Saturday, 1 September 2018

கிருஷ்ணர் பிறந்தது எதற்காக!

அதர்மம் ’இப்படித்தான் வரும்’ என்று ஏதாவது வழி இருக்கிறதா? இல்லை என்றால், தர்மமும் இப்படித்தான் வரும் என்பதற்கும் வழி இல்லை. அதர்மம், இரண்யனாகவும், மகாபலியாகவும், ராவணனாகவும் வரும் போது, தர்மம் நரசிம்மனாகவும், வாமனனாகவும், ராமனாகவும் வரும். அதே அதர்மம் துரியோதனனாகவும், சகுனியாகவும் பிறந்து சூதாடி நாட்டை அபகரித்தால், திரவுபதியை துயில் உரித்தால் என்ன நடக்கும்? தர்மம் கிருஷ்ணராக பிறந்து குருஷேத்திர போரை நிகழ்த்தி அதர்மத்தை அழிக்கும். தர்மத்தின் வழியில் வாழ்ந்தால், தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற எண்ணத்தை உருவாக்குவதே கிருஷ்ணாவதாரத்தின் நோக்கம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.

1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

7. கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந் தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.


16. கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

17.கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.

20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.

26. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

27. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

28. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ் தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

29. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டி யுள்ளனர்.

30. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில் - கன்னியாகுமரி

தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது துவாரகை கிருஷ்ணன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் பழமையான தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில். கோவிலின் ஒருபுறம் பழையாறும், ஒருபுறம் வயல்வெளிகளும் என இயற்கை எழில் சூழ மன அமைதி தரும் விதத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. 

கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவில் முன்மண்டபம் ஓட்டுப்பணியால் ஆனது. சுற்றாலை மண்டபம் ஒரு பிரகாரம், நடுவில் ஸ்ரீகோயில், கருவறை, அர்த்தமண்டபம், சோபனப்படி, விமானம் என அமைந்துள்ளது.

கருவறை சிறியது. கல்மண்டபம், மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் காணப்படும் மூலவர் ஆழ்வார் எனப்படுகிறார். பரிவாரா தெய்வங்களாக விநாயகரும், சாஸ்தாவும் அமைந்துள்ளனர். இத்திருக்கேவிலில் 4 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழி இக்கோவிலின் பழமையானது தெரியவருகிறது. கோவிலின் சபை இக்கோவிலுக்கு நித்திய பூஜைக்கு கொடுத்த பொருட்கள் பற்றியும், விளக்கு நிபந்தத்தையும் கூறுகிறது. மேலும் இக்கோவிலுக்கு இரண்டு குளங்கள் சொந்தமாக இருந்ததாகவும், கோவில் 13ம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

கோயில் கருவறை அருகே உள்ள பாறையில் காணப்படும் 1239ம் ஆண்டு கல்வெட்டில், “இக்கோயிலில் வடதிருவிதாங்கூரை சேர்ந்த வேதவிற்பன்னரான ஸ்ரீகோவிந்த ப்ரஞ்படரார் ஸ்ரீகான ராமபகவான் என்ற ஞானி இருந்தார். இவரிடம் மாணவர்கள் வேதம் பயின்றனார் அவர்களும் இக்கோயில் அருகில் தங்கியிருந்தனர்.” என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், 13ம் நூற்றாண்டில் இது வேதபாடசாலையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது.  ஆனால், இக்காலத்தில் இது வழிபாட்டு கோயிலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பூஜைகள் :

காலை 6 மணி திருநடை திறப்பு, 6.30 மணி  பூஜை, அபிஷேகம், 10 மணி பூஜை. மாலை 5 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, 8 மணி பூஜை, திருநடை அடைப்பு. இக்கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக நடக்கிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை விஷேசமானது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிருஷ்ணர் லீலை: பழத்தால் கிடைத்த பரிசு

கிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது.

கிருஷ்ணர் சிறுவயதில் செய்த லீலைகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஒன்று ஏழை வியாபாரியான, ஒரு பழம் விற்கும் பெண்ணுக்கு அனுக்கிரகம் செய்தது. ஒரு முறை பழம் வியாபாரம் செய்யும் வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, நந்தகோபரின் இல்லத்திற்கு முன்பாக நின்று கொண்டு, ‘பழம் வேண்டுமா? பழம் வாங்குறீங்களா?’ என்று கூவிக்கொண்டிருந்தாள்.

அந்த சத்தத்தைக் கேட்ட கிருஷ்ணர், வீட்டில் இருந்து தன் சின்னஞ் சிறிய கைக்குள் அடங்கும் அளவிலான தானியத்தை எடுத்துக் கொண்டு பழக்காரியை நோக்கி தளிர் ஓட்டம் ஓடினார். தன் தாயார் யசோதா, தெருவுக்கு வியாபாரம் செய்ய வருபவர்களிடம் இதேபோல் தானியங்களை கொடுத்து விட்டு, தனக்கு தேவையான பொருட்களை வாங்குவதை பல முறை கிருஷ்ணர் பார்த்திருக்கிறார். அதனால் தான் தானும் கொஞ்சம் தானியத்தை எடுத்துக் கொண்டு அந்த பழக்காரியிடம் வந்தார்.

சிறிதளவான தானியத்தை மூதாட்டியிடம் கொடுத்தார். அப்போது அந்தச் சிறிய கையில் இருந்து தானியங்கள் பெருமளவு தரையில் கொட்டின. பழம் வியாபாரம் செய்யும் மூதாட்டி, கிருஷ்ணனின் அந்த கொள்ளை கொள்ளும் அழகில் மயங்கிப் போனாள். கண்ணன் கொடுத்த தானியத்திற்கு பழத்தை கொடுக்க முடியாது என்றாலும், கண்ணனின் கையால் எவ்வளவு பழங்களை பிடிக்க முடியுமோ, அவ்வளவு பழங்களை அந்த மூதாட்டிக் கொடுத்தாள். ஒன்றிரண்டு தரையில் உருண்டு ஓடினாலும், குழந்தைக்கே உரிய ஆசையைப் போல் அனைத்து பழங்களையும் வாங்க ஆவல் கொண்டார் கிருஷ்ண பரமாத்மா.

பழங்களை வாங்கிக்கொண்டு, இல்லத்திற்குள் ஓடி மறைந்தார் கிருஷ்ணர். மூதாட்டி மகிழ்ச்சியில் திளைத்தாள். பின்னர் புறப்படத் தயாரானவள், தன் பழக் கூடையை தூக்க முயன்றபோது, அதில் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், மாணிக்கங்களும் இருப்பதைக் கண்டு வியந்தாள்.

உண்மையான அன்பும், பாசமும் நிறைந்த உள்ளத்திற்கு, இறைவன் கொடுத்த விலை மதிப்பற்ற பரிசு அது என்பதை உணர்ந்துகொள்ள அந்த மூதாட்டிக்கு வெகுநேரம் ஆனது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கோரிக்கைகளை நிறைவேற்றும் நவ விரதங்கள்

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான விரதங்களும் பலன் தரக்கூடியவையே. விரதங்கள் இருப்பதால் மனமும், உடலும் சுத்தம் அடைகிறது. ஆனாலும் சில முக்கிய விரதங்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை நவராத்திரி விரதம், வரலட்சுமி விரதம், கேதாரகவுரி விரதம், பாவை நோன்பு, விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம், காரடையான் நோன்பு ஆகியன ஆகும்.

விரதங்கள் இருப்பதற்கு பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதம் இருக்கும் நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு உபவாசம் இருத்தல், நீர் ஆகாரம் மட்டும் குடித்து உபவாசம் இருத்தல் போன்ற அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடவுளிடம் வைக்கப்படும் நியாயமாக கோரிக்கைகளுக்காக இருக்கும் அனைத்து விதமான விரதங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு உகந்த வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

பூஜைக்குரியவை

பூஜைக்குரிய இலை : துளசி இலை
பூஜைக்குரிய மலர் :- மல்லிகை.
நிவேதனப் பொருட்கள் :--பால், வெண்ணை,
தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன.
படிக்க வேண்டிய நூல் :- பகவத்கீதை, கிருஷ்ண அஷ்டோத்ர
நாமாவளி, கிருஷ்ணாஷ்டக ஸ்தோத்திரம்,
ஆண்டாள் அருளிய அஷ்டோத்ர நாமாவளி,
ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதக் கதைகள்.

வழுக்குமரம் ஏறுதல்

கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில், கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணெயைத் தடவிவிடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருள்களாக பழங்கள், பணம் ஆகியவற்றைக் கட்டிவிடுவார்கள். 

வழுக்குமரத்தின் மீதேறி உச்சியில் இருக்கும் பரிசுப் பொருளை எடுக்க வேண்டும். இளைஞர்கள் வழுக்கு மரத்தில் ஏறி பரிசுப்பொருட்களைப் பிடிக்க முயலும்போது தண்ணீரை அவர்கள்மீது ஊற்றுவார்கள். 

எண்ணெய் பூசப்பட்ட மரம் வழுக்கும். தண்ணீரை ஊற்றும்போது மேலும் வழுக்கும். யாராவது ஒருவர் கஷ்டப்பட்டு வழுக்குமரத்தில் ஏறி பரிசுப்பொருளை அடைந்துவிடுவார்கள்.

உறியடி :

உறி ஒன்றில் சிறு மண் சட்டி ஒன்றைக் கட்டி வைத்து கயிற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். கம்பால், உறியில் உள்ள சட்டியைத் தட்டி உடைக்க வேண்டும். அவ்வாறு உடைக்க முயற்சி செய்யும்போது கயிறை மேலும் கீழும் ராட்டினம் போன்ற கருவி மூலம் இழுப்பார்கள். 

அப்போது பெண்கள், உறியை அடிக்க முயற்சி செய்யும் இளைஞர்களின் மீது தண்ணீரை ஊற்றித் தடை செய்ய முயற்சிப்பார்கள். சிரமப்பட்டு யாராவது ஒருவர், கம்பால் உறியிலுள்ள சட்டியை உடைத்துவிடுவார். அவருக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். விளையாட்டாகவும் பொழுது போக்காகவும் நடைபெறும். இது, கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் திருடிய நிகழ்ச்சியை நினைவு கூறவே நடத்தப்படுகிறது. 

சிறுவர்களுக்கு கிடைக்கும் நன்மை :

கிருஷ்ண ஜெயந்தி பூஜை மற்றும் வழிபாடுகளில் சிறுவர், சிறுமிகளை மறக்காமல் ஈடுபடுத்த வேண்டும். அவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவி களுக்கு பாடங்களை திட்டமிட்டு படிக்கும் புத்தசாலித்தனம் கூடும். அதோடு பாடங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

திருப்பாதத்தின் மகிமை :

கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. இப்படி பாதம் வரைவதில் சைவ- வைணவ ஒற்றுமை இருப்பதாக சொல்கிறார்கள்.

குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு (8) போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் ‘நமோ நாராயணா’ என்ற எட்டு எழுத்து மந்திரமும் ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது.

கிருஷ்ணர் வேஷம் :

சில ஊர்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று உற்சவர் புறப்பாட்டின்போது, முன்னால் ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடியபடி, கிருஷ்ண கானங்களை இசைத்தபடி செல்வர். கரகாட்டம், சிலம்பாட்டம், தீப்பந்த சாகசங்களும் நடைபெறும். ஊரைச் சுற்றிவந்து உற்சவரைத் திரும்பவும் ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வார்கள். 

பஜகோவிந்தம் :

கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

கிருஷ்ண ஜெயந்தி பூஜையை இல்லத்தில் கொண்டாடும் முறை

கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். நாளை கிருஷ்ண ஜெயந்தி பூஜையை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

கிருஷ்ணர் நடு இரவில் அவதரித்ததால், இவருக்கான பூஜையை நடு இரவில் செய்வது நல்லது. என்றாலும் காலம் மற்றும் நேரம் கருதி பலரும் இரவு வேளையிலேயே பூஜையை முடித்து விடுவதுண்டு. வீடு முழுக்கக் கழுவி சுத்தம் செய்து விட்டு, வாசல் படியில் இருந்து பூஜையறை வரை கிருஷ்ணரின் பிஞ்சு பாதங்களை மாக்கோலத்தால் வரைய வேண்டும்.

அதாவது, கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம். பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து பொட்டு இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குத் தேவையான மங்களப் பொருட்களான தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், பூ போன்ற வற்றையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

பூஜைப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை உளமாரச் சொல்லுங்கள். ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை, நேரம் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லி வழிபட்டாலும் சரிதான். பூஜை முடிந்த பின் தூபம், தீபம் காண்பிக்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணர் பலகாரப் பிரியர். எனவே பல ஆகாரங்களை அவருக்கு வைத்துப் படைத்து விட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு விநியோகிக்க வேண்டும்,. அதன் பிறகே நாமும் பிரசாதம் உட்கொள்ள வேண்டும். வெல்லச் சீடை, உப்பு சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

பழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவற்றை நிவேதிக்கலாம். வீடுகளில் பாகவதம், கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம். பூஜை முடிந்த பின் வீட்டில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம்.

இரவில் கண் விழித்து கிருஷ்ணரின் கதைகளைக் கேட்கலாம். இயன்ற அளவில் அன்னதானம் செய்யலாம். கிருஷ்ண பக்தி நமக்கு அளவற்ற ஆனந்தத்தை வாரி வழங்கும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், விவசாயம் போன்ற அனைத்துப் பிரார்த்தனைகளுக்கும் இந்த தினத்தில் விரதம் இருப்பது உரிய பலனைத் தரும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡