ட சந்திரனையும் இந்திரவாகனமான ஐராவதத்தை யும் உடையவளே, வாக்கு சக்தியை அளிப்பவளே, ஸ்ரீபரமசிவன், ஸ்ரீலட்சுமீபதி முதலிய சிறந்த தேவர்களின் சமூகங்களால் சந்தோஷமாய் பூஜிக்கப்படுகிற பிரம்ம தேவனின் மனைவியான சாரதே, வித்தையையும், சுத்தமான புத்தியையும் எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.
கலியுகத்தின் ஆரம்பத்தில் சிறந்த தேவகணங்களால் பிரார்த்திக்கப்பட்டவரான ஸ்ரீபரமசிவன் வேதத்தில் கூறிய பாகங்களை உலகில் நன்கு நடைபெறச் செய்வதற்காக சன்னியாசி ரூபியான ஆதி சங்கரராக சிருங்கேரியில் வந்து உங்களை பிரதிஷ்டை செய்து பலவித ஸ்தோத்திரங்களால் துதித்து நமஸ்கரித்து சாரதாதேவியே! வித்தையையும் சுத்தமான முக்தியையும் எனக்கு சீக்கிரம் கொடுக்க வேண்டும்.

பல ஜென்மங்களில் செய்த பாபக் கூட்டங்களை நாசம் செய்து, மேலும் சீக்கிரமாய் புண்ணியங்களின் குவியலைச் சேர்த்து வைத்து, வேதம் குரு இவர்களின் சொற்களில் ஆதரவையும் ஆஸ்தீக புத்தியையும், தேவதைகள், ஆசாரியன், வேதம் கற்ற பெரியோர்கள் இவர்களிடத்திலும், தங்களுடையதான மந்திரங்களின் சமூகத்திலும் நிரம்ப ஸ்திரமான பக்தியையும், வித்தையையும், சுத்தமான புத்தியையும், பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

வித்யா முத்திரை (ஞான முத்திரை), ஜெபமாலை, அமிர்தம் நிரம்பிய குடம் இவைகளால் விளங்குகின்ற ஹஸ்த பத்மங்களின் கூட்டத்தை உடையவளே! பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே! என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

தங்கள் வர்ணாச்சரம் தர்மத்திற்கு உரிய கர் மானுஷ்டானத்தில் நிலைத்த மனதையும், அந்த அனுஷ்டானங்களை செய்வதற்கு தேகத்தில் நல்ல வலுவையும், நீண்ட ஆயுளையும், மூன்று உலகங்களாலும் அறியக்கூடிய புகழையும் பாபச் செயலிலிருந்து திரும்புதலையும், சாதுக்களின் சங்கத்தையும், நல்ல கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் எனக்கு கொடுப்பதோடு கருணைக் கடலான பிரம்மதேவனின் மனைவியான சாரதே! எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.

தாயே! தங்களுடைய பாத கமலத்தை முறைப்படி புஷ்பங்களால் பக்தியுடன் ஒரு சமயமும் பூஜிக்கவில்லை. மந்த புத்தி யுள்ளவனும், சுறுசுறுப் பற்றவனுமான நான் உங்களது குணங்களை சிறந்த சுலோகங்களால் பாடுவதற்கு சக்தியற்றவன். தங்களை சேவிக் காதவனான என்னிடத்தில் ஊமைக் குழந்தையினிடத்தில் தாய்போல் அளவற்ற கருணையைச் செய்து, பிரம்ம தேவனின் மனைவியான சாரதே! வித்தையையும் சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் எனக்கு கொடுக்க வேண்டும்.

சாந்தி முதலிய மங்களத்தைச் செய்யும் சம்பதுக்களை எனக்கு அளிக்க வேண்டும். நித்திய, அநித்ய வஸ்து விவேகத்தையும், வைராக்கியத்தையும் (விஷயங்களில் ஆசையின்மையும்) மோட்சத்தில் ஆசையையும், லட்சுமியாலும், பார்வதியாலும் சேவிக்கத்தகுந்த நீ பிரயாசையின்றி கொடுக்க வேண்டும். வித்யாரண்யர் முதலிய சிறந்த யோகிகளின் கரகமலங்களால் பூஜிக்கப்பட்ட சரண கமலங்களை உடைய பிரம்ம பத்தினியான சாரதே! வித்தையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.

சத் சித் என்ற சொரூபமாக இருக்கும் எனக்கு வேதார்த்தத்தை மனனம் செய்து நிதித்யாசனம் செய்வது (அதாவது அந்தப் பொருளை மனதில் நிறுத்திப் பார்ப்பது) இவைகளையெல்லாம் சீக்கிரம் சம்பாதித்து கொடுத்து அதனால் இந்த மனதை நிர்விகல்ப சமாதியில் எப்பொழுதும் ருசியுள்ளதாகவும் செய்து, துங்கா நதிக்கரையின் சமீபத்தில் விளங்குகின்ற சிறந்த கோவிலில் ஸ்ரீசக்கரத்தின் நடுவில் விளங்குகின்ற பிரம்ம தேவனின் பத்தினியான சாரதா தேவியே, வித்யையும் சுத்தமான புத்தியை சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டகம்.!!

சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.

ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ சாரதா புஜங்கப்ரயாதாஷ்டக ஸ்தோத்திரமும் அதற்கு சிறந்தததான தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. சரஸ்வதி தேவியின் அபார கருணா கடாட்சம் பெற இந்த ஸ்தோத்திரம் மிகவும் உதவும்.

1. அமுதம் நிறைக் கலசங்கள்
கரங்களில் உடையவளாம்;
குடமெனக் குவிந்தபடி
அருள் பொழியும் நெஞ்சினளாம்;
பாலனம் புரிந்து நமைக்
காத்திடும் அம்பிகையாம்;
புனிதர்க்கெல்லாம்
பொற்பாதம் தருபவளாம்;
திங்கள் முகப்பொலிவு
எழிலார்ந்த இதழ்க்கனிவு,
பீடுடைய வடிவினளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.

2. விழிக் கடையில் அளப்பரிய
கருணை மிகுந்து பொங்கும்
நோக்குடையவளாம்;
பொற்கரந்தனில் ஞான
முத்திரை உடையவளாம்;
கலைகளின் நித்ய வாசினியாம்;
புனிதம் நிறையப் பொன் அணி
மங்கலம் உடையவளாம்;
தெய்வமாய் என்றென்றும்
விழியாலே அருள்தருபவளாம்;
துங்காநதி வாழ்த் தூயவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழிமெய் சேர
துதிக்கின்றேன்.

3. பிறை நுதலில் வகிடென
பொன்நகை தரித்தவளாம்;
இன்னிசைப் பண்ணின்
உன்னதம் நயப்பவளாம்;
தொழுதவரைக் காத்தருளும்
தனிப்பெரும் தேவியாய்த்
திகழ்ந்து ஒளிர்பவளாம்:
கீர்த்தி இசைத்திடு கன்னங்கள்
திருக்கரத்தில் மணிமாலை உடையவளாம்;
கண்கவரும் தொல் அணிமணியில்
அகலாத விருப்பு உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.

4. முடிவகிர்ந்து பின்னலிட்டுக்
குஞ்சலங்கள் கொண்டவளாம்;
மான்விழிப் பார்வையினும்
வென்றிடும் திருப்பார்வை உடையவளாம்;
கிள்ளையோடிருக்கும் வாணியாம்;
வானவன் இந்திர தேவன்
வணங்கிடும் தேவதேவியாம்;
அமுதபானம் விளைத்திடும்
மந்தஹாச வதனமுடையவளாம்;
கருங்கூந்தல் கவினழகொடு
நெஞ்சத்தை ஈர்ப்பவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.
5. சாந்த சொரூபி, எழிற் திருமேனி;
சுந்தரத் திரு வடிவினளாம்;
விழியோவோடிப் பரந்தடர்ந்த
கருங்கேசம் உடையவளாம்;
ஒளிவிடும் கொடிபோலும்
மென் உடம்பினளாம்:
என்றுமுள நித்ய நாயகியாம்;
உள்ளத்து எழும் எண்ணங்கடந்து
நின்று நிலைத்திருப்பவளாம்;
தவமுனிவர் தொழுதேற்றும்
உலகுக்கு முன்னம் உயிர்த்தவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.

6. மான்மீதும், மடஅன்னத்திலும்
மாட்சியுற சிம்ம மதன் மீதும்
கரி, பரி, இரண்டின் மீதும்
ஆரோகணித்து இருப்பவளாம்;
கழுகின் மீதும் காளையின் மீதும்
வீற்றிருப்பவளாம்;
நவராத்திரி நற்பொழுதில்
நல்வாகனங்களாகிவிடும்
இவைமீது அமர்ந்திருப்பவளாம்;
இனிமையின் தனி உருவாகி
என்றும் காட்சி தருபவளாம்.
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.

7. கனல் போலும் செம்பிழம்பாகி
ஒளிவீசும் செல்வழகுச்
செந்திருவென ஜொலிப்பவளாம்;
சகல சிருஷ்டிகளின் காந்தமிகு
உருக்கொண்டவளாம்;
பணிகின்ற நல்லடியாரின்
நெஞ்சக் கமலந்தன்னில்
தேனீயென ரீங்கரிப்பவளாம்;
நாதத்தின், நர்த்தனத்தின்.
உள்ளளி நிகர்த்த மேனியளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்.

8. படைக்கின்ற நான்முகனும்
பள்ளி கொண்ட மாலவனும்
மலை வாழும் மகேஸ்வரனும்
பூசனை புரிந்து துதிக்கின்ற
பெரும்சீர் படைத்தவளாம்
தேசுமிகு புன்னகையின்
திருவதனம் உடையவளாம்;
காதணிக் குண்டலங்கள்
ஊஞ்சலென அசைந்தாடி
அழகுக்குத் தனியழகூட்டும்
திருச்செவிகள் உடையவளாம்;
என் தாயாகும் சாரதாம்பாளை
சந்ததமும், மனம் மொழி மெய் சேர
துதிக்கின்றேன்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

தோஷங்களை போக்கும் பெரும்பாக்கம் லட்சுமி நரசிம்மர்.!!

பெரும்பாக்கம் ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்மருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும்.

விழுப்புரத்தில் இருந்து மாம்பழப்பட்டு வழியாக திருக்கோவிலூர் செல்லும் சாலையில் 7 கிலோ மீட்டர் தூரத்தில் பெரும்பாக்கம் என்ற பகுதி உள்ளது. இங்கு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவெங்கடவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது பல்லவர் காலத்திற்குட்பட்ட பழமையான கோவில் ஆகும்.

திருக்கோவிலூர் தேகளீச பெருமாளுக்கு அபிமான தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஸ்ரீவேங்கட வரதராஜ பெருமாள் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி பக்தர்களின் குறைகளை நிவர்த்தி செய்து அருள்பாலித்து வருகிறார்.

மூலவரின் மார்பில் சிம்ம பதக்கம் காட்சி தருகிறது. இதனால் இந்த கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. பெரியபெருமாளின் வலது கை அபய ஹஸ்தமாகவும், இடது கை கடி ஹஸ்தமாகவும் இருப்பதால் இந்த பெருமாளை தரிசிப்பவர்கள் திருப்பதி, காஞ்சிபுரம், அஹோபிபலம் போன்ற இடங்களில் உள்ள பெருமாள்களை தரிசித்த பலன்களை அடையலாம் என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு லட்சுமியை மடியில் தாங்கி கிழக்கு நோக்கி லட்சுமி நரசிம்மர் காட்சி அளிக்கிறார். தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் மிகுந்த சிறப்பை அடையலாம். அவ்வாறு செய்தால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். தோஷங்கள் நீங்கும். மேலும் சுவாதி நட்சத்திரத்தன்று இவரை வழிபாடு செய்வது உகந்தது.

இந்த கோவிலில் கல்யாண ஆஞ்சநேயருக்கும் தனி சன்னதி உள்ளது. அவர் மேற்கு முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவருக்கு மட்டை தேங்காய் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பகை நீங்கி, புகழ் சேர்க்கும் நரசிம்மர் விரதம்.!!

சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார்.

நரசிம்ம மூர்த்தியைத் தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்டத் திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதால் கொடிய நீண்ட காலத்துன்பம் நீங்கும். 

மனோ வியாதி, கடுமையான பாவங்களினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். பசி, பிணி, மூப்பு, பொறாமை, பில்லி, சூனியம், ஏவல் உள்பட சகல தோஷங்களும், துரோகங்களும் இன்னல்களும் மறையும். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். 

பால், இளநீர் அபிஷேகமும் பானகமும் நரசிம்மருக்கு மிகவும் விருப்பமானவை. விரதம் இருந்து நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சணமாக நரசிம்மரை வலம் வந்து மிகுந்த பக்தியுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் வழிபடுபவர்களின் பிரார்த்தனைகள் வெகுவிரைவில் நிறைவேறுகிறது. 

சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார். தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும். 

வியாபாரம் அபிவிருத்தியாகும்.மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பூவசரங்குப்பம் என்று பெயர் வரக்காரணம்.!!

பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பூவசரங்குப்பம் என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

பூவசரங்குப்பம் திருத்தலம் விழுப்புரத்திலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், பாண்டிச்சேரியிலிருந்து 32 கி.மீ. தூரத்திலும், கடலூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. மூலமூர்த்தி ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அவருடைய தேவி அமிர்தவல்லி தாயார் இவர்கள் இக்கோவில் உள்ள பிரதான மூர்த்திகளாவார்கள். 

தலபுராணத்தின்படி வடக்கு கடற்கரையிலுள்ள தென்பெண்ணை ஆற்றில் வசித்து வந்த சப்தரிஷிகள் எம்பெருமானை நோக்கி அவருடைய தரிசனத்திற்காக தவம் செய்தனர். அவர்களால் பகவானுடைய கடும் கோபத்தீயை தாங்க முடியாமல் போகவே அவரை சாந்த மூர்த்தியாக தரிசிக்க விரும்பினர். அதனால்இங்கு அமிர்தவல்லி தாயார் அவர்களுக்கு காட்சியளிப்பதற்காக பகவானுடைய மடியில் தாம் வீற்றிருந்து ஒரக்கண்ணால் பகவானையும், மற்ற கண்ணால் முனிவர்களையும் அருள்பாலித்தார். 

பகவானுடைய கோபத் தீயைத் தணிப்பதற்காக தாயார் அவரைக் கனிவுடன் நோக்கி அவரது இடது பக்கத்து மடியில் வீற்றிருந்து காட்சியளிக்கிறார். தாயார் லட்சுமியின் கருணைகடாட்சத்தால் ஸ்ரீநரசிம்மர் அமைதி தவழ்ந்த முகப்பொலிவுடன் காட்சி அளிக்கிறார்.

பூவசரங்குப்பம் என்று இதற்கு ஏன் பெயர் வந்தது தெரியுமா? 

பல்லவ அரசர்கள் ஜைன மதத்தை தழுவி விஷ்ணு கோவில்களையும் சிவன் கோவில்களையும் இடித்து தகர்த்து நாசமாக்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் திருக்கோவில்களை தகர்ப்பதை தடுத்து நிறுத்துவதற்காக அரும்பாடுபட்டனர். 

ஆனால் பல்லவ அரசன் தன்னை எதிர்த்தவர்களை சிறையில் அடைத்தான். நரஹரி என்ற முனிவர் இதைக் கண்டு பொங்கி எழுந்தார்.அவருடைய எதிர்ப்பைக் கண்ட அரசன் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்தான். முனிவர் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வருமாறு பகவானிடம் வேண்டினார். 

இத்தருணத்தில் அரசனுக்குப் பல தொல்லைகளும் துன்பங்களும் தோன்றின. முடிவில் அரசன் தன் தவறுக்காக மனம் வருந்தினான். இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும், முனிவருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காகவும் அரசன் நரஹரி முனிவரைத் தேடி அலைந்தான். கடைசியாக ஒரு பூவரச மரத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அரசனுடைய கனவில் தோன்றிய பெருமாள் “நீ உன்னுடைய சாபத்திலிருந்து விமோசனம் பெறுவாய் முனிவர் இங்கு வந்து உன்னை ஆசீர்வதிப்பார்” என்று கூறினார். 

அரசன் உறங்கி விழித்தவுடன் பெருமாளைக் காண முடியவில்லை. அப்போது அந்த பூவசர மரத்திலிருந்து ஒரு இலை அரசன் மேல் விழுந்தது. அந்த இலையில் லட்சுமி நரசிம்மருடைய உருவம் தெரிந்தது. 

அவனும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தபோது, நரஹரி முனிவரும் அங்கு வந்து அரசனை ஆசீர்வதித்தார் அரசனும் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றான்.
அந்த முனிவரின் விருப்பத்தின்படி அரசனும் பூவரசங்குப்பத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு ஒரு திருக்கோவில் எழுப்பினான். அந்த முனிவர் நரஹரியும் அங்கு பகவானின் ஒரு அம்சமாக உள்ளார்.

ஆணுக்கு பெண் சமம்

நரசிம்மர் தன் மடியில் அமிர்தவல்லி தாயாரை அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, வலது கரத்தால் அபயம் அளித்து, சிரித்த முகத்துடன், சீரிய சிங்கனாக, 12 திருக்கரங்களுடன் விளங்குகிறார். பொதுவாக நரசிம்மரின் உருவம் பெரிய அளவிலும், தாயாரின் உருவம் சிறிய அளவிலும் அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் ஆணுக்கு பெண் சரிசமம் என்பதற்கிணங்க பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல் தாயாரின் உருவம் அமைந்துள்ளது. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோயில்களில் தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்த நிலையில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் நரசிம்மர் லட்சுமியை ஆலிங்கனம் செய்த நிலையில் அருள்பாலிப்பது சிறப்பு...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Wednesday, 31 October 2018

எந்த ஒரு செயலை தொடங்குவதற்கு முன்பும் கணபதியை வேண்டி வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது வெற்றியை தரும்.!!

கணபதியின் அருளை பெறுவதற்காக விரதங்களை பார்க்கலாம்.


1. வைகாசி வளர்பிறை:
 
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
 
2. செவ்வாய் விரதம்:
 
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
 
3. சதுர்த்தி விரதம்:
 
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
 
4. குமாரசஷ்டி விரதம்:
 
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
 
5. தூர்வா கணபதி விரதம்:
 
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
 
6. சித்தி விநாயக விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
 
7. தூர்வாஷ்டமி விரதம்:
 
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
 
8. விநாயக நவராத்திரி:
 
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
 
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
 
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
 
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
 
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
 
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
 
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡