Thursday, 2 August 2018

ஆடிப்பெருக்கு அன்று என்ன செய்ய வேண்டும்?

காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்.

காவிரியை வழிபட்டு அனைத்து நலன் களையும் பெறுவதற்கு இந்த ஆடிப்பெருக்கு தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘கணவன் நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும்... தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும்’ என்று காவிரித் தாயை வணங்குவார்கள் மணமான பெண்கள்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு திருமண வரம் வேண்டி, காவிரியைப் பிரார்த்திப்பார்கள். புதுமணம் ஆன பெண்கள் தாலி பிரித்து, புதுத் தாலி முடிந்து கொள்வார்கள். வயது முதிர்ந்த சுமங்கலி, புதுத் தாலி எடுத்துத் தருவார். அதோடு, திருமணம் ஆன தினத்தன்று அணிந்து கொண்ட மலர் மாலைகளை வீட்டில் பத்திரமாக பாதுகாத்து வைத்து, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் விடுவர்.

ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண்கள் தலைமையில் இவை அனைத்தும் காவிரிக் கரையில் நடைபெறும். சிறுவர்கள் ‘சப்பரத் தட்டி’ எனப்படும் சிறு மரத் தேர்களை உருட்டிக் கொண்டு ஆற்றங்கரையில் விளையாடுவர்.

விவசாயத்தையும், தங்கள் குடும்பத்தையும் வாழ வைக்கிற காவிரிக்கு மங்களப் பொருட்களை அர்ப்பணித்து, பெண்கள் தங்கள் கழுத்திலும், உடன் வந்திருக்கிற ஆண்கள் தங்கள் கைகளிலும் மஞ்சள் கயிறுகளைக் கட்டிக் கொள்வார்கள்.

அன்றைய தினம் பெண்கள் நீராடி விட்டு, புத்தாடை அணிந்து கொள்வர். ஆற்றங்கரையில் ஓரிடத்தை சுத்தம் செய்து விட்டு தீபம் ஏற்றி வைப்பர். அங்கு வாழையிலைகளைப் பரத்துவார்கள். பசுஞ்சாணத்திலோ அல்லது மஞ்சளிலோ பிள்ளையார் பிடித்து வைத்து வாழையிலையில் மங்களப் பொருட்களை வைப்பார்கள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம், தாலிப்பொட்டு, தேங்காய், கண்ணாடி வளையல்கள், பனையோலையால் ஆன காதோலை, கருகமணி, அரிசி, வெல்லம், ரவிக்கைத் துணி, காப்பரிசி, அவல் போன்றவற்றை வைப்பதுண்டு. 

சர்க்கரைப் பொங்கல், தேங்காய்ச் சாதம், புளிசாதம், தயிர் சாதம் போன்ற சித்ரான்னங்களை வீட்டில் இருந்தே எடுத்து வந்து வைப்பார்கள். குடும்பத்தில் இருக்கிற அனைவரும் கூடி இருக்கும்போது காவிரித் தாயைப் போற்றி அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். பிறகு, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனம் செய்து விட்டுக் கற்பூரம் காண்பிப்பார்கள். இதே தீபத்தை காவிரிக்கும் காண்பித்து வணங்குவார்கள். 

அதன்பின் தாலிப்பொட்டு, மஞ்சள், குங்குமம், காதோலை, கருகமணி, புஷ்பம் போன்றவற்றை காவிரித் தாய்க்கு அர்ப்பணிப்பர். வாழைமட்டையில் தீபமும் ஏற்றி நீரில் மிதக்க விடுவர்.

காவிரிக்கு நடத்துகிற இந்த வழிபாடு அனைத்து வரங்களையும் வழங்கும். குழந்தைப் பேறு, திருமணப் பேறு கிடைக்கும். அஷ்ட ஐஸ்வர்யமும் தேடி வரும். வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஜோதிடமும் ஆடிப்பெருக்கும்

ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆடிப்பெருக்கன்று வழிபாடு செய்தால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று ஜோதிடமும் சொல்கிறது. நவக்கிரகங்களுள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு சிறப்புகள் உண்டு. 

‘சூரிய பகவான்’ பாரம்பரியத்தைக் குறிப்பவர். பஞ்சபூதங்களுள் ஒன்றாக நீரை வழிபடுவது தமிழர்களின் தொன்றுதொட்ட பாரம்பரியம். அந்த வகையில் காவிரியை வணங்குவதும் ஒரு பாரம்பரிய விழாவே. 

‘சந்திர பகவான்’ என்றாலே குளிர்ச்சி நிரம்பியவர். நதிகளைக் குறிக்கக் கூடிய கிரகம். 

‘புத பகவான்’ - கலைகளுக்கு அதிபதி. சித்ரான்ன நிவேதனம் இவருக்கு விசேஷம்.

ஆக, ஆடிப்பெருக்கன்று முக்கியமான இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மனித உயிர்களுக்கும் ஜீவாதாரமான பயிர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.

இன்றைய தின காவிரி வழிபாட்டால் அனைவருக்கும் மேலே சொன்ன மூன்று கிரகங்களின் ஆசி பரிபூரணமாகக் கிடைக்கிறது. 

என்னென்ன சீர்வரிசைப் பொருட்கள்?

தாலிப்பொட்டு, தான் அணிந்து கொண்ட பட்டு வஸ்திரம், தான் சூடிக்களைந்த மாலை, சந்தனம், குங்குமம், தாம்பூலம், புஷ்பம், பழங்கள் போன்றவை. பெருமாளுக்கு முன் இவை அனைத்தும் வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் காவிரியில் சேர்த்து விடுவார்கள் பட்டாச்சார்யார்கள். இப்படி சீர்வரிசைப் பொருட்களை அர்ப்பணிக்கின்ற வேளையில் கூடி இருக்கின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியை வணங்கி, ‘ரங்கா... ரங்கா’ கோஷத்தை எழுப்புவார்கள். 

ஆடிப்பெருக்கின்போது ஸ்ரீரங்கம் பெருமாளே தன் தங்கைக்கு சீர் கொடுக்கின்ற காரணத்தால், பெரும்பாலானோர் தங்கள் உடன் பிறந்த சகோதரிகளுக்கும் சீர் கொடுக்கின்ற வழக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரிகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து, சீர் வழங்குகின்ற வழக்கம் இன்றைக்கும் இருந்து வருகிறது. 

வீட்டில் இருந்தபடியும்...

காவிரிக்குச் சென்று ஆடிப்பெருக்கைக் கொண்டாட முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்களது இல்லங்களில் இருந்தபடியே இந்த ஆடிப்பெருக்கின் கோலாகலத்தை நீங்களும் ஆனந்தமாக அனுகலாம்.

கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தெய்வங்களை வணங்குவதில்லையா... அதுபோலத்தான்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

ஆடிப்பெருக்கு - விரதம் இருந்து கொண்டாடுவது ஏன்?

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது. அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  
 
நெல்,கரும்பு மற்றும் வேர்க்கடலை முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது. ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.
 
நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் விரதம் இருந்து ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். 
 
ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ?

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை நிறைய பேர் குலதெய்வமாக ஏற்று உள்ளனர். குறிப்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராயர் இன மக்கள் பரிக்கல் லட்சுமி நரசிம்மரை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். அங்குள்ள ராயர் மக்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பரிக்கல் வந்து வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

அதுபோல பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மரையும் நிறைய குடும்பத்தினர் தங்கள் குலதெய்வமாக ஏற்றுள்ளனர். தங்கள் குடும்பங்களில் நடைபெறும் அனைத்து சுப காரியங்களுக்கு முன்பும் பூவரசங்குப்பம் தலத்துக்கு வந்து வழிபாடு செய்ய அவர்கள் தவறுவதில்லை.

சிங்கிரிக்குடி நரசிம்மருக்கு பெரிய அளவில் இத்தகைய குலதெய்வ வழிபாடு ஆதரவாளர்கள் இல்லை. என்றாலும் அத்தலத்துக்கு நரசிம்மரை நாடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

Wednesday, 1 August 2018

வாராகி அன்னையை வணங்கும் முறை

நம்மை காத்து ரட்சிக்கும், இந்த மாபெரும் பேரண்டமெல்லாம் வணங்கும் ‘‘மகாமாயை’’யை நாமும் வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருசில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும்.

உங்கள் லட்சிய வெற்றியை உங்கள் கரத்தில் கொடுத்து நீங்கள் மகிழும் முகத்தை பார்த்து தன்னை வேண்டி வந்தவன் மகிழ்வோடு இருக்கிறான் என ஆனந்த நடனமிட்டு கொஞ்சி மகிழ்ந்து விளையாடுவாள் என் அன்னை வாராகி. நமக்கு தெரிந்ததெல்லாம் அவள் உக்ரமானவள், ஆவேசமிகுந்தவள் என்று தான். ஆனால் அது அப்படி அல்ல. தன்னை மறவாமல் சிந்திக்கும் பக்தனோடு கொஞ்சி விளையாடும் குழந்தை. 

இவள் அன்புக்கு அழகாய் அடிபணிந்து தன் பக்தனை அனைத்து மகிழ்பவள். வாராகி என்றாலே பயத்தை போக்கி அவள் அபயகரம் நம்மை காத்து ரட்சிக்கும், இந்த மாபெரும் பேரண்டமெல்லாம் வணங்கும் ‘‘மகாமாயை’’யை நாமும் வணங்கி வெற்றி பெற வேண்டுமென்றால் ஒருசில விதிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். 

வாராகியை வழிபட அவள் அருளாட்சி உங்களை பின்தொடர செய்ய வேண்டியவை:-

1. வாராகி அன்னை தூய்மையான அன்புக்கு, பக்திக்கு வசப்படுபவள், தன் பக்தனை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள். இப்படி தன் பக்தனையே எந்நேரமும் காத்து அருளும் தேவி அமர ஒரு தூய்மையான இடம் தேவை. இடம் என்றால் மாடமாளிகையோ, அலங்கார தோரணையோ இவையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அவள் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுவது தன் பக்தனின் மனதை மட்டும் தான். அது போதும் அவள் வந்து அமர்ந்து அருள்புரிய. 

2. வாராகியை வழிபட நினைப்பவர்கள் எக்காரணம் கொண்டும் மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது. அது உங்கள் வலிமையை குறைக்கும். 

3. எனக்கு இது வேண்டும் தாயே கொடு என கேட்கலாம். ஆனால் வேறொருவரை கெடு என்று இந்த தேவியிடம் வேண்டக்கூடாது. ஏனெனில் கண்ணிமைபோல் காக்கும் அன்னைக்கு நம் சத்ருபத்தி தெரியாமலா போய்விடும். நமக்கு தீங்கு செய்பவர்களை அவள் பார்த்து கொள்வாள். 

4. வாராகி அருள் நமக்கு இருக்கிறது என்ற கர்வமும், அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது. 

5. வாராகி நமக்கு முன்கூட்டியே நிகழ்வுகளை எண்ணவடிவாக சொல்லி எச்சரிப்பாள். அதை உள்வாங்கும் மனதூய்மை நமக்கு என்றும் வேண்டும். 

6. மற்றவர்களுக்காக உங்கள் பிரார்த்தனை அன்னையிடம் அமைந்தால் இது மிகப்பெரிய வலிமை. அன்னை உடனடியாக அவன் மனதில் குடிகொண்டு நம் ஆசையை நிறைவேற்றுபவள். 

7. வாராகி அன்னை அருளை பெற முக்கிய விதி புறம்பேச கூடாது. மற்றவர் படும் துயரம் கண்டு நாம் அதில் குளிர்காய கூடாது. இந்த எதிர்மறை எண்ணம் இருந்தால் அன்னை அருள் நம்மை என்றைக்கும் நெருங்காது. ஆயிரம் மந்திரங்கள் லட்ச எந்திரமும் வைத்திருந்தாலும் அன்னை பார்வை நம்மீது படாது. 

8. மனத்தில் பொய், வஞ்சம், இதெல் லாம் இருக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் வாராகி அதில் உடனே அமர்ந்து அருள்புரிவாள். 

9. நெறி எனும் முக்கிய விதியை யார் கடைபிடிக்கின்றார்களோ. அவர்களிடத்தில் பிரியம் கொண்டு அன்போடு அருளாட்சி செய்பவள் தான் இந்த வாராகி அன்னை. என்றைக்கும் ஒவ்வொருவர் எண்ணங்கள் பார்த்து வருபவள் தான் இவள். நன்மை எனில் நல வாழ்வும், அதர்மம் எனில் தண்டனை வாழ்வும் வழங்குபவள்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

பெண்களின் திருமண தடை நீக்கும் விஷ்ணு துர்க்கை

சிங்கிரிக்குடி தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு பெண்கள் தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் விலகி உடனே திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகமாகும்.

சிங்கிரிக்குடி தலத்தில் 16 கை நரசிம்மருக்கு எந்த அளவுக்கு ஆற்றலும், அருளும் உள்ளதோ அதே அளவுக்கு அந்த கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் ஆற்றல் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த விஷ்ணு துர்க்கை சன்னதி 5 நிலை ராஜ கோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் முதலில் இருப்பதை பார்க்கலாம். 

மிக சிறிய சன்னதியான இங்கு விஷ்ணு துர்க்கை நடு நாயகமாக வீற்றிருக்கிறாள். அவளுக்கு பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் விலகி உடனே திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகமாகும்.

விஷ்ணு துர்க்கை சன்னதி முன்பு வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தில் நிறைய பேர் குழந்தை வரம் வேண்டிய துணியால் தொட்டில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். விஷ்ணு துர்க்கை முன்பு மனதார பிரார்த்தனை செய்துவிட்டு தொட்டில் கட்டினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஏராளமான பெண்களின் அனுபவமாகும்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

நீலபதாகா மந்திரம்

நீலபதாகா தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை கிடைக்கும்.

நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள். இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். 

சிவப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்தினங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள். இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளன. நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள்.

மந்திரம்:

ஓம் நீலபதாகாயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்ச ஏகாதசி, கிருஷ்ண பட்ச பஞ்சமி.

பலன்கள்: எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡

திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம்

திருப்பட்டூரில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

முன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.

அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.

வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.

அதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.

இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.

முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.

உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.

இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.

இங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.

ஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.

வியாக்ரபாதரின் ஜீவ சமாதி, காசி விசாலாட்சி, காசிவிஸ்வநாதர்

கிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.

இறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.

ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.

மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.

இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்...

🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳🏹🌳

           🔔 *சர்வம் சிவமயம்* 🔔

🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯🌼🔯
  
        என்றும் இறைப்பணியில்

*சிறுமளஞ்சி சுடலையாண்டவர்*
                  *ஆன்மீக குழு*

            *வாட்சப் ல் இணைய*                              

             📲 +919486053609

     ⏰ _ஒழுக்கம்!  கட்டுப்பாடு!_ ⏰
        👳🏻‍♂ *இறைத்தொண்டு!* 👳🏻‍♂

🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡⛺🎡